இஸ்மாயில்அல்- ஜசாரி

இஸ்மாயில் அல் -ஜசாரி அவர்கள் இஸ்லாமிய பொற்காலத்தில் வாழ்த்த ஒரு தலை சிறந்த பல்துறை வல்லுநர் ஆவார். இவர் 1136 ஆம் ஆண்டு மெசொப்பொத்தேமியா பகுதியில் பிறந்தவர் இது இன்றைய வடமேற்கு ஈராக், வடகிழக்கு சிரியா மற்றும் தென்கிழக்கு துருக்கி ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. இவர் பிறந்த ஊர் குறித்த சரியான தகவல்கள் இல்லாதபோதும் இவரின் பெயரில் உள்ள அல் – ஜசாரி என்பதை கொண்டு இவரின் ஊர் ஜசாரியாக இருக்க வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

இவரை பற்றிய வரலாற்று குறிப்புகள் பெரிதாக இல்லாத போதும் இவர் எழுதிய புத்தகத்தின் தொடக்கத்தில் தன்னை பற்றிய சிறு அறிமுகத்தை குறிப்பிட்டுள்ளார். அதன் படி இவரின் தந்தை ஆர்ட்டுகுலஸ் அரண்மனையில் தலைமை பொறியாளராக இருந்ததாகவும் தானும் பின்னாட்களில் தன் தந்தையை போலவே தலைமை பொறியாளராக முப்பது ஆண்டுகள் பணியாற்றியதாக கூறியுள்ளார் 

அல் – ஜசாரி அவர்களின் குடும்பம் கைவினை பொருட்களை செய்வதை பூர்விகமாக கொண்டது. இந்த கலையை ஜசாரி அவர்கள் தனது கண்டுபிடிப்பில் மிக நேர்த்தியாக பயன்படுத்தியிருப்பார்.

இவரின் கண்டுபிடிப்புகள் பெரும்பாலும் கணக்கீட்டு முறைகளை பின்பற்றாமல்  பிழை திருத்த சுழற்சி (trail and error) எனும் முறையை அடிப்படையாக கொண்டு இருந்தது. இவரின் சில சாதனங்கள் இவருக்கு முன்னாள் வாழ்த்த ஆய்வாளர்களானபனு மூசா (கிபி 873), முஹம்மது அல் – சகானி (கிபி 990), ஹிபாதுல்லாஹ் இப்னு அல் – ஹுசைன் (கிபி 1139) ஆகியோரின் கண்டுபிடிப்புகளில் இருந்து தழுவி செய்ததாக தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

1206 ஆம் ஆண்டு இவர் எழுதிய Knowledge of Ingenious Mechanical Device ( كتاب في معرفة الحيل الهندسية )  எனும் புத்தகம் இவரின் எல்லா புத்தகங்களையும்  விட பிரபலமானது. இதில் தனது 50 கண்டுபிடிப்புகளை எவ்வாறு உருவாக்குவது என்று விவரித்துள்ளார்.

ரோபோட் எனும்  வார்த்தை ஐசக் ஹஸிமோ அவர்களால் 1941ஆம் ஆண்டு முன்மொழியப்பட்டிருப்பினும். 1206 ஆம் ஆண்டு வாழ்த்த அல் – ஜசாரி அவர்கள் “ரோபோடிக்ஸ்ன் தந்தை” என்று நவீன கால மேற்கத்திய அறிஞர்கள் இவரை பாராட்டுகின்றனர். 1206 ஆம் ஆண்டில் அப்படி என்ன தானியங்கி ரோபோவை இவர் உருவாக்கினார் ?. 

இஸ்மாயில்அல் ஜசாரிஅவர்களின்கண்டுபிடிப்புகளில்சில 

  1. நவீன நீர் இறைக்கும் இயந்திரம்
  2. தானியங்கி இயந்திரங்கள் 
  3. தானியங்கி கடிகாரம்  

மேற்கண்டஇயந்திரங்களுக்குதேவையானபுதியவகையானஇயந்திரபாகங்கள் 

  1. கேம் சாஃப்ட் (நேரியல் இயக்கத்தை [linear motion] சுழல் இயக்கமாக [rotary motion] மாற்றும் இயந்திரம்)     
  2. கிரான்க் சாஃப்ட் (நேர் கோட்டு இயக்கத்தை [straight line motion] சுழல் இயக்கமாக [rotary motion] மாற்றும் இயந்திரம்)
  3. செக்மென்டல் கியர் 

1)நவீனநீர்இறைக்கும்இயந்திரம் :-

  1. வால்வுகள் மற்றும் பரிமாற்ற பிஸ்டன் இயக்கத்துடன் கூடிய இரட்டை – செயல் உறிஞ்சும் பம்ப்
  2. சகியா செயின் பம்பு

i) வால்வுகள்மற்றும்பரிமாற்றபிஸ்டன்இயக்கத்துடன்கூடியஇரட்டை செயல்உறிஞ்சும்பம்ப் (பார்க்க: – படம் 1.1, 1.2)

இவை நாம் பெரும்பாலும் பார்த்த பழங்கால நீர் இறைக்கும் இயந்திரம் போல் அல்லாமல் நவீனத்துவம் கொண்டது இந்த நீர் இறைக்கும் இயந்திரம் தொடக்க கால என்ஜின்கள் போன்ற அமைப்பை கொண்டது.

இது போன்ற நீர் இறைக்கும் இயந்திரத்தினை கொண்டு டமாஸ்கஸ்ஸில் உள்ள இஸ்லாமிய வரலாற்றின் ஒருங்கிணைந்த மருத்துவமனையான பீமாரிஸ்தான மருத்துவமனைக்கு யஜீத் நதியில் இருந்து நீர் வழங்கும் முறையை இஸ்மாயில் அல் – ஜசாரி ஏற்படுத்தி கொடுத்திருந்தார்

படம் 1.1 :- இரட்டை – செயல் உறிஞ்சும் பம்பின் முப்பரிமாண விளக்கப்படம்

படம் 1.2 :- இஸ்மாயில் அல் – ஜசாரி அவர்கள் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள இரட்டை – செயல் உறிஞ்சும் பம்ப்

தோற்றம் 

நீரின் வேகத்தில் சுழற்றப்படும் ஒரு சுழலும் சக்கரம் போன்ற அமைப்பு அவை சுழலுவதற்காக பல பலகைகளை இடை இடையே சொருகப்பட்டுள்ளது. சுழலும் சக்கரத்துடன் சேர்ந்து இணைக்கப்பட்ட மற்றொரு சிறிய சுழலும் சக்கரம். அவற்றின் இருபுறமும் பிஸ்டன் போன்ற பகுதி இணைக்கப்பட்டுள்ளது. பிஸ்டனுடன் திறந்து மூடும் படியான அமைப்பை கொண்ட இரண்டு மரத்தாலான மூடி. பித்தலயினால் ஆனா குழாய் போன்ற அமைப்பு   

செயல்படும்விதம் 

நீரின் வேகத்தை கொண்டு சுழலும் பெரிய சக்கரம் வடிவிலான அமைப்பு அதனுடன் சேர்ந்த சிறிய சக்கரத்தையும் சுழற்றுகிறது. சிறிய சக்கரம் ரோட்டரி  மோஷன் எனப்படும் சுழற்சி இயக்க செயல்பாட்டை கொண்டது. தன்னுடன் இணைக்கப்பட்டுள்ள காம்சாஃப்ட் (camsaft) மூலம் பிஸ்டனை இயக்க செய்கிறது பிஸ்டன் வலது மற்றும் இடது பக்கமாக இயங்குவதன் மூலம் காற்றின் துணை கொண்டு நீரை கீழ் இருந்து மேலாக தள்ளுகிறது.

2)தானியங்கிஇயந்திரங்கள்:-

  1. பணியாட்களை போன்று நீர் நிரப்பி தரும் தானியங்கி இயந்திரம்
  2. தானியங்கிஒளுசெய்யும்இயந்திரம்
  3. தானியங்கிகைகழுவும்இயந்திரம்
  4. தானியங்கி இசை இசைக்கும் இயந்திரம் 

தானியங்கி ரோபோக்கள் 20ஆம் நூற்றாண்டுக்கு பின் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று நாம் நினைத்து கொண்டு இருக்கிறோம். இது தவறு தானியங்கி ரோபோக்களுக்கான கண்டுபிடிப்பு கிமு 5 ஆம் நூற்றாண்டிலிருந்து துவங்குகிறது. 

கிமு 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த லை யுகோ (Lie Yukou) எனும் சீன எழுத்தாளர் தனது லைஜி (Liezi) எனும் புத்தகத்தில் தானியங்கி இயந்திரம் பற்றிய குறிப்புகளை எழுதியுள்ளார். 

கிபி 10 ஆம் நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்த ஹீரோ ஆப் அலெக்ஸாண்ட்ரியா என்று அழைக்கப்படும் கிரேக்க கணிதவியல் மற்றும் பொறியியல் வல்லுநர் தாமாக திறந்து மூடும் வகையிலான கோவில் கதவுகள், விருந்தினர்களுக்கு தானாக வைன் (wine) மற்றும் பால் போன்றவற்றை நிரப்பி கொடுக்கும் இயந்திரம், தானியங்கி போர் கருவிகள் போன்றவற்றை கண்டுபிடித்துள்ளார். இவரின் கண்டுபிடிப்புகள் 1903 ஆம் ஆண்டு ஐந்து தொகுதிகளாக [The book About automata by Hero of Alexandria (1589 edition)] என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.

கிபி 1206 ஆம் ஆண்டு வாழ்த்த இஸ்மாயில் அல் – ஜசாரி அவர்கள் தங்களுக்கு முன்னாள் வாழ்த்த கண்டுபிடிப்பாளர்களின் கண்டுபிடிப்புகளை மேன்படுத்தியது மட்டுமின்றி பல புதிய தனியங்கி இயந்திரங்களையும் கண்டுபிடித்தார். சார்ல்ஸ் பி. ஃபௌலர் அவர்களின் கூற்றுப்படி அல் – ஜசாரி அவர்களிடம் ஏறக்குறைய ஐம்பதுக்கும் மேற்பட்ட முக பாவனைகளை கொண்ட இசை எழுப்பும் இயந்திரம் இருந்திருக்க கூடும் என்று குறிப்பிடுகிறார்.

கிபி 1452 ஆம் ஆண்டு வாழ்த்த லியொனார்டோ டா வின்சி அவர்கள் குறிப்பிடத்தகுந்த பல தானியங்கி இயந்திரங்களை வடிவைத்துள்ளார். பிரிட்டானிகா என்சைக்ளோபீடியாவின் கருத்து படி டா வின்சி அவர்களின் கண்டுபிடிப்புகளில் இஸ்மாயில் அல்-ஜசாரி அவர்களின் தாக்கம் பெருமளவு இருப்பதை பார்க்க முடிகிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.  

i) பணியாட்களைபோன்றுநீர்நிரப்பிதரும்தானியங்கிஇயந்திரம்(பார்க்க: – படம் 2.1)

படம் 2.1 :- இஸ்மாயில்அல் ஜசாரிஅவர்கள்புத்தகத்தில்குறிப்பிட்டுள்ளநீர்நிரப்பிதரும்தானியங்கிஇயந்திரம் 

தோற்றம் 

ஒரு மூடப்பட்ட அலமாரி போன்ற அமைப்பு அதற்குள் ஒரு அரேபிய பெண்ணின் சிலை அதன் கையில் டீ, காபி குடிக்க ஏதுவான ஒரு குவளை. மற்றொரு கையில் துடைக்க தேவையான துண்டு அலமாரியின் மேல் பகுதியில் சிறிய கொள்ளளவு கொண்ட தொட்டி போன்ற அமைப்பு தொட்டியின் கீழ் பகுதியில் முப்பட்டக வடிவிலான இரண்டு கோப்பைகள்

செயல்படும்விதம் 

நீர் நிரப்பப்பட்ட தொட்டியில் உள்ள தண்ணீர் அதன் கீழுள்ள சிறிய துளை வழியாக சிறிது சிறிதாக கீழே உள்ள கோப்பையில் விழுகிறது. கோப்பையில் விழும் நீரின் கணம் காரணமாக குறிப்பிட்ட அளவு நீர் விழுந்த பின்பு அந்த கோப்பை கீழே சரிகிறது கோப்பையின் அருகில் உள்ள சிறிய நீர் வெளியேற்றும் பாதை வழியாக நீர் கீழே உள்ள இயந்திரத்தின் குவளையில் விழுகிறது. இயந்திரத்தின் குவளையில் உள்ள நீரின் கணம் அதனை தங்கியுள்ள புல்லி போன்ற அமைப்பை விடுவிக்க செய்கிறது. இயந்திரம் சாய்வாக உள்ள தளத்தின் மீது நிறுத்தப்பட்டுள்ளதால் புல்லி விடுவிக்கப்பட்டவுடன் தானாக அலமாரியின் கதவு திறக்கப்பட்டு இயந்திரம் வெளியில் வந்து நீரை பரிமாறுகிறது

3)தானியங்கிகடிகாரங்கள்:-

  1. கோட்டை கடிகாரம் (castle clock) 
  2. மெழுகுவர்த்திகடிகாரம்
  3. யானைகடிகாரம் 
  4. அலாரம் 
  5. நீரின்ஆற்றல்மூலம்இயங்கும்கடிகாரம்  

i)கோட்டைகடிகாரம் (castle clock) (பார்க்க: – படம் 3.1,3.2)

அல்-ஜாசாரி அவர்களின் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள கடிகாரத்தில் மிக பழமையான கடிகாரம் இது இதன் முகப்பு பக்கத்தில் பனிரெண்டு கதவுகளை கொண்ட அமைப்பு உள்ளது அவை ஒவ்வொன்றிலும் ஒரு அரேபிய தோன்றம் கொண்ட ஒரு பொம்மை உள்ளது சரியாக ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு கதவு திறக்கப்பட்டு அதில் ஒரு பொம்மை வெளியில் வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் மூலம் மக்கள் சரியான நேரத்தை தெரிந்துகொள்ளலாம் 

பனிரெண்டு கதவுகளுக்கு கீழ் இருக்கும் நீர் நிரப்பப்பட்ட கோப்பை போன்ற அமைப்பில் சரியாக ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு உலோக உருண்டையை அதற்கு மேல் இருக்கும் பறவையின் வாயில் இருந்து விழும் வண்ணம் வைக்கப்பட்டுள்ளது அதன் மூலம் எழும் ஒளியை கொண்டு ஒரு மணி நேரம் கடந்தை மக்கள் அறிந்து கொள்ளலாம் (குறிப்பு – இது தர்க்காலத்தில் இருக்கும் மணிக்கூண்டு கடிகாரத்தின் முன்மாதிரி) கீழ் இருக்கும் அரேபிய இசை கலைஞர் தோற்றம் கொண்ட குழுவினர் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இசை எழுப்புவது மற்றும் மத்தளம் கொட்டுவது போன்றவற்றிக்காகவடிவமைக்கப்பட்டுள்ளனர்.

படம் 3.1 :- கோட்டை கடிகாரத்தின் முப்பரிமாண விளக்கப்படம்

படம் 3.1 :- இஸ்மாயில் அல் – ஜசாரி அவர்கள் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள கோட்டை கடிகாரம்