

பேரறிஞர் டாக்டர் ஸக்லூல் ராகிப் முஹம்மத் அல்-நஜ்ஜாரின் பார்வையில்
பேரறிஞர் டாக்டர் அல்-நஜ்ஜார் (Dr. Zaghloul Ragheb Mohamed El-Naggar) புவியியல் (Geology) படித்த எகிப்திய அறிவியலாளர், இஸ்லாமிய அறிஞர் மற்றும் எழுத்தாளர். குறிப்பாக குர்ஆன்–அறிவியல் (Scientific Miracles of the Qur’an) ஆய்வுகளில் உலகளவில் அறியப்பட்டவர். King Fahd University (சவூதி அரேபியா) உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக இருந்தவர்.
குர்ஆனில் உள்ள இயற்கை அறிவியல் குறித்த வசனங்களை நவீன அறிவியலுடன் ஒப்பிட்டு விளக்கும் ஆய்வுகளை நிகழ்த்தியவர். குர்ஆனில் கூறப்பட்டுள்ள பூமியியல், வானியல், கடலியல், உயிரியல் போன்ற குறிப்புகளை அறிவியல் அடிப்படையில் விளக்கினார்.
சூரா அல்-அன்பியா (21:30) வசனத்தின் விளக்கத்தை பேரறிஞர் அல்-நஜ்ஜார் அறிவியல் அணுகுமுறையுடன் விளக்குவதைப் பார்ப்போம்.
அரபி :
أَوَلَمْ يَرَ الَّذِينَ كَفَرُوا أَنَّ السَّمَاوَاتِ وَالْأَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنَاهُمَا ۖ وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ ۖ أَفَلَا يُؤْمِنُونَ
[அவலம் யரல்லதீன கஃபரூ அன்னஸ் சமாவாத்தி வல் அர்ழ கானதா ‘ரத்கன்’ ஃப “ஃபதக்”னாகுமா ‘வஜஅல்னா மினல் மாயி’ குல்ல ஷையின் ஹய்யி அஃபலா யுஃமினூன்.]
தமிழ் பொருள் (சுருக்கம்) :
“நிராகரிப்பவர்கள் கவனிக்கவில்லையா? வானங்களும் பூமியும் ஒன்றாக இணைந்திருந்தன; பின்னர் நாம் அவற்றை பிரித்தோம். மேலும், ஒவ்வொரு உயிரினத்தையும் நாம் தண்ணீரிலிருந்து உருவாக்கினோம். அவர்கள் இன்னும் நம்பமாட்டார்களா?”
1. “வானங்களும் பூமியும் ஒன்றாக இருந்தன” (رَتْقًا – Ratqan)
• Ratq என்ற அரபுச் சொல் ஒன்றாக இணைந்த, பிரிக்கப்படாத நிலை என்று பொருள் கொண்டது.
டாக்டர் நஜ்ஜார் இதற்கு விளக்கம் கூறும் போது : இது ‘பிரபஞ்சத்தின் ஆரம்ப நிலையை’ குறிக்கிறது என்கிறார்.
நவீன அறிவியல் பிரபஞ்சம் குறித்து கூறும் போது Big Bang Theory யை முன் வைக்கிறது :
“ஆரம்பத்தில் முழுப் பிரபஞ்சமும் ‘மிகச் சிறிய, அடர்த்தியான நிலையாக இருந்தது. பின்னர் ஒரு பெரும் வெடிப்பின் மூலம் ‘விண்வெளி, நட்சத்திரங்கள், கிரகங்கள் உருவானது” என்பதுதான் பிக் பாங்க் தியரி.
2. “நாம் அவற்றை பிரித்தோம்” (فَفَتَقْنَاهُمَا – Fataqnahumā)
• Fataq என்ற அரபு வார்த்த்கைக்கு பிரித்தல், திறத்தல், விரிவாக்கம் என்பது பொருள்.
இந்த வார்த்தை…
o வானங்கள் விரிவடைதல்
o பூமி தனித்ததொரு கிரகமாக உருவாதல் – ஆகியவற்றை சுட்டிக்காட்டுகிறது என்கிறார் அல் நஜ்ஜார்.
இன்றைய அறிவியல் இது குறித்து பேசும்போது : ‘”பிரபஞ்சம் இன்னும் விரிவடைந்து கொண்டே இருக்கிறது (expanding universe)’ என்கிறது.
3. வஜஅல்னா மினல் மாயி’ குல்ல ஷையின் ஹய்யி – “ஒவ்வொரு உயிரையும் தண்ணீரிலிருந்து உருவாக்கினோம்.”
டாக்டர் நஜ்ஜார் இந்த வசனத்தை விவரிக்கும்போது : “உயிரின் அடிப்படை தண்ணீர்’’ என்கிறார்.
உயிரியல் அறிவியல் இது குறித்து சொல்லும் போது :
o உயிரணுக்கள் (cells)
o மனித உடல் – ஆகியவை பெரும்பாலும் தண்ணீரால் ஆனது.
o உயிர் முதலில் தோன்றியது நீரில் என்றே அறிவியல் கூறுகிறது.
“குர்ஆன் அறிவியல் புத்தகம் அல்ல. ஆனால், அது அல்லாஹ்வின் படைப்பாற்றலை சிந்திக்க வைக்கும் தவறற்ற சுட்டிக்காட்டுகளை கொண்டுள்ளது” என்பதுதான் டாக்டர் ஸக்லூல் அல்-நஜ்ஜார் கூறும் பொதுவான கருத்து.
மேற்கண்ட இந்த வசனம் :
• அல்லாஹ்வின் வல்லமை
• பிரபஞ்சத்தின் தோற்றம்
• உயிரின் அடிப்படை
ஆகிய Divine Power, Origin of the Universe, Basic of Soul ஆகியவற்றை சுருக்கமாக எடுத்துக் காட்டுகிறது.



































