


தீங்குகளிலிருந்து ஏன் அல்லாஹ் நம்மைக் காப்பது கிடையாது?.. என்று என் மகன் என்னிடம் கேட்கிறான் ‘கழா கத்ர்’ தொடர்பில் என் மகன் என்னிடம் கேட்ட கேள்விகள் என்னைத் திகைக்கச் செய்துவிட்டது.
- பூகம்பம், குண்டு வெடிப்புகள், வெள்ளப்பெருக்கு ஆகியவற்றில் சிக்குண்டு மனிதர்கள் மரணிக்கிறார்களே.. அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?
- ஒருவன் ஏழையாகவே வாழ்கிறான்.. அவன் செய்த குற்றம் என்ன?
- ஏன் உலகில் தீங்குகள் இருக்கின்றன?
- ஏன் அல்லாஹ் நம்மைத் தீங்குகளை விட்டும் பாதுகாப்பதில்லை?
- நான் சட்டங்களை மதிப்பவன், வீதி ஒழுங்குகளை மீறுவதில்லை, யாருக்கும் தீங்கிழைப்பதில்லை.. இப்படியெல்லாம் இருக்க ஏன் எனக்குச் சோதனைகள் ஏற்படுகின்றன?
நான் கூறியவற்றில் அல்லாஹ்வின் கருணையும், நீதியும் எங்கிருக்கிறது? இவற்றை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமலிருக்கிறதே!
அதற்கு அத்தந்தை : மகனே! நீங்கள் குறிப்பிட்ட அனைத்துக் கேள்விகளும் பெரியவர்களிடம் கூட அடிக்கடி எழக்கூடியவை… அவை முக்கியமானவை. முன்னைய தத்துவியலாளர்கள், சிந்தனையாளர்களிடமும் இக்கேள்விகள் இருந்துள்ளன. நல்லதும் கெட்டதும் முன்பிருந்தே உள்ளவை.. நீங்கள் கூறிய அனைத்துப் பேரழிவுகளும் முன்பிருந்தே இருக்கின்றன… அது மனிதனது செயலால் நிகழ்பவையாக இருக்கலாம் அல்லது கழா கத்ரில் உள்ளவையாக இருக்கலாம்.
என்றாலும் விடயத்தின் ஒரு பகுதியை மாத்திரம் பார்த்துவிட்டு அதன் முழுமைக்குமாக தீர்ப்பைக் கொடுப்பது பிழையல்லவா?!
சிறுவன் : நீங்கள் என்ன கூற வருகிறீர்கள்?
தந்தை: உதாரணமாக உங்களுக்குப் பல் வலி ஏற்படுகிறது.. நீங்கள் பல் வைத்தியரிடம் செல்கிறீர்கள். அவர் வலியை இல்லாமல் செய்ய வலியிருக்கும் பல்லினைக் கழற்றுவார். நீங்கள் வலியினைப் பற்றி யோசிக்காது அவர் பல்லினைக் கழற்றிவிட்டார் என்பதற்காக வைத்தியரை அநியாயக்காரர் என்று சொல்ல முடியுமா? அல்லது இரக்கமற்ற கொடூரன் என்று நினைக்கலாமா?
நீங்கள் அப்படிச் சொன்னால் அது பிழையானதாகும்.
உங்களது பல்லைக் கழற்றுவது உங்களுக்க வலியை ஏற்படுத்தும். உண்மைதான்.. என்றாலும், அவ்வலியினை அவர் உங்களுக்குத்தரக் காரணம் நீங்கள் வலியில்லாமல் இருக்கவே. பல்லைக் கழற்றும்போது ஏற்படும் வலி இவ்விடயத்தின் ஒரு பகுதி. ஆனால், இனிப்புப் பண்டங்களை அதிகம் சாப்பிட்டு பல் வலி வரக் காரணமாக அமைந்தது நீங்கள்.
அந்த மொத்தமான பார்வையை பார்க்காமல் விட்டுவிடுகிறீர்கள். பல்லைக் கழற்றியதன் பின்னர் ஏற்படும் வலியில்லாத நிலையானது| பல்லைக் கழற்ற முன்னர் இருந்த நிலையை விட ஒப்பீட்டளவில் மிகவும் சிறிய விடயமாகும்.
நலவு என்பது அடிப்படை வலி, தீங்கு என்பன விதிவிலக்கு.. இப்படித்தான் உலகிலுள்ள தீங்குகளையும் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
சிறுவன்: இவ்விடயத்தை இன்னும் விளங்கிக்கொள்ள எனக்கு இன்னுமொரு உதாரணத்தைக் கூற முடியுமா?
தந்தை: எளிமையாக ஒன்றைச் சொல்கிறேன்.. வாகனத்தில் இருந்து வெளியேறும் புகையை மாத்திரம் நாம் பார்த்தால் அது தீங்கானதாகத்தான் தெரியும். ஆனால், வாகனத்தின் இயக்கதின் போது அது இன்றியமையாதது என்பதை விடயத்தை முழுமையாகப்பார்க் கும்போது நாம் புரிந்துகொள்ளலாம்.
சிறுவன்;: ஆஹ்! நான் இப்போது நீங்கள் கூற வருவதை விளங்கிக்கொண்டேன். அப்படியாக இருந்தால் எல்லா தீங்குகளுக்குள்ளும் ஏதோ நலவிருக்கும் அப்படித்தானே?!
தந்தை: அப்படித்தான். வாழ்வில் இடம்பெறும் நிகழ்வுகள் குறித்த முஸ்லிம்களின் பார்வை இப்படித்தான் இருக்கும். நாம் “ கழா கத்ரை” விசுவாசிக்க வேண்டும். வாழ்வில் அடிப்படை நலவே ஒழிய கெடுதி அல்ல.
உறுப்புக்கள் அனைத்தும் சீராகப் பிறக்கும் குழந்தைகள்தான் அடிப்படை.. அங்கவீனமான குழநதைகள் விதிவிலக்கு. இயல்பு நிலையில் அமையும் வாழ்க்கைதான் அடிப்படை, பேரழிவுகள் | எப்போதும் விதிவிலக்குகளே. ஹிழ்ர் எனும் நல்லடியாருடன் மூஸா (அலை) அவர்கள் சந்தித்த நிகழ்வு நமக்கு இதனை இன்னும் தெளிவாக விளங்கப்படுத்தும்.
சிறுவன்: இப்போது நான் விளங்கிக்கொண்டேன்.
தந்தை: முஸ்லிம்களாகிய நாம் சில விடயங்களை விசுவாசித்திருக்கிறோம். எங்களில் சிலர் சிலருக்கு எதிரி, மனிதனுக்கு வாழ்வில் சோதனை இருக்கிறது, தீங்கானவறறில் மனிதன் பொறுமையுடன் இருந்து அதில் வெற்றி பெறுகிறானா? அல்லது தோல்வியடைகின்றானா? ஏன்று சோதிக்கப்படுகின்றான்.. இப்படியனைத்தையும் நாம் விசுவாசிக்கிறோம். நலவும், தீங்கும் அல்லாஹ்வின் மூலமே இடம்பெறும்.
சிறுவன்: இப்போது எனக்கும் இன்னும் இது தெளிவாகிறது.
தந்தை: உலகில் உள்ள தீங்குகள் குறித்த உங்களது பார்வை இன்னும் தெளிவாக வேண்டும் என்றிருந்தால், விடயங்களை முழுமையாகப் பார்க்க வேண்டும். அதாவது, உலகம் என்பது வாழ்வில் ஒரு பகுதி. அதுவே முழு மொத்தமான வாழ்க்கை அல்ல.
ஒரு ஏழை இவ்வுலகில் கவலையான வாழ்வைக்கொண்டவனாக இருக்கலாம். ஆனால், மறுமையில் அவன் மகிழ்ச்சியானவனாக இருக்கக் கூடும். வாழ்வின் நிகழ்வுகள் தொடர்பில் நாம் தீர்ப்புக்கூறும் முன் இந்தப் பார்வை நம்மிடத்தில் இருக்க வேண்டும்.
சிறுவன்: இப்போது நான் விடயத்தை விளங்கிக்கொண்டேன்.. உலக நிகழ்வுகளுக்குள் இருக்கும் அல்லாஹ்வின் அருளையும் நீதியையும் எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பது தெரிகிறது.





































