மனச்சோர்விற்கொரு முற்றுப்புள்ளி 

நான் ஏன் மனச்சோர்வடைகிறேன்?” இப்படியானதொரு கேள்வி கேட்க முடியுமென்றால் விடை தேடுவது சிரமமாகாது. மனச்சோர்விலிருந்து இலகுவாக வெளியேறிடலாம். உளவியல் அமர்வின் போது இந்த கேள்விக்கு பதிலளிப்பதன் மூலம் பெரும்பாலான தகவல்களை விரைவாக சேகரிக்க முடியும். 

மனச்சோர்விற்கு காரணங்களாக இதில் சிலதோ அல்லது அனைத்துமாக இருக்கலாம்:

1. வாழ்க்கை முறை (life style factors) காரணிகள்: உடற்பயிற்சியின்மை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்க வழக்கங்கள், மோசமான தூக்கப் பழக்கம், சிகரெட், ஆல்கஹால், சில வகையான மருந்துகள், சமூகத்திலிருந்து தனிமைப்படுதல். 

2. தற்போதைய மனஅழுத்தங்கள் (Stressors) உறவு முறை சிக்கல்கள், சுகாதாரப் பிரச்சினைகள், நிதி சிக்கல்கள், பணி (தொழில்) சிக்கல்கள், உடல் சூழல் மற்றும் கொடுமைப்படுத்தப்படுதல், பாரபட்சம் காட்டுதல்,உடல் மற்றும் பிற காரணிகளால் ஏளனம் செய்யப்படுதல் மற்றும் சமூக பாகுபாடு போன்ற சமூக காரணிகள். 

3. கடந்த காலம் தொடர்புடையவை – அதிர்ச்சி மற்றும் விபத்துகள், பேரழிவுகளுக்கும் முகம் கொடுத்த அனுபவம் சார்ந்த நினைவுகளின் போது “வேகஸ் “நரம்பு ” செயற்படாமையால் எதிலும் நாட்டமின்மை, ஊக்கமின்மை, சோம்பல் ஏற்படலாம். 

4. வாழ்க்கை முறையில் திடீரென ஏற்பட்ட விலகல் (Life style changes) உடற்பயிற்சி, உறவுகள், தொழில், பொழுது போக்குகளிலிருந்து திடீரென-சடுதியாக விலகுதல், போதைப்பொருள் பயன்பாடு 

5. வாடிக்கையாளரின் கடந்தகால வரலாறு (Past history), பெற்றோர் அல்லது பராமரிப்பாளர்களிடமிருந்தான புறக்கணிப்பு அல்லது துஷ்பிரயோகம் போன்வை நிகழ்கால உறவுமுறை சிக்கல்களை ஏற்படுத்தலாம்.

சுயம் பற்றிய தாழ்வான எண்ணங்கள் (self judgement ) ஆழமாக வேரூன்றிய தவறான எண்ணங்கள், attachment styles போன்றன உறவுகளில் சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. பிறரை திருப்தி படுத்துவதற்காக அல்லது சுய தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவிய முரணான நடத்தைகள், மிகை எதிர்ப்பார்ப்பு (fawning, people pleasing, perfectionism) என்பவையும் மனச் சோர்வினை ஏற்படுத்தக்கூடியவை. 

மேற்குறிப்பிட்ட விடயங்களில் ஒன்றோ பலவோ ஒருவரது உளவியலில் மாற்றங்களை ஏற்படுத்தலாம். இந்த வகையான நுண்ணறிவு சார்ந்த வேலைகளை குறுகியதாகவும் இனிமையாகவும் வைத்திருப்பதன் மூலம் புதிய திறன்களை வளர்ப்பதில் இம்முறை பெரிதும் துணை புரியும்.

  • உங்கள் வாழ்க்கையில் இந்த சவால்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள்.
  • இந்த கடினமான எண்ணங்களையும் உணர்வுகளையும் காண்பித்திருக்கிறீர்கள். அல்லது
  • உண்மையாகவே வாழ்க்கை வேதனையானது.
  • மனித மனம் இயற்கையாகவே வலியை அதிகரிக்கும் அல்லது பெரிதாக காண்பிக்கும். இவை இரண்டும் இணையும் போது நீங்கள் செய்த காரியங்கள் வாழ்க்கையை இன்னும் மோசமாக்குகின்றன என்பதை உணர்த்துதல் அவசியமாகின்றது. 

இவ்விடயங்களை மாற்றியிருக்கலாமோ? வேறு விதமாக நடந்திருக்கலாமோ? என்று எண்ணுவதிலிருந்து இயன்றவரை வெளியாகி கடந்த காலத்தை பூரணமாக ஏற்றுக் கொள்வதன் மூலம் குற்றவாளி மனப்பான்மையிலிருந்து விலகி சுய இரக்கத்தை ஏற்படுத்தச் செய்து சுயத்தை ஏற்றுக் கொள்வதனூடாக மனச் சோர்வை வெற்றி கொள்ளலாம். 

இன்றைய வாழ்வை நேற்றே கடந்து போன ஒரு நிகழ்ச்சியிடம் அல்லது சம்பவத்திடம் விடும் போதுதான் மனம் பேதலிக்கிறது. நினைவுகள் ரம்மியமாகவோ கசப்பாகவோ இருக்கலாம். இன்றைய நாளில் நுழையும் போதே ,நேற்றைய நினைவுகளை தொலைத்து விடுவதன் மூலம் உள்ளம் ஆரோக்கியமாக இருக்கும். 

பௌசுனா இஸதீன் BSc Psych உளவியலாளர்/ NLP practitioner