மரபணு மாற்று தொழில்நுட்பத்தை அனுமதிக்கக் கூடாது என்று இந்தியா முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர். இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் மரபணு மாற்ற தொழில்நுட்பத்துக்கு நிரந்தர தடை அமலில் உள்ளது. இந்நிலையில், மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சவுகான் உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய அரிசியில் இருந்து மரபணு தொழில்நுட்பத்தில் திருத்தப்பட்ட 2 நெல் ரகங்களை வெளியிட்டுள்ளார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், தமிழகத்தில் காவிரி டெல்டாவில் இந்த நெல் ரகங்களை பயன்படுத்தி ஆய்வுகள் மேற்கொள்ளவும், பயிரிடவும் தமிழக அரசுடன், மத்திய வேளாண் அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளதாக வந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். மேலும், உரிய வல்லுநர் குழு அமைத்து, தமிழக அரசு தனது கொள்கை நிலையை தெளிவுபடுத்த வேண்டும்.
































