


உள்ளத்தூய்மையும், உடல் தூய்மையும் இரண்டுமே இறை நம்பிக்கைக்கு மிக முக்கியமென இஸ்லாம் சொல்கிறது. உடல் சுத்தத்தை பற்றிப் பேசும் சில வழிபாட்டுமுறைகள் உள்ள சுத்தத்தைப் பற்றி பேசாது. உள்ளம் பரிசுத்தமாக இருக்கவேண்டும் என சொல்கின்ற சில வழிமுறைகள் உடல் சுத்தத்தை பற்றி எதுவுமே கூறாது.
காரணம் சுத்தம் என்பது வாழ்க்கைக்கு மிக மிக அவசியம் என மக்களுக்கு போதிக்கின்றது.
உடலின் அசுத்தத்தை குளிப்பின் மூலமும், ஒழுவின் மூலம் உள்ளத்தின் அசுத்தத்தை தொழுகையின் மூலமும் போக்கவேண்டும். முறையாக நம்மை விட்டு நீங்க வேண்டுமெனவும் நம்மை சிந்தித்து புரிய வைக்கிறது.
சுத்தம் இறைநம்பிக்கையின் பாதி என்பது நபிமொழி இறைநம்பிக்கையின் கடமை தொழுகை அந்த தொழுகைக்கு கட்டாயம் தூய்மை. என அழகாக கூறி துய்மையின்றி தொழுகை கிடையாது தூய்மையே தொழுகைக்கான திறவுகோல் என்கிறது திருமிதியின் நபிமொழி.
பக்தி என்ற பெயரில் பல மாதங்கள் குளிக்காமல் இருப்பதும் சுத்தப் படுத்திக் கொள்ளாமல் சிலர் வாழ்வதையும் நாம் வாழ்கின்ற இந்நாட்களில் பார்க்கிறோம். இவ்வாறு வாழ்வதை இஸ்லாம் வன்மையாக கண்டிகிறது. சுத்தம்தான் இறை உவப்பிற்கு முக்கியமான இடத்தை தருகிறது.
கருவரை முதல் கபர்ஸ்தான் வரை உச்சி முதல் உள்ளங்கால் வரை விழிப்பது முதல் இரவு கண் அயர்வது வரை தூய்மைக்கான வழிமுறைகளைக் கூறுகிறது.
உறக்கத்தில் இருந்து விழிப்புக்கு வந்தவர் தண்ணீரால் கைகளை (மூன்று முறை) சுத்தம் செய்ய சொல்கிறது, ஏனெனில் உறக்கத்தில் கைகள் எங்கிருக்கிறது என அவர்களுக்குத் தெரியாது என ஒரு நாளின் முதல் வேலையாக சுத்தத்தை சொல்லிக்கொடுக்கிறது.
தொழுகையை செயல்படுத்த தூய்மை முக்கியம் என நமக்கு கற்றுத் தந்து உடல் சுத்தத்தை குளிப்பின் மூலமா? அல்லது ஒளுவின் மூலமா? என கேள்வியினை நம்முன் வைத்து அதனை நடைமுறைப் படுத்திய பின் தொழுகையை செயல்படுத்த வலியுறுத்துகிறது.
தொழுகைக்கு கடமையாக இருக்கும் தூய்மையினால் உடல் நோய்க்கும் பல பயன்கள் இருக்கிறது என மருத்துவ உலகம் இன்று பல விளக்கங்கள் தருகிறது.
இக்கட்டுரையின் நோக்கம் : “தூய்மையின்” மகத்துவத்தை கூறி வெறும் மருத்துவப் பயனுக்காக தொழுகையினை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காக இல்லை. தொழுகைக்கான ஒழுக்கங்களை முறையாக நாம் கடைபிடித்தால் நாம் அடைகின்ற நன்மைகளை தெரிந்து கொண்டு மேலும் அதிக ஈடுபாடுடன் நாம் அதனை செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணம்தான்.
இரண்டு கைகளின் மணிக்கட்டு வரை தண்ணீரில் விட்டோ அல்லது தயம்மம் என்ற சுத்தத்தின் மூலம் நமது உள்உறுப்புகளின் வேலை தடையின்றி செயல்படுவதற்கும், உடலில் வலிகள் குறைவதற்கும், படபடப்பு, மலச்சிக்கல், உடல் உஷ்ணம், தொண்டை கரகரப்பு, வறட்டு இருமல் போன்றவைகள் சரி ஆகும்.
வாய் கொப்பளிப்பு பற்கள் சுத்தம் செய்வதால் நமது பற்களில் தங்கியுள்ள உணவுகளின் எச்சங்கள் வெளியாகி பல், மற்றும் ஈறுகள் பலம் பெற்று கிருமிகள் அழிக்கப்பட்டு, வாய் துர்நாற்றம் மற்றும் பற்கள் பலவீனம் அடைதல் போன்றவை சரியாகும்.
மூக்கிற்கு நீர் விட்டு சுத்தம் செய்வதினால் நமது நாசிகள் தூசிகள் தங்காமல் கிருமிகள் முறையாக வெளியேற்றப்பட்டு மூக்கில் கட்டி, மூக்கடைப்பு, மூக்கில் சதை வளர்தல் போன்ற நோய்கள் ஏற்படாமல் இருப்பதற்கு வலது புறமும் இடது புறமும் சுவாசக்காற்று முறையாக உள்ளே சென்று ”சுவாசப்பை” (நுரையீரல்) ஆரோக்கியமாகச் செயல்படுகிறது..
முகத்தை முறையாக சுத்தம் செய்வதினால் கண் எரிச்சல், கண்வலி, கண்பார்வை தொடர்பான இடையூறுகள் ஏற்படாமல் இருப்பதற்கும் முகவாத பிரச்சனைகள் சிறுநீரகப் பையில் சக்திப் புள்ளிகளும் பித்தப்பை இரைப்பை போன்ற உறுப்புகளின் புள்ளிகளும் தூண்டப்பட்டு உடல் உஷ்ணத்தையும் மன அமைதியும் உண்டாக உதவி செய்யும்.
முழங்கை வரை கைகளை சுத்தம் செய்யும் போது உடலுக்கு எதிர்ப்பு சக்தி உண்டாகி ஜீரணமும் மூச்சுவாங்குதல் நுரையீரல் தொடர்பான தொந்தரவுகள் தோல் வியாதிகள், வாந்தி, இருமல், குமட்டல், கைவலி போன்ற போன்றவைகள் சரியாக பணிபுரியும்.
தலையினை தடவிக் கொள்வதினால் உச்சந்தலையில் இருக்கின்ற ஆற்றல் புள்ளி தூண்டப்பட்டு மன அமைதிக்கு சக்திடுகிறது தூக்கம் நன்றாய் வருவதற்கும் கழத்து பகுதியினை தடவி விடுவதால் மூலம் தூக்கத்திற்கும் நரம்பு தொடர்பான சங்கடங்கள் உண்டாகமல் இருப்பதற்கும் அங்கு உள்ள புள்ளிகள் உதவி செய்யும்.
கணுக்கால் முதல் அடிப்பாதம் வரை முறையாக தேய்த்து அழத்தி நன்றாக சுத்தம் செய்வதினால் நமது ஆறு உள்உறுப்புகள் அதாவது மண்ணீரல், இரைப்பை, கல்லீரல், பித்தப்பை, சிறுநீரகம், சிறுநீர்ப்பை ஆகிய ஆறு உறுப்புகளிலும் நன்றாக சக்திப் புள்ளிகளில் மூலம் தூண்டப்பட்டு நம் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவி செய்யவும்.
இவைகளை நாம் புரிந்துக் கொள்வதற்கு தோலின் பலனை தெரிந்தாலே போதுமானது. நமது தோலில் இலட்சக்கணக்கான வியர்வை சுரப்பிகள் இருக்கிறது. இங்கு வியர்வையின் மூலம் தோலில் சேர்ந்துள்ள உப்புகள் தங்காமல் வெளியேறிவிடுகிறது.
அதனால் இரத்தம் ஓட்டம் அதிகரிக்கிறது செல்கள் சுறுசுறுப்பாகி இரத்தசெல்கள் வெளியேறி இரத்த குழாய்கள் நன்றாக விரிவடைந்து தோல்களில் சுருக்கங்கள் நீங்கி இளமையுடன் நல்ல பொலிவுடன் இருப்பதற்கு நமது தோலில் உள்ள சக்திப் புள்ளிகளில் நன்றாக தூண்டப்பட்டு அதன் மூலம் ஆரோக்கியம் பெற்றுவதற்கும் தோல்கள் தான் காரணமாக இருக்கிறது.
அந்த தோல்களை தூண்டி ஆரோக்கியமாக வாழ்வதற்கு முழு ஈடுபாட்டுடன் இறைவனின் கடமையினை செய்வதற்கும் தூய்மையை கடைபிடிப்போம் தொழுகையை செயல்படுத்துவோம்




































