‘வெறுப்பு அரசியலை ஆயுதமாகப் பயன்படுத்தி அதிகாரத்தை கைப்பற்றியவர்கள், நாடு முழுவதும் மக்களை அச்சத்தின் பிடியில் வைத்து ஆட்சியை நடத்தி வருகின்றனர். ஒரு அமைப்பாக செயல்பட்டு வெறுப்பை பரப்பும் அவர்கள், வெளிப்படையாக வன்முறையைப் பரப்புகின்றனர். சட்டத்தின் ஆட்சிக்கே சவால் விடுக்கும் வகையில் செயல்படுகின்றனர்.
பாஜக அரசிடம் இருந்து இந்த அயோக்கியர்களுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது. அதனால்தான் அவர்களுக்கு இதுபோன்ற துணிச்சல் கிடைத்துள்ளது. சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் தொடர்வதையும், அரசு இயந்திரம் பார்வையாளராக மவுனம் சாதித்தும் வருகிறது. இதுபோன்ற கட்டுக்கடங்காத செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும். வகுப்புவாதம் மற்றும் மக்களின் உரிமைகள் மீதான எந்தவொரு தாக்குதலும், அரசியலமைப்பின் மீதான தாக்குதலாகும். பாஜக எவ்வளவு முயற்சி செய்தாலும், வெறுப்புக்கு எதிராக இந்தியாவை ஒன்றிணைக்கும் வரலாற்றுப் போரில் வெற்றி பெறுவோம்’