தீர்வுகளின் தீர்க்கதரிசி

ஆகாயத்தின் நீலம், நீலக்கடலின் ஆரவம், பசுமைப்பட்டுடுத்த நிலப்பரப்பு மழைத்துளிகளும், பனிப்பொழிவும் காற்றும் குளிரும் உதயமும் அஸ்தமனமும் தொடங்கி எத்தனை எத்தனை விசித்திரங்கள் கற்பனையைத் தொட்டு துளிர்க்க வைக்கும் ஆயிரமாயிரம் காட்சிக் கேள்விகளின் கதம்பம் தான் பிரபஞ்சம்.

பிரபஞ்சத்தின் ஒவ்வொரு சராசரங்களுக்கும் உயிரூட்டி ஒவ்வொரு விடியலிலும் சூரியன் உதயமாகிறது. அனைத்துப் படைப்பினங்களுக்கும் ஓய்வும் மயக்கமும் குளுமையையும் அளித்து ஆகாயப் பரப்பை அலங்கரித்து இரவில் நட்சத்திரங்கள் கண் திறக்கையில், புது மண்ணின் மணம் நாசியை அடைந்து மழைக்காலம் வந்தடைகையில் மண்ணைப் பிளந்து விதைகள் முளைத்து வெடிக்கையில் பூக்கள் சிரிக்கையில் காற்றும் மழையும் இலை அசைவுகளும் பறவைகளும் உயிரினங்களும் காதுக்கினிய இசை விருந்தளிக்கையில் நம்மில் பதுங்கியிருக்கும் கவிஞனும் ஓவியனும் அறிவியலாளனும் தேடகனும் தத்துவவியலாளனும் உணர்ச்சி அடையவில்லையா?
இந்த பிரபஞ்சமெனும் அழகிய கலை படைப்பை உணர்த்துவதுதானே ஒவ்வொரு மறைத்துகளும்

எல்லாக் காலங்களிலும் மனித அறிவு முயற்சி செய்ததெல்லாம் இந்த பிரபஞ்சமெனும் புத்தகத்தின் விசித்திரத்தின் சூழலை புலன்களாலும் அதனை வலிமைப்படுத்தும் கருவிகளாலும் வாசித்தெடுக்கத்தான் எண்ணமற்ற அழகியல் கூறுகளை இருட்டுகளாலும் கார்மேகங்களாலும் மழைத்துளிகளாலும் இலைகளாலும் மூடி வைத்திருக்கிறான் இறைவன்.

விசித்திரங்களும் புதிர்களும் புரியாமைகளும் வியப்புகளும் தூணிலும் துரும்பிலும் வியாபித்திருந்தாலும் தனக்குத் தகுமான ஆறுதல் அளிக்கும் தரிசனங்கள் தன் வயப்படாததில் தளர்வுற்ற மனிதனுக்கு எட்டிப்பிடிக்க ஒரு சிறு துரும்பு கூட கிடைக்கவில்லை என இருத்தலியல் சிந்தனையிலும் அன்னியமாயமாதலுக்கும் ஆளாகி சுய உணர்வை இழந்து விடுகிறார்கள்.
யவன ஐதீகத்தின் ப்ரொமித்தங் முதல் இராக் ஆப்கான் போர்களில் இலட்சக்கணக்கான மக்களைக் கொன்றொழித்த பிறகும் இலக்கை அடைய முடியாமல் நிராசையுடன் திரும்பிய சாம்ராஜ்யத்துவ சக்திகளின் இராணுவ வீரர்கள் எட்டியது மேற்கூறிய மனநிலை.

எதிரி யார்? நண்பன் யார்? என்று அறியாமலிருப்பவர்கள் என மாத்யூ ஆர்கால்டு கூறியது போல.

வாழ்க்கையின் மும்முனைகளிலும் மல்லாந்து விழுந்து என் உடம்பெங்கும் குருதி வடிகிறது என்று மேற்கு மேற்கு காற்றிடம் புகார் செய்யும் ஷெல்லி போல.

வாழ்க்கை அபத்தங்கள் மட்டும் நிறைந்த ஒரு காத்திருப்பு எனக் கூறிய அபத்த நாடக ஆசிரியர் சாமுவேல் பக்கட்டும் முன்னிலைப்படுத்துவது இந்த இயலாமையைத் தான்.

ஆனால் இதற்கு மாற்றாக பிரச்சினைகளுக்கு தற்காலிகமாக தீர்வுகளை முன்வைத்தவர்களை வரலாறு புரட்சியாளர்கள் என வாழ்த்துகிறது.

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், ஜுனியர் காந்தி, புக்கர் டி வாஷிங்டன், ஸ்பினோபா வினோபாவா, அம்பேத்கர், பெரியார் என பட்டியலிடலாம். ஆனால் இவர்கள் முன்வைத்த கருத்தியல்களும் தீர்வுகளும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையுமா என்றால் அது கேள்விக்குறியாகவே நிற்கிறது.
ஆனால் மானுடம் தேடிய அந்த தீர்வுகளுக்கு எல்லாம் தீர்வுகளை வாழ்ந்து வழிகாட்டியவர் தான் இறைத் தூதர்.