உலக மனந நான் (Wond Mental Heath Day) அக்டோபர் மாதம்20 ஆம் தேதி உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது.
மனித சமூகத்தில் பெருகி வரும் மனரீதியான பாதிப்புகள், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த மனநல நாள் கடைப்பிடிக்கப்படுகிது.
நாடு, இனம், மொழி தாண்டி மனநலக் கோளாறுகள் அனைவருக்கும் பொதுவானவை. மனநோய்கள் மிகப் பெரிய பொருளாதார இழப்புகளை உலகம் முழுக்க ஏற்படுத்துகின்றன.
அறிவியலின் வளர்ச்சி, தொழில் நுட்பப் புரட்சி புதிய கண்டுபிடிப்புகள் மின்னனுப் பொருட்களின் பெருக்கம் போன்றவைகள் மனித வாழ்வில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி மனிதனின் மனதிலும் அவனது சிந்தனையிலும் அவனால் கட்டுப்படுத்த இயலாத மாற்றங்களை நிகழ்ந்துகின்றன.
வாழ்வில் சுயத்தை மறந்து வெளிக் கவர்ச்சியை நோக்கி நகர்ந்த எல்லா சமூகத்திலும் நாடுகளிலும் இந்த பாதிப்புகள் அறிகம் உள்ளன. குறிப்பாக இந்திய மக்களிடையே பெருகி வரும் மனரீதியான பாதிப்புகள் மிகுந்த வேதனை அளிக்கின்றது.
பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், ஏழை, பணக்காரன் என்று யாரையுமே விட்டு வைக்கவில்லை இந்த மன அழுத்தம் என்ற இடர்பாடு.
மனித உள்ளங்கள் இப்படி பலகீனமாகிப் போய் பலவிதமான பாதிப்புகளைச் சந்திப்பதற்கு அடிப்படையான காரணம் நமது கல்வி முறையும். நம் மீது திணிக்கப்படுகின்ற மேலை நாட்டு வாழ்க்கை முறையும்தான்.
இந்தியாவில் பெருகி வரும் தற்கொலைகள் குறித்து ஆய்வு செய்தாலே மனநல பாதிப்புகளின் வேகம் எந்த அளவிற்கு உள்ளது என்று தெரிந்து விடும். அதற்கான காரணமும் புரிந்து விடும்.
உலகில் ஒரு ஆண்டுக்கு 8 இலட்சம் மக்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். உள்ளத்தின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகவில்லை என்பதற்காக ஒவ்வொரு 40 வினாடிகளுக்கும் ஒருவர் உயிரை மாய்த்துக் கொள்கிறார். இதில் இந்தியாவின் பங்கு 21 விழுக்காடு. அதிலும் தற்கொலை செய்து கொள்பவர்களில் 44 விழுக்காட்டினர் இளைஞர்களே. அதில் 80 விழுக்காட்டினர் படித்தவர்களே என்று புள்ளி விவரங்கள் கூறுகிறது.
இந்தியாவிலேயே எழுத்தறிவு அதிகமாக உள்ள தென்னிந்திய மாநிலங்களில்தான் தற்கொலைகள் அதிகம் நடக்கின்றன. கல்வியில் பின் தங்கியுள்ள வட இந்தியாவில் குறிப்பாக பீகாரில் தற்தொலை விழுக்காடு குறைந்த அளவிலேயே உள்ளது. பெருநகரங்களில் நாட்டிலேயே சென்னையில்தான் தற்கொலைகள் அதிகம் நடைபெறுகிறது.
அதிக கல்வியறிவு கிடைக்கப்பெற்ற மாநிலங்கள் என்று பெருமை பேசும் அதே நேரத்தில் அற்ப காரணங்களுக்காக உயிரை மாய்த்துக் கொள்பவர்களும் இங்கேதான் அதிகம் என்றால் கல்வி என்ன மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது?
கல்வி என்ற பெயரில் இளைய தலைமுறைக்கு நாம் எதை கற்பித்துக் கொடுக்கிறோம் என்பதை அலசிப் பார்க்க வேண்டும்.
கல்வி கற்றவர்களிடம் சொகுசு வாழ்விற்கான ஏக்கம் அதிகரித்து; கிடைப்பதில் திருப்தி கொள்ளாத மனதால் ஏமாற்றமும் அதிகரித்து இறுதியில் அதிகமானோர் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று மனநல மருத்துவர்களும், ஆலோசகர்களும் கூறுகின்றனர். பணம் சம்பாதிப்பதற்கான கருவிதான் கல்வி என்ற சிந்தனையின் விளைவுகள் இவை.
வாழ்வில் சோதனைகள் ஏற்படும் போது அவற்றை பொறுமையாக எதிர்கொள்வது எப்படி என்பது போதிக்கப்படவில்லை. அதேபோல எதிர்பார்ப்புகள் இல்லாமல் இயற்கையாக வாழ்வதே இனிமையான வாழ்வு என்பதும் போதிக்கப்படவில்லை. இப்படி வாழ்வின் எதார்த்தத்தை உணர்த்தாத கல்வியின் மூலம் நாமே நமது எதிர்கால சந்ததியை மனச்சிக்கலில் தள்ளுகிறோம்.
நவீன கல்வியில் வளர்ந்த நாடுகளில்தான் உலகில் அதிகமான தற்கொலைகள் நடக்கின்றன.
இன்றைய நவீன அறிவியல் கல்வியை மட்டும் கற்றவர்களின் நிலை பரிதாபத்திற்குரியது என்பதை புள்ளி விவரங்கள் உணர்த்துகின்றன.
மனம் உடலின் ஒரு அங்கமாக இருப்பதுபோல சமூகத்தின் அங்கமாகவும் இருக்கிறது.
உடல் ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் ஆரோக்கியமும் மன ஆரோக்கியத்தின் வழியாகவே கிடைக்கும்.
கல்வியின் இலக்கு தேர்வுகள், மதிப்பெண்கள், சுய மரியாதை என்பதோடு நின்றுவிடக் கூடாது. வாழும் முறை, நற்பண்புகளில் உறுதி, சமுதாயப் பொறுப்பு போன்றவற்றைப் புகட்டுவதாகவும் இருக்க வேண்டும்.
கல்வி, அறிவை மட்டுமல்ல பணிவையும், பண்பையும் வளர்க்க வேண்டும். மாணவர்களிடத்தில் நேர்மறையான ஆளுமையை உருவாக்க வேண்டும். கல்வி மூலம் மனதை பண்படுத்தி பக்குவப்படுத்தினால் மட்டுமே சமூகம் பயனைடையும்.

































