


இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களில் உயிர்த்தியாகம் செய்தவர்களின் அகராதியிலிருந்து மாப்பிள்ளைப் போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த 387 பேரின் பெயர்களை ஒன்றிய அரசின் கட்டளைப் படி ICHR-Indian Council of Historical Research நீக்கம் செய்துள்ளது.
இது இந்தியாவெங்கும் குறிப்பாக கேரள மாநிலத்தில் மிகப் பெரும் விவாத அலைகளை எழுப்பியுள்ளது. 2024 இல் வரவிருக்கும் ஒன்றிய அரசுக்கான தேர்தலையும்,உ.பி.இல் வரவிருக்கும் தேர்தலையும் முன்வைத்து, இந்து அணித் திரளை வாக்காக மாற்றுவதற்கும், எரியும் பிரச்சனைகளிலிருந்து மக்களை திசை திருப்புவதற்கும் ஃபாசிச அரசுகள் மேற்கொள்ளும் நடவடிக்கை இது.
வீரம் செறிந்த வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களான மாப்பிள்ளை முஸ்லிம்களின் 1921இல் நடந்த புரட்சியின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு இரண்டு திரைப்படங்கள் வெளிவருவதற்கு இருந்த நிலையில் அதற்கு எதிராக சங்பரிவாரக் கும்பலின் சார்பாக அந்த தேசாபிமானிகளை அவமானப்படுத்தியும் இழிவுபடுத்தியும் திரைப்படம் எடுக்கவும் சங்கப் பரிவாரங்கள் முயன்று வருகின்றன.
இதுகுறித்து கேரளாவில் விவாதங்களின் அலையொளியில் சென்ற ஆண்டு மோடி வெளியிட்ட அகராதிப் பட்டியலில் மாப்பிள்ளை முஸ்லிம்கள் உள்ளனரே என்ற எதிர்வாதத்தை முன்வைத்தபோது ஃபாசிச சக்திகள் பதிலின்றி கையறு நிலையில் இருந்தனர்.
உடனே ஒன்றிய அரசு ஒரு குழுவை நியமித்து மூவர் உறுப்பினரான மூடர் கூடம், ஆயி முஸ்லியார், வாரியம் குன்னத்து குஞ்சு முகமது ஹாஜி உட்பட்ட புரட்சி நாயகர்களின் பெயர்களை நீக்கம் செய்ய முடிவெடுத்தது. பிறகு சில நாட்களுக்கு முன்னால் இந்திய சுதந்திரப் போராட்டத்திலேயே நிகரற்ற ஜாலியன் வாலாபாக்கிற்கு நிகரான ”வாகன் டிராஜிடி-
Wagon tragedy ” என்று அவர்கள் பெயரிட்ட சரக்கு ரயிலில் வீரர்களை நிரப்பி மூச்சடங்கி சாக வைத்த நிகழ்வில் உயிர் இறந்தவர்களையும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்திருக்கிறது.
சீப்பை ஒளித்து வைத்தால் திருமணத்தை நிறுத்திவிடலாம் என்று நினைக்கின்ற மாதிரியான ஒரு செயல் இது. முழுப்பூசணிக்காயை அல்ல யானையையே சோற்றில் மறைக்க முயலும் அற்பத்தனம் இது.
‘சென்ற ஓராண்டுக்குள் நாம் செய்தவற்றைக் குறித்து யாருக்கும் தீர்ப்புச் செல்வது கடினம். காரணம் நாம் அந்த நிகழ்வுடன் உணர்வுரீதியாக ஒன்றி உள்ளோம். ஒருவேளை நாம் தவறிழைத்திருக்கலாம். ஒன்றோ இரண்டோ தலைமுறைகளுக்குப் பிறகு வருகின்ற வரலாற்று ஆய்வாளர்களுக்கு நாம் செய்த சரி எது? தவறு எது? என்பது குறித்து தீர்ப்பு சொல்ல முடியும்.’ இது மௌண்ட்பேட்டனின் வழி அனுப்பு விழாவில் நேரு கூறியது.
அந்த வகையில் பார்த்தால் மலபார் போராட்டத்தின் தன்மை குறித்து விவாதிக்க வேண்டிய நேரமிது. உணர்ச்சிகளுக்கு அப்பால் உண்மைத்தன்மையை இழை பிரித்துப் பேசும் தருணம் இதுதான்.
அதற்குத் தேவை விவரணங்களும் ஆவணங்களும் தரவுகளும் நேர்மையும் தான். நல்வாய்ப்பாக மலபார் போராட்டம் குறித்து உண்மையான அனைத்து வகையான பார்வைகளும் இப்போது அலசப்படுகிறது.
கேரள வரலாற்றில் மட்டுமல்ல! இந்திய வரலாற்றிலேயே அதிகமாக ஆய்வு செய்யப்பட்ட ஒரு நிகழ்வு 1921 உட்பட்ட மாப்பிள்ளை புரட்சி.
1946 இல் திருவிதாங்கூரில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் ஆயுதப் போராட்டம் நடந்தது. அது குறித்து நடந்த ஆய்வுகளை விட அதற்கும் 25 ஆண்டுகளுக்கு முன்னாள் காங்கிரஸ் தலைமையில் நடந்த மாப்பிள்ளை போராட்டம் குறித்து ஆய்வுகள் வந்துள்ளன. கம்யூனிஸ்ட் கட்சி கூட மலபார் போராட்டம் குறித்து ஆய்வு செய்த அளவுக்கு புன்னப்புற வயலார் போராட்டம் குறித்து எழுதப்படவில்லை. மலபாருக்கு வெளியே இருந்த ஆரம்பகால ஆய்வாளர்கள் பெரும்பாலும் இடதுசாரிகள் இருந்துள்ளனர்.
வங்காளத்தில் இருந்து சௌமேந்திர நாத தாகூர் தான் மலபார் போராட்டத்தின் வர்க்க குணத்தை வலியுறுத்தியவர். அதை விவசாயக் கிளர்ச்சி என்றார்.
பொதுவுடமை இயக்கத்தில் இருந்து எழுதப்பட்ட முதன்மையானது அபானி முகர்ஜியின் Maplah uprising எனும் ஆய்வு, பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் பார்ட்டியின் கம்யூனிஸ்ட் ரிவீவில் (british communist partyஇன் communist review) 1922 லேயே பிரசுரிக்கப்பட்டது.
1917 புரட்சிக்குப் பிறகு ரஷ்யாவில் லெனின் தலைமையில் சோசலிச அரசு வந்தவுடன் நடந்த கம்யூனிஸ்ட் இண்டர் நேஷனலில் (Communist International) விவாதிக்க லெனினின் ஆலோசனைப்படி தயாரிக்கப்பட்டது தான் அபினை முகர்ஜியின் ஆய்வு. லெனின் அந்த அறிக்கையை புக்கருக்கு அளித்து அதை ஜெர்மன் கம்யூனிஸ்ட் பார்ட்டி வெளியிட்டது.
அதன் 25 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளப் பிரிவு கட்சியின் ஆலோசனைப்படி இஎம்எஸ் எழுதுகிறார். வாரியன் குன்னத்து ஹாஜி குறித்து AKGயும் பேசுகிறார்.
EMS தனது சுயசரிதையில் புரட்சியின் முக்கியப் பகுதியான பெருந்தல் மண்ணுக்கு பக்கத்தில் உள்ள ஏலம் குளத்தில் பிறந்தவர். அப்போது அவருக்கு வயது 11. தனிப்பட்ட முறையில் தனக்கு அனுபவம் உண்டு என கூறியுள்ளார்.
காங்கிரஸ் தரப்பில் பார்த்தால் யங் இந்தியாவிலும், ஹரிஜனிலும் காந்தி எழுதுகிறார். KPCCஇன் அனுமதியுடன் 1915ல் மாதவன் நாயர் எழுதியுள்ளார் மாதவன் நாயர் எழுதியதில் உள்ள குறைகளை மொய்து மௌலவி, இகே மௌலவி ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மலபார் போலீஸ் ஹிட்சாக் ஆர். ஹெச் (malabar police surat hitchcock. r.k), Peasant Revolt in Malabar இல் 1921 இல் குறிப்பிட்டுள்ளார்.
1921 க்கு முன்பாகவே 80க்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடந்துள்ளன. அதிகமும் ஏறநாடு நாடு பகுதிகளில் நடந்தது.
கொனால்ட் உட்ஸ் எழுதிய The Moplah Rebellion and its genesis, மேலும் Stephen F Dale, D N Dhanagare, Robert L Hardgrave Jr, Kathleen Gough, David Arnold ஆகிய மேற்குலக ஆய்வாளர்களும் ஆய்வு செய்துள்ளனர்.
மேலும் V.V.BALA BUSHEVITEH, A.M.DIAKOV ஆகிய சோவியத் எகனாமிக் சயிண்டிஸ்டும் Mappila Muslims of Kerala : Miller, Roland E., AK கோடூரின் ஆங்க்லோ மாப்ளா போர் இது தவிர இந்திய, கேரள வரலாற்றாய்வாளர்கள் ஏராளம் எழுதியுள்ளனர்.


































