பேசும் முன் யோசியுங்கள். கோபத்தை ஏற்படுத்தக் கூடிய சந்தர்ப்பத்தில் அவசரப்பட்டு ஆவேசமாக பேசி விட்டு அதற்காக வருந்துவதை நாம் வழமையாக கொண்டுள்ளோம்.
அவ்வாறான சந்தர்ப்பங்களில் நாம் பேசும் முன் பேசுவோம் நமது எண்ணங்களை ஒருமுறை நாம் சீர்தூக்கிப் பார்க்க பழக வேண்டும்.
நடந்து முடிந்த அல்லது நடந்துகொண்டிருக்கின்ற ஏதாவதொரு சம்பவத்தின் மீதான நமது நிலைப்பாடு, அது நம்மில் தாக்கம் செலுத்தும் தன்மை ஆகியவையே நம்மில் கோபம் என்னும் உணர்வைத் தூண்டுகிறது. அதுகுறித்து நம்மால் கவனம் செலுத்த முடியுமாக இருப்பின் அந்த நிலைமையை சமாளிக்கலாம்.
அந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களுக்கும் அதற்கான இடைவெளியை வழங்குவது நிலைமை இன்னும் சீராக்கும்.
உங்கள் கோபம் தணிந்து விட்டதாக உணர்ந்தால் உங்கள் கோபத்தை, ஏற்பட்ட அதிருப்தியை அமைதியாக வெளிப்படுத்துங்கள்.
நீங்கள் தெளிவாக யோசித்தவுடன் உங்கள் விரக்தியை உறுதியாக ஆனால் முரண்பாடற்ற வகையில் வெளிப்படுத்துங்கள்.
உங்கள் கவலைகளையும் தேவைகளையும் மற்றவர்களைத் துன்புறுத்தாமல் அவற்றை ஒளிவு மறைவின்றி தெளிவாகவும் நேரடியாகவும் தெரிவிக்கவும்.
உடற்பயிற்சி செய்யுங்கள். உடல் செயல்பாடுகள் கோபத்திற்கு வழிகோலும் மன அழுத்தத்தை குறைக்க உதவும். கோபம் அதிகரிப்பதாக உணர்ந்தால், நடக்கப் பழகுங்கள் அல்லது ஓடுங்கள். ஏதாவது உடல் இயக்கச் செயல்பாடுகளை செய்யுங்கள்.
உங்களுக்கென நேரம் ஒதுக்குங்கள். மன அழுத்தத்தை ஏற்படுத்தும் அன்றாட செயல்பாடுகளின் உங்களுக்காக குறுகிய இடைவெளியைக் கொடுங்கள். அமைதியான சில நிமிடங்கள் எரிச்சலோ கோபமோ இல்லாமல் எதிர்காலத்தை கையாளத் தயார்ப்படுத்த உதவும்.
சாத்தியமான தீர்வுகளை அடையாளம் காணவும்.
கோபத்தை ஏற்படுத்தும் அல்லது தூண்டும் விசயங்களில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக சிக்கலைத் தீர்ப்பதற்கான வழிகளை ஆராயுங்கள்.
உங்கள் குழந்தையின் அறை நேர்த்தியற்று இருப்பது எரிச்சலூட்டுகிறதா? கதவை மூடிவிட்டு அவ்விடத்திலிருந்து நகர்ந்து விடுங்கள்.
உங்கள் துணைவர் ஒவ்வொரு இரவும் இரவு உணவிற்கு தாமதாக வருகிறாரா? குடும்ப ஒன்றுகூடலை மாலை சிற்றுண்டி நேரத்திற்குத் திட்டமிடுங்கள் அல்லது தனியாக சாப்பிட கற்றுக்கொள்ளுங்கள்.
நமக்குத் தேவையான விதத்தில், இடத்தில் இன்னுமொருவர் பொருந்த வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள். கோபம் எதையும் சரி செய்யாது. அதை மோசமாக்கும் என்பதை நீங்களே நினைவூட்டிக் கொள்ளுங்கள்.
நீங்கள் என்பதை தவிர்த்து நான் என்பதை பயன்படுத்துங்கள். குறை கூறுவதை அல்லது குற்றம் சாட்டுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். இது பதற்றத்தை அதிகரிக்கும்.
நிலைமையின் சிக்கலை “நான்” என்ற கோணத்தில் மரியாதைக்குரிய விதத்தில் விளக்கப்படுத்துங்கள். எடுத்துக்காட்டாக “நீங்கள் எந்த வீட்டு வேலைகளையும் செய்வதில்லை” என்பதற்கு பிரதியீடாக “சமைக்கும்போது உதவத் தவறியதால் சுத்தம் செய்யும்போது சொல்லாமல் வெளியேறியதால் வருத்தப்படுகிறேன்” என்று கூறுங்கள்.
மனக்கசப்புகளைப் பற்றிக் கொள்வதை தவிருங்கள். மன்னிப்பு ஒரு சக்திவாய்ந்த கருவி. கோபத்தையும் பிற எதிர்மறை உணர்வுகளையும் நேர்மறை எண்ணங்களை விழுங்க அனுமதித்தால், சுய அழிவு அல்லது அநீதி உணர்வால் நீங்கள் அல்லல்படுவதை கவனிக்கலாம். ஆனால் கோபப்படுத்திய ஒருவரை மன்னிக்க முடிந்தால், இருவரும் சூழ்நிலையில் இருந்து கற்றுக்கொண்டு உறவைப் பலப்படுத்தலாம்.
பதற்றத்தின் போது சந்தர்ப்பத்தை நகைச்சுவை உணர்வுடன் அணுகவும். கடுமையான உணர்வுகள், நிலைப்பாடுகள் பதற்றம் பரவ உதவும். மேலும் விஷயங்கள் இவ்வாறுதான் நிகழ வேண்டும் என்ற பிடிவாதம் மற்றும் எதிர்பார்ப்புகளை தளர்த்திக் கொள்ளுங்கள்.
மேலும் மற்றவரைக் கிண்டல் செய்வதை தவிர்க்கவும். இது உணர்வுகளைப் புண்படுத்தும். நிலைமைகளை மோசமாக்கும்.
மனதை தளர்த்தும் பயிற்சிகளில் ஈடுபடுங்கள். கோபம் ஏற்படும்போது ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகளை செய்யுங்கள், சாந்தமான மனதிற்கு இதமான காட்சியை கற்பனை செய்து பாருங்கள். அதில் வாழ்ந்து பாருங்கள் அல்லது “Take It Easy, Be Calm” போன்ற அமைதியான வார்த்தைகளை பயன்படுத்துங்கள். நீங்கள் இசையைக் கேட்கலாம், பத்திரிக்கையில் எழுதலாம் அல்லது சில யோகா நிலைகளைச் செய்யலாம். நிதானத்தை ஊக்குவிக்கும் செயல்களில் ஈடுபடலாம்.
தகுதியானவரின் உதவி பெறுதல்
கோபத்தைக் கட்டுப்படுத்தக் கற்றுக்கொள்வது சில நேரங்களில் அனைவருக்கும் ஒரு சவாலாகும்.
உங்கள் கோபம் கட்டுப்பாட்டுக் அப்பாற்பட்டதாகத் தோன்றினால், நீங்கள் வருத்தப்படுகின்ற காரியங்களைச் செய்வதாகத் தோன்றினால் அல்லது சுற்றியுள்ளவர்களை காயப்படுத்தினால் பிரச்சனைகளுக்கு தகுந்தவர்களின் உதவியைப் பெறுங்கள்.
பெளசுனா இஸ்ஸத்தீன், உளவியலாளர், இலங்கை




































