மனிதன், பிரபஞ்சம், மனித வாழ்க்கை குறித்த கேள்விகளுக்கு திருப்திகரமான விடை இதுவரை கிடைக்கவில்லை. இந்த பிரபஞ்சம், பிரபஞ்சத்தின் கட்டமைப்பு, பிரபஞ்சத்தின் எல்லை எது? தொடக்கம் எது? இந்த கேள்விகளுக்கு உரிய பதிலை அறிவியல் உலகால் அளிக்க முடியவில்லை.
பிரபஞ்சம் முழுவதும் மனிதனின் கைப்பிடிக்குள் அடங்கி விட்டது என்ற அகங்காரம் 18, 19 ஆம் நூற்றாண்டின் நியூட்டோனியல் ஃபிசிக்ஸில் பிரதிபலித்திருந்தது. ஆனால் நவீன அறிவியலுக்கு அத்தகைய உரிமை கோரல்கள் இல்லை.
மனிதன் யார்? என்ற கேள்வி தனித்து நிற்கிறது. இரண்டு காலில் நிற்கும் முதுகெலும்புள்ள மிருகம், பரிணாமச் சங்கிலியில் மிக அதிக வளர்ச்சி பெற்ற உயிரினம் மனிதன் என டார்வினிசம் கூறுகிறது.
சிந்தனை செய்யும் மிருகம், சிரிக்கும் மிருகம், ஆயுதம் சேகரிக்க மிருகம், வாலை இழந்த மிருகம், சமூக உணர்வுள்ள மிருகம், அரசியல் உணர்வுள்ள மிருகம், பகுத்தறிவு மிருகம் என உயிரியலும் சமூகவியலும் மனிதனை விளக்குகிறது.
பொருளாதார உயிரியாகவும், ஆன்மீக உயிரியாகவும், பாலியல் உயிரியாகவும் சித்தரிக்கப்படுகிறது.
மனித வாழ்க்கையை விளக்க ஏராளமான முயற்சிகள் நடந்துள்ளன. சாக்ரடீசைத் தொடர்ந்து பிளாட்டோ, அரிஸ்டாட்டில் வழியாக பெட்ரண்ட் ரஸ்ஸல் வரையிலான சிந்தனையாளர்கள், தத்துவவியலாளர்கள் மனித வாழ்க்கையை ஆய்வு செய்தவர்கள்.
ரொன தெக்கார்ட், விர்ஹம் லய்பினிஸ், ஜோன் லாக், ஜார்ஜ் பர்க்லி, டேவிட் ஹ்யூம், இமானுவேல் கான்ட், ஹெகல், மார்க்ஸ் ஆகிய மெய்யியலாளர்களின் தேடல்களிலும் மனித வாழ்க்கையின் இலக்கும் போக்கும் குறித்த போதுமான பதில்கள் இல்லை என்றால் மிகையாகாது.
டார்வின், ஃப்ராய்ட், சார்த்தின் தாக்கங்கள் இலக்கியத்திலும் கலைகளிலும் பிற துறைகளிலும் முரண்பட்ட கருத்துகளால் நிரம்பியுள்ளன. எனினும் மனிதர்களுக்கு வழிகாட்ட வேறு மார்க்கங்களை தேடுகின்றனர்.
?????
மீன் கெட்டுப் போவது தலையிலிருந்து என்றால் மனிதன் கெடுவது இதயத்தில் இருந்துதான் என்பர். இதய சுத்தி தான் மனிதன் எனும் இருப்புக்கு நியாயம் செய்யும்.
சுற்றுச்சூழல் மாசை விட ஆபத்தானது மனிதனின் மன மாசு (Moral Pollution) சுற்றுச்சூழல் மாசு கூட மனித மன மாசின் விளைவுதான்.
மனிதனைத் தவிர்த்த கோடிக்கணக்கான உயிரினங்கள் பூமியில் உண்டு. அவை வாழ்வதன் விளைவாக இயற்கையின் எந்த ஆபத்தும் இல்லை. மனித மன மாசின் விளைவு இயற்கை சீற்றத்திற்கும் பேரிடர்களுக்கும் காரணியாகிறது.
மனிதர்களுடைய கைகள் சம்பாதித்தவற்றி(தீச் செயல்களின்)ன் காரணத்தால் தரையிலும் கடலிலும் குழப்பம் பரவிவிட்டது. (அல்குர்ஆன் :30:41)
அமெரிக்காவுக்கான தொலைவு குறையவும், அண்டை வீட்டில் தூரம் கூடவும் செய்துள்ளது.???
உலகம் ஒன்றாகும் போது மனித குலத்தின் விழுமியங்கள் சிதறிவிட்டது.
மனிதத்திற்கு திரும்புவது தான் ஒரே வழி. “அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திட்டமாக வெற்றியடைந்து விட்டார். ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான். (91 :9,10)
மனிதனில் இருந்து மனிதத்துவம் நீக்கப்பட்டால் மானுடம் எனும் அடிப்படை குணம் விலகிவிடும். பிறகு உப்பு தன்மை இல்லாத உப்பாக, வெளிச்சம் இல்லாத விளக்காக, தண்ணீர் இல்லாத கிணறாக, நிலைநிற்க தகுதி அற்றதாக மனித சமூகம் மாறிவிடும்.
அமீபா முதல் ஆறறிவுள்ள மனிதன் உட்பட கோடிக்கணக்கான உயிரினங்கள் இந்த உலகில் உண்டு. யானை முதல் திமிங்கலம் வரையிலான பெரு உயிரினங்களை கட்டுப்படுத்தும் வல்லமை மனிதனுக்கு உண்டு. அதற்கான காரணம் அவன் ஒரு அறிவுஜீவி. அறிவுள்ள மனிதனுக்கு பிற உயிரினங்களுக்குத் தேவையில்லாத இறைத்தூதர்களும் வேதங்களும் எதற்கு?
பிற உயிரினங்களுக்கு இல்லாத பலவீனங்கள் மனிதனுக்கு உண்டு. ஆடோ, மாடோ பிரசவித்தால் சிறிது நேரத்தில் அதன் குழந்தைகள் அன்னம் தேடி தாயின் மார்பகத்திற்கு வரும். மனிதக் குழந்தையோ அழ மட்டும் செய்யும்.
மார்போடு அணைத்தால் தான் அதற்கு அன்னையின் அன்னம் கிடைக்கும்.
பூனைக்குட்டிக்கு இல்லாத பலவீனங்கள் மனித குழந்தைக்கு உண்டு.
முட்டையிலிருந்து வெளியே வரும் கோழிக்குஞ்சு கூட தானியத்தையும் மணர்துகளையும் பிரித்தறியும். நாய்க்கும் பூனைக்கும் கோழிக்கும் கழுதைக்கும் பிறப்பு முதல் அதன் உணவு எது என்று தெரியும். அவற்றுக்கும் ஹராமும் ஹலாலும் எவையென்று இயல்பாகவே படைப்பில் இறைவன் நிச்சயித்துள்ளான். ஆனால் இதை மனிதக் குழந்தைக்குப் புகட்ட வேண்டியுள்ளது.
வாழ்க்கை முழுவதும் சரி எது? தவறு எது? என கற்பிக்கவேண்டும். கூடாதவைகள் இல்லாத சுதந்திர வாழ்க்கை மனிதனை, மனிதமல்லாத ஆக்கிவிடும்.
கேரள மாநிலம் சேர்த்தபா எனும் பகுதியில் ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்னாள் மார்பு வரிக்கு எதிராக நங்கேலி என்ற பெண் தன் மார்பை அறுத்து அறுத்துக் கொடுத்து இறந்து போனாள். ஆனால் இன்றோ மறைக்க மாட்டோம் என்று போடுகிற நிலமை.
மனிதனை மனிதனாக்குவது எல்லையற்ற சுதந்திரம் அல்ல.
பறவைகளும் விலங்கினங்களும் இன விருத்தியில் ஏற்படுகின்றன. அவைகள் சுதந்திரமாக நடமாடுகின்றன. அதனால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் மனிதனுக்கு எல்லையற்ற பாலியல் சுதந்திரம் மனித சமூகத்திற்கு ஆபத்தாக மாறுகிறது. இந்த எல்லைகளும் கட்டுப்பாடுகளும் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது. இறைவன் தனது தூதருக்கு மூலமாக இந்த எல்லைகளை வகுத்தான்.
மானுடம் என்பதும் அறம் என்பதும், தர்மம் என்பதும் மனிதனின் வெற்றிக்கான பாதை தான். அறிவின் துணையால், பகுத்தறிவால், ஆன்மாவின் துணையால், வழிபாடுகளின் வழியாக ஆண்டவனை நெருங்குதல், உடலின் துணையால் நற்கருமங்களினூடாக படைப்புகளுக்கு சேவை செய்தல் இந்த மூன்றும் தான் மனிதனுடைய திருப்தியான வெற்றிகரமான வாழ்க்கைக்கு வழி
எனவே சிந்தியுங்கள் என மனிதனை நோக்கி அல்குர்ஆன் அழைப்பு விடுக்கிறது : நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளிலிருந்தும் இணைகளாக (ஜோடி ஜோடியாக) நாம் படைத்துள்ளோம். (51:49) இணைகளாக படைத்துள்ளோம் என்பதன் பொருள் முன்கூட்டியே நிச்சயித்து படைக்கப்பட்டது என்பதாகும். அது பரிணாமத்தால் சாத்தியமல்ல.
படைப்புகளில் படைப்பாளன் இறைவன் ஒருவன் எல்லாவற்றுக்கும் இணைகளைப் படைத்தான் என்பதன் பொருள் இந்த பௌதீக உலகுக்கும் ஒரு இணை உண்டு என்பதாகும். அதுதான் மறு உலகு.
சத்தியம் – அசத்தியம், நன்மை – தீமை, சரி – தவறு, தர்மம் – அதர்மம், சன் மார்க்கம் – தீய மார்க்கம், பகல் – இரவு, கருப்பு – வெள்ளை, இனிப்பு – கசப்பு, அகம் – புறம், சுகம் – துக்கம், பிறப்பு – இறப்பு இவையெல்லாம் உண்மை என்றால் இவ்வுலகம் மறுவுலகம் என்பதும் உண்மை.
மரணம் முற்றுப்புள்ளி அல்ல என்பதை உணரும்போது தான் வாழ்க்கையின் இலக்கை உணரமுடியும்.
தொழுகை தீமையிலிருந்து தடுக்கும். சகாத் தூய்மைப்படுத்தும். நோன்பு இறையச்சமுள்ளவராக்கும். ஹஜ் அன்று பிறந்த குழந்தை போலாக்கும் என்றெல்லாம் இஸ்லாம் கூறுகிறது.
வணக்க வழிபாடுகளினூடாக சுய மாற்றமும், ஆன்ம சுத்தியினூடாக கர்ம சுத்தியும் சாத்தியமாகும் போது வாழ்க்கை வெற்றி அடையும்.
நம்பிக்கையாளனையும் மறுப்பாளனையும் வேறு பிரிக்கும் அடிப்படை தொழுகை என்ற இஸ்லாம் ‘தொழுகிறவர்களுக்கு கேடுதான் (107:4) அனாதையை விரட்டுபவன்,??? அவன் ஏழைக்கு உணவளிக்கத் தூண்டாதவன் என்று குர்ஆன் கூறுகிறது. வழிபாடுகளினூடாகப் பெற்ற ஆன்மீக குணம் என்பது பிறருக்கு சேவை செய்வதுதான் என்பது இதிலிருந்து புலனாகிறது.
உலகை ஆட்டிப்படைத்த ஆட்சியாளர்களில் ஒருவரான அடோல்ஃப் ஹிட்லரும் அவரது காதலி ஈவா ப்ரௌனும் பெர்லினில் பாதுகாப்பு அறையில் சயனைட் அருந்திய பிறகு துப்பாக்கியால் தற்கொலை செய்து கொண்டனர். ஹிட்லரின் மரணச் செய்தி அறிந்து மறுநாள் அவரது நட்பிற்கு ஆளான கோயபல்சும் அவரது மனைவி மால்டாவும் தற்கொலை செய்து கொண்டனர்.
உலகப் பிரசித்தி பெற்ற கணிணி அறிவியலாளரும் கணித விஞ்ஞானியுமான அலன் தோரிங்1954-ஆம் ஆண்டு ஆப்பிளில் விஷம் சேர்த்து அதை சாப்பிட்டு தற்கொலை செய்தார். 1970இல் உலக பணக்காரர்களின் முதலாமாணவராக இருந்த நெல்சன் பங்கர், அமெரிக்காவைச் சேர்ந்தவர். அவரது சொத்து அன்று 1600 கோடி டாலர், 80 லட்சம் ஏக்கர் எண்ணெய் நிலங்கள் இருந்தன. 1000 பந்தயக் குதிரைகள் இருந்தன. ஆனால் 2014 அக்டோபர் 14 இல் ஒரு முதியோர் இல்லத்தில் ஏழையாக மரணித்தார்.
உலகப் புகழ் பெற்ற லியோ டால்ஸ்டாயின் புகழ்பெற்ற கதை “How Much Land Does a Man Need?” கடனில் மூழ்கிய ஒரு ஏழையின் கதை.
ஒரு நில உடைமையாளர் அவனுக்கு ஒரு விசித்திரமான நிபந்தனையுடன் வியாபாரத்தை முன்வைத்தார். ???ஆயிரம் ரூபாய் மாதம்????
சூரிய உதயத்துக்கு முன் நடந்து தொடங்கிய இடத்திற்கே வந்தடைய வேண்டும். அந்த அளவு நிலம் அளிப்பேன் என்றார். பஹராம் எனும் ஏழை மகிழ்ச்சியுடன் இதற்கு முன்வந்தார்.
கிடைக்கப் போகும் நிலம் குறித்து அளவுக்கு மீறிய ஆசையுடன் வேகமாக நடக்க ஆரம்பித்தார்.
நிலம், நிலத்தால் வரப் போகும் வாய்ப்பு வசதிகள் குறித்த கனவுகளோடு ஓய்வின்றி தயக்கமின்றி சுறுசுறுப்போடு பொழுது சாயும் வரை நிறுத்தாமல் நடந்தார். நடை தளர்ந்து போய் தள்ளாடி நடந்தவர் இறுதியில் நிலத்தில் விழுந்துவிட்டார். அவரால் எழ முடியவில்லை. சிறிது நேரத்தில் உயிர் பிரிந்தது. கடைசியில் அவனுக்குக் கிடைத்தது ஆறடி மண்தான்.
பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது. பஞ்சனையில் காற்று வரும் தூக்கம் வராது.
திருப்தியான வாழ்க்கைக்கு வழிமுறைகள் என்ன? நான் யார்? எது வாழ்க்கை? எப்படி வாழ வேண்டும்? எதற்காக வாழ்க்கை, வாழ்க்கைக்குப் பிறகு என்ன? இந்த அடிப்படைக் கேள்விகளுக்கு தெளிவான பதில் கண்டால் மட்டும் தான் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும்.
பூமியில் இறைவனின் பிரதிநிதி இதைவிட உயர்ந்த பதவி மனிதனுக்கு எது? அதற்கான ஆற்றலுடன் மனிதன் படைக்கப்பட்டுள்ளான். “மனிதனை மிக அழகான வடிவமைப்பில் திட்டமாக நாம் படைத்தோம். (95:4) அவனுக்கு இரு கண்களை நாம் ஆக்கவில்லையா? ஒரு நாவையும் இரு உதடுகளையும் ஆக்கவில்லையா? இன்னும் (நன்மை, தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம். (90: 8 -10)
70 கிலோ எடையுள்ள மனித உடலை அறிவியல் முறையில் பகுப்பாய்வு செய்த போது, உடலின் மூலப் பொருள்கள் துல்லியமாக கண்டறியப்பட்டது. மனிதன் மண்ணால் படைக்கப்பட்டவன் என்ற இறைவசனத்தை அறிவியல் உலகம் மெய்ப்பித்தது.
Oxygen 43 கிலோ
Carbon 16 கிலோ
Hydrogen 7 கிலோ
Nitrogen 1.8 கிலோ
Calcium 1.0 கிலோ
Phosphorus 780 கிராம்
Potassium 140 கிராம்
Sulfur S 0.3 0.038
Sodium 100 கிராம்
Chlorine 95 கிராம்
Magnesium 19 கிராம்
தொடர்ந்து Tungsten 20g கிராம் வரையிலான 58 தனிமங்களில் ஆக்சிஜன் ஹைட்ரஜன் தவிர அனைத்தும் மண்ணிலிருந்து கிடைத்தவை. “நிச்சயமாக நாம் மனிதரைக் களி மண்ணின் மூலச் சத்திலிருந்து திட்டமாக நாம் படைத்தோம். (23:12) என்று மனிதனின் படைப்பு குறித்து குர்ஆன் கூறுகிறது.


































