நோய் எதிர்ப்பு சக்தி நம் உடலுக்கு மிக மிக முக்கியமானது. அது நாம் உண்ணும் உணவின் மூலம் மட்டுமே கிடைத்து விடுவதில்லை. நோய் எதிர்ப்பு சக்திக்கு மிக மிக முக்கியமானது நம்முடைய தூக்கமும் ஒரு காரணம் என்பதை இன்றைய மருத்துவ வல்லுநர்கள் சொல்வதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
இதைப் படித்தவுடன் எப்படி வேண்டுமானாலும் தூங்கலாம் எப்பொழுது வேண்டுமானாலும் தூங்கலாம், என்று எண்ண வேண்டாம். இரவு தூக்கத்தினால் தான் ஆரோக்கியமான நன்மைகள் பல கிடைக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
நம் உடலில் ஹர்மோன்கள் சுரப்பதை முறைப்படுத்தி நமது மூளையின் செயல்பாட்டை சரி செய்து, இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற ஆபத்துக்கள் உண்டாகாமல் நம்மை பாதுகாத்து, உடல் எடையையும் முறையாக பராமரித்து, சர்க்கரை நோய் நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பல நோய்களின் பாதிப்பில் இருந்தும், நம்மை பாதுகாத்து, பட படப்பு, கவலை, மனச்சோர்வு, மன அழுத்தம் போன்ற உளவியல் ஆபத்துக்களில் இருந்தும் நம்மைக் காப்பாற்றுகின்றது நாம் இரவில் தூங்கும் தூக்கம் தான்.
தனது இறுதி வேதமான குர்ஆனில் “அல்லாஹ் பகலை மனிதன் ஓடியாடி இயங்குவதற்காகவும் வாழ்வாதாரத்தைத் தேடிக் கொள்வதற்காகவும் அமைத்துத் தந்து, இரவை தூங்கி ஓய்வெடுத்துக்கொள்ளும் வகையில் அமைத்துள்ளதாக” கூறுகிறான். (அல் குர்ஆன் 78:9-11)
ஒருவர் இரவில் தூங்கும் போது தான் அவரது உடலில் ஹா்மோன் என்ற வேதிப் பொருள் சுரக்கிறது. அந்த வேதிப்பொருளே நமது ஆரோக்கியமான, முழு தூக்கத்திற்கு காரணமாகின்றது.
இந்த ஹார்மோனுக்கு மெலடோனின் என்றுபெயர். இந்த Melatonin என்ற hormone இரவில்தான் நம்மிடம் சுரக்கின்றது. இரவில் தூங்காமல் கண் விழித்திருந்தால் ‘மெலடோனின்’ சுரக்காது என்றும் எச்சரிக்கை செய்கிறது இன்றைய மருத்துவ உலகம்.
இந்த ஹார்மோன் சுரக்காவிட்டால் உடலின் ஆரோக்கியம் கெட்டு, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உடலில் பல நோய்களையும் உண்டாக்கி, நம்மை பலவீனமடைய செய்து விடும் என்று மருத்துவர்கள் சொல்கின்றனர்.
தூக்கம் தானே அதை இரவில் தூங்கினால் என்ன, பகலில் தூங்கினால் என்ன என்று யாரும் சாதரணமாய் நினைத்து விட முடியாது. பகல் தூக்கம் இரவுத் தூக்கத்திற்கு எந்த வகையிலும் ஈடு இணை ஆகாது என்று ஆராய்ச்சிகள் உறுதியாகச் சொல்கிறது. ஒருவர் பகலில் தூங்குவதால் அவருக்கு செரிமானப் பிரச்சினைகள், நரம்புத் தளர்ச்சி, தோல் சுருக்கம், மன அழுத்தம் போன்ற பல நோய்கள் தொடங்கி, எதிர் மறையான எண்ணங்கள், கல்லீரல் பிரச்சினைகள் என நோய்க்கு மேல் நோய்கள் பல உண்டாக வாய்ப்புக்கள் அதிகம் இருக்கிறது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.
இதனைத் தான் தூக்கம் ஓர் இபாதத் என்று இஸ்லாம் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் வலியுறுத்திச் சொல்கின்றது. அதனால்தான் தூங்கச் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகளையும் இறைவனின் இறுதித் நபி (ஸல்) அவர்களும் விளக்கியுள்ளார்கள்.
ஒரு முஸ்லிமும் படுக்கைக்கு செல்ல முன்பு உளு செய்து கொள்ள வேண்டும் என்றும் தனது படுக்கையின் விரிப்பை மூன்று முறை தட்டி கொண்டு சூரத்துல் பகராவின் 285,286 ஆகிய வசனங்களை ஓதியும், குல் சூராக்கள் மூன்றையும் ஓதி தனது இரண்டு கைகளிலும் உடல் முழுவதும் தடவிக் கொள்ள வேண்டும். பின்பு
ஆயத்துல் குர்ஸியையும், ஸுப்ஹானல்லாஹ் 33 தடவைகளும் அல்ஹம்துலில்லாஹ் 33 தடவைகளும், அல்லாஹு அக்பர் 34 தடவைகளும் ஓதி தனது தேவைகளைக் கேட்டு துஆ செய்ய வேண்டும்.
இவைகளைக் கடைபிடித்து வாழ்ந்தோமென்றால்…. நல்ல தூக்கம் மட்டும் இல்லாமல் ஆரோக்கியம் தருகின்ற தூக்கமாகவும் அது இருக்கும் என்றும் சொல்லியுள்ளார்கள்.
C.D.C எனப்படும் Centers for Disease Control and Prevention –ன் கோட்பாட்டின்படி வயது வந்தவர்கள் குறைந்த பட்சம் தினம் 7 முதல் 9 மணி நேரங்கள் இரவில் கட்டாயம் தூங்கிட வேண்டும். என்றும் உடல் இயக்கத்தை சீராக வைத்திருக்க தூக்கம் இன்றியமையாதது. போதுமான அளவு ஒருவர் முறையாக தூங்கினால், அவரின் உடலில் சைடோகின்ஸ் மற்றும் T-செல்ஸ் உற்பத்தியாகும். சைடோகின்ஸ் என்பது எதிர்ப்பு புரதம். T-செல்ஸ் என்பது நம் உடலின் போர் வீரர்கள் என்றும் இவை உடலில் உள்ள ஆண்டி ஜென்களோடு போரிட்டு, நம் உடலை பாதுகாத்துக் கொள்கிறது என்றும் அறிவித்து உள்ளனர்.
ஒருவருக்கு இரவில் முறையான தூக்கம் இல்லாமல் போய்விட்டால், அறிவாற்றல் குறைபாடுகள் (COGNITIVE IMPAIRMENTS) எரிச்சல் (IRRITABILITY) மாயத்தோற்ற பயம் (DELUSIONS)
பயம், களக்கம், நம்பிக்கையின்னை (PARANOIA) மனநோய் (PSYCHOSIS) அறிவாற்றல் குறைபாடுகள் (COGNITIVE IMPAIRMENTS) போன்ற நோய்கள் ஆரம்பமாகிவிடும் வாய்ப்பு இருக்கிறது.
தூக்கமின்மையின் காரணமாக உருவாகும் மிக முக்கியமான நோய்களில் ஒன்று மன நோயாகும் .
ஒருவருக்கு ஏற்படும் பயம், கலக்கம் மற்றும் நம்பிக்கையின்மை உண்டாகும் நோய்க்கு ஆங்கிலத்தில் PARANOIA என்று கூறுவர்.
அது என்ன வென்றால் தன்னை யாரோ பின்தொடர்வது போன்ற பிரம்மை, நம்பிக்கையின்மை,
வாழ்க்கையில் விரக்தி போன்ற மாற்றங்கள் மனதில் ஏற்பட்டு வாழ்க்கையையே அது வீணாக்கி விடுகிறது என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
அதனால் நாம் ஒவவொருவரும் தூக்கத்தை அல்லாஹ் நமக்கு வழங்கிய அருட்கொடையாகவே கருதி அதனுடைய முறையான வழி முறைகளை கடைபிடித்து வாழ்ந்திட வேண்டும்
முறையான தூக்கத்தை நம் இபாதத்தாக கடைப்பிடித்து…
நோய் இல்லாத ஆரோக்கிய வாழ்வை இனிமேலாவது வாழ்வோம்….


































