நவம்பர் மாதம் தலையங்கம் சொன்ன செய்தி புறந்தள்ள முடியாத மிக முக்கியமான விசயம். அதில் இருந்த “மனம் உடலின் ஒரு அங்கமாக இருப்பது போல சமூகத்தின் அங்கமாகவும் இருக்கிறது” என்ற வார்த்தைகளின் உள்ளடக்கம் விசாலமானது. மனித மனங்கள் அமைதியாகவும் நிதானமாகவும் இருக்கும் குடும்பங்கள், சமூகங்கள் ஆரோக்கியமான வளார்ச்சியுடையதாக இருக்கும் என்பதுதான் யதார்த்த. அறிவிலும், அறிவியலிலும் பெரு வளர்ச்சி இன்றைய மனித சமூங்கள் ஆரோக்கியமற்றதாக இருப்பதற்கு மனித மனங்கள் சிக்கல் நிறைந்ததாகவும், நெருக்கடி மிக்கதாகவும் இருப்பதே காரணம். இந்த உணர்த்திய ஆசியருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன்.
ஃபாத்திமா மர்யம், நுங்கம்பாக்கம் சென்னை.
மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் முழு பரிமாணத்தையும் அறியக்கூடிய வாய்ப்பு சென்ற மாத இதழில் வெளியான “நான் ஒரு முஸ்லிம், நான் ஒரு இந்தியன்” கட்டுரையின் வழியாக கிடைத்தது. 1920 க்கும் முன்னால் மேலைநாட்டு அதிகாரங்களால் உலகம் முழுவதும் தூவப்பட்ட தேசியவாதத்தை கடுமையாக எதிர்த்தார். ஏனெனில் தேசியவாதம் இனத்தை அடிப்படையாகக் கொண்டது. இஸ்லாம் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது எனக் கருதினார். 1920 க்குப் பிறகு தேசியவாத சிந்தனைக்கு ஆதரவாளராக மாறினார். அதற்கான நியாயங்களும் அவருக்கு இருந்தது. “இந்தியா சுதந்திரம் அடைவது, இந்து-முஸ்லிம் ஒற்றுமை” என்ற காரணங்கள் முக்கியமானவை. சிறுபான்மை என்பதற்கு மௌலானா ஆசாத் சொல்லும் விளக்கம் அறிவுப்பூர்வமானது. இந்திய முஸ்லிம் சமூகம் உணர்ந்துகொள்ள வேண்டிய அடிப்படை அம்சம் அது. “சிறுபான்மை என்பது எண்ணிக்கையில் குறைவாக இருப்பது அல்ல. பெரும் கூட்டத்துக்கு மத்தியில் எண்ணிக்கையிலும், செல்வாக்கு செலுத்தும் செயல் திறனற்ற தன்மையுள்ள மக்கள் தொகுதியைக் குறிக்கும்” என்கிறார். இது போன்ற சீரான சரியான வழிகாட்டுதலை வழங்கும் ஆளுமைகள், சமூகத்தை முன்னகர்த்தும் ஆளுமைகள் உருவாக வேண்டும். அல்லாஹ் உதவி செய்வானாக. ஆமீன்.
ஆதில் முஹம்மது, நாகர்கோவில்
சோதனைக்குப் பின் சாதனை படைக்கும் குழந்தைகள் கட்டுரை அருமையான தொகுப்பு. யூசுப் (அலை) மூஸா(அலை) ஆகிய இருவரின் வரலாற்று நிகழ்வுகளை கோர்வையாக கோர்த்து குழந்தை வளர்ப்பு குறித்த பாடங்கள் தொகுக்கப்பட்டிருந்தது. அல்ஹம்து லில்லாஹ். ஜஸாகுமுல்லாஹ்.
அம்மார், துறையூர்.
நெல்லும் மரபும் கட்டுரையில் பாரம்பரிய நெல் ரகங்களைக் குறித்தும் உலகமயமக்கலுக்கு எதிராக உள்ளுர் மயமாக்கலுக்கு பாரம்பரிய விதைகள் அதன் பயன்பாடுகளை முன்னிறுத்த வேண்டிய அவசியம் குறித்தும் சொல்லப்பட்டிருந்தது. நன்றி.
அப்துல் ஜப்பார், ஈரோடு
மாகக் கொண்டு
விதைகளை


































