வனவிலங்குகளில் பல இனங்கள் அழிந்துவிட்டது. சில விலங்கினங்கள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. உயிரினங்களைப் பாதுகாத்தல், பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் மண்வள ஆரோக்கியம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நாம் உணரவேண்டும். கடவுள் மனிதர்களுக்கு அளித்துள்ள சிந்திக்கும் திறன் அனைத்து உயிரினங்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும். கோவிட் பெருந்தொற்று நோயானது நுகர்வு அடிப்படையிலான கலாசாரம் மனிதகுலத்திற்கு மட்டுமின்றி, பிற உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் கற்பனை செய்து பார்க்க முடியாத சேதத்தை ஏற்படுத்தக்கூடியது என்று மனிதகுலத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.






























