
26 வகையான பாரம்பரிய சித்த மருத்துவக் குறிப்புகள்
1. உடல் பருமன் குறைய:
சோம்பு 100 கிராம், கடுக்காய் 100 கிராம் எடுத்து இடித்து, பொடித்து, தேவையான அளவு தேன் சேர்த்து காய்ச்சி குடித்து வரவும்.
2. உடல் சூடு தணிய:
அரசன் இலையுடன் கடுப்பு கட்டி சேர்த்து காய்ச்சி குடித்து வரவும்.
3. உடல் எடை குறைய:
தக்காளிப்பழம், தயிர், உப்பு, மிளகு சேர்த்து தினமும் சாப்பிட்டு வரவும்.
4. குழந்தைகள் களைப்பாக இருந்தால்:
செம்பருத்தி பால், பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி கொடுக்க வேண்டும்.
5. ஈரல் நோய் காணப்பட்டால்:
தேனில் நெல்லிக்காயை ஏழு நாட்கள் ஊறப்போட்டு சாப்பிட்டு வர குணமாகும்.
6. தோல் கருமையாக காணப்பட்டால்:
எலுமிச்சை பழத்தோல் பொடியுடன் தயிர் சேர்த்து தேய்த்து குளித்து வர தேகம் நிறம் மாறும்.
7. நீரிழிவுக்கு:
ஆவாரையின் சமூலம், சோம்பு கசாயம் குடிக்கவும்.
8. எலும்பு முறிவுக்கு:
ஆவாரம்பூ பேஸ்ட், உளுத்தம் மாவு சேர்த்து மேலால் கட்டி வரவும்.
9. சிறுநீர் எரிச்சல் இருந்தால்:
ஆவாரம்பூ, பனங்கற்கண்டு சேர்த்து தீநீராக்கி குடித்து வரவும்.
10. மலச்சிக்கல் இருந்தால்:
கடுக்காய் பொடியுடன் சம பாகம் கிராம்பு பொடியும் சேர்த்து கசாயம் செய்து குடிக்க தீரும்.
11. உடல் வலிக்கு:
இஞ்சி சாற்றுடன் புதினா இலை சாறும் சேர்த்து தேய்த்து குளிக்க உடல் வலி போகும்.
12. பாதத்தில் வெடிப்பு இருந்தால்:
வண்டு கொல்லி, மஞ்சள் பொடி, சுண்ணாம்பு, தேன் சேர்த்து குழப்பி போட்டு வர தீரும்.
13. சுவாச அடைப்பு இருந்தால்:
வெண்கடுகை வறுத்து பொடித்து, தேன் சேர்த்து குழப்பி சாப்பிட சுவாச அடைப்பு தீரும்.
14. மூலத்தில் உள்ள புண்ணுக்கு:
மதன காம பூவை பொடித்து எருவாயில் போட்டு வர குணமாகும்.
15. வெள்ளைப்படுதல்:
தண்ணி விட்டான் கிழங்கு, பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை சாப்பிட குணமாகும்.
16. காது வலி, காது புண்ணுக்கு:
தாளம் மடலை நெருப்பு காட்டி பிழிந்தால் நீர் வரும். அதை காதில் போட்டால் வலி தீரும்.
17. வாய்வுக்கு:
துளசி சாறு 50 மில்லி, இஞ்சி சாறு 50 மில்லி சேர்த்து காய்ச்சி காலை, மாலை குடித்து வர வாய்வு தீரும்.
18. தேனீ கொட்டுக்கு:
பிரமத்தண்டு இலை சாற்றை தடவி வர கடுப்பு நீங்கும்.
19. இதய பலவீனத்திற்கு:
தூதுவளை இலையை உலர்த்தி, உப்பு சேர்த்து தயிரில் பதப்படுத்தி, எண்ணெயில் வறுத்து உண்டு வர இதயக் கோளாறு தீரும்.
20. உணவு ருசி இல்லையா?
எலுமிச்சை பழச்சாற்றில் சீரகத்தை ஊற வைத்து, தேவையான போது சுவைத்து சாப்பிட ருசி வரும்.
21. கை, கால் வீக்கத்திற்கு:
பசுவின் சாணத்தை நீர் விட்டு கரைத்து சூடாக்கி ஒத்தடம் கொடுக்க வீக்கம் விரைவில் வற்றும்.
22. முலைக்காம்பில் புண் இருந்து பால் கட்டினால்:
தேன் தடவி வர குணமாகும்.
23. கல்லடைப்பு, நீரடைப்பு உடனே நீங்க:
நாக்குப் பூச்சியை சுத்தம் செய்து உலர்த்தி சூரணம் ஆக்கி, கொடி முந்திரி சாற்றில் 12 கிராம் சேர்த்து குடிக்க கல்லடைப்பு, நீரடைப்பு நீங்கும்.
24. உடல் பொலிவு பெற:
கோரைக் கிழங்கு சூரணத்தை தினம் ஒரு கிராம் தேனுடன் சேர்த்து சாப்பிட்டு வரவும்.
25. உடல் மெலிவு உண்டாக:
பப்பாளிக் காயை சமைத்து உண்டு வர தடித்த உடல் குறையும்.
26. உடல் சதைப்பற்று உண்டாக:
சாம்பல் பூசணிக்காய் சமைத்து மூன்று மாதம் உண்டு வர உடல் எடை அதிகரிக்கும்.
இந்த மருத்துவப் புத்தகத்தைப் பெற:
250 எம்.ஓ. செய்து பெற்றுக்கொள்ளலாம்.
மருத்துவர் கே.பி. பால்ராஜ்
அரசு அனுமதி பெற்ற சித்த மருத்துவர்.

































