



உலூ பெக் (Ulugh Beg) உலகப் புகழ் பெற்ற தைமூர் வம்சத்தில் 15 ஆம் நூற்றாண்டில் பிறந்தார். தைமூரின் வம்சத்தில் பிறந்த போதும் தனது அறிவுக் கூர்மை மூலம் புகழ் பெற்றார். வானியல் மற்றும் கணிதத்தில் அன்றைய நாளில் முதன்மையானவராக திகழ்ந்தார்.
அலெக்சி லினோவோவும் (Alexei Leonov) ஒரு ரஷ்ய வானியல் ஆய்வாளர். அலெக்சி லினோவ் 1965 மார்ச் 18அன்று உலகின் முதல் மனிதனாக வளி மண்டல வெளியில் நடந்தார். அலெக்சி லினோவோவும் அவருக்கு இணையான அமெரிக்க விண்வெளி வீரர்களும் உலூ பெக்கை உருவாக்கிய சமர்கந்த்தை (Samarkand) பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். இன்றைய உஸ்பெக்கிஸ்தான் நாடுதான் சமர்கந்த் என்றழைக்கப்பட்டது. தலை சிறந்த வானியலாளராக உலூ பெக்கை வடிவமைத்த நகரம் சமர்கந்த.
தைமூர் மத்திய ஆசியாவை வெற்றி கொண்ட மாவீரன். தைமூரின் மகன் ஷாருக்குக்கு ஒரு மகன் பிறந்த செய்தியை கேட்ட தைமூர், மர்தின் (Mardin –தென் கிழக்கு துருக்கியில் உள்ள ஒரு) நகரத்தின் மீது நடத்த திட்டமிட்டிருந்த தாக்குதலை நிறுத்தி விட்டான். தனது பேரன் உலூ பெக் மிர்சா என்ற முஹம்மது தராகாவின் பிறப்பை கொண்டாடும் பொருட்டு அந்த நகரத்து மக்களுக்கு மன்னிப்பு வழங்கியதாக தைமூரின் வரலாறு கூறுகிறது.
பேரன் உலூ பெக் மீது தைமூர் அளவில்லாத பாசம் வைத்திருந்தார். உலூ பெக் 10 வயதான போதே மணம் முடித்து வைத்தார். உலூ பெக் 16 வயதான போது துருக்கிஸ்தானின் சுல்தானாக பொறுப்பேற்றார். ஆனால், உலூ பெக் புகழடைந்தது அவர் தைமூரின் வாரிசாக பிறந்ததற்காகவோ, அவர் சிறந்த ஆட்சியாளராக விளங்கியதற்காகவோ இல்லை. அவர் காலத்தில் அவர் ஒரு தலை சிறந்த வானியல் அறிவியல் அறிஞராக இருந்ததால் தான் அவரது பெயர் புகழ் பெற்றது.
தைமூர் அரண்மனையில் உலூ பெக் உயர் கல்வியைப் பெற்றார். உலூ பெக் சிறந்த இசைக் கலைஞராக, தத்துவ அறிஞராக, மார்க்க அறிஞராக, வானியல் மற்றும் கணிதத் துறைகளிலும் வல்லுநராக விளங்கினார்.
இஸ்லாமிய நாட்காட்டியும், தொழுகை நேரங்களும் சந்திரக் கணக்கில் இருந்து கணக்கிடப்பட்ட காரணத்தால் 9 ஆம் நூற்றாண்டிலேயே முதலாவது வானியல் ஆய்வகம் முஸ்லிம் உலகத்தில் தொடங்கப்பட்டது. அந்த காலத்தில் முஸ்லிம்கள் வானியல் துறையிலும் கணிதத் துறையிலும் உச்ச நிலையில் இருந்தனர்.
வானியல் ஆய்வகங்கள் முஸ்லிம் உலகின் அந்தலூசியா (இன்றைய ஸ்பெயின்) நாட்டின் கார்தூபா (Qurtuba) மற்றும் தொலேடோ (Toledo) நகரங்களில் இருந்து எகிப்தின் கெய்ரோ, பாரசீகத்தின் பக்தாத் நகரங்கள் வரை பல நிலைகளில் இருந்தன. உலூ பெக் ஆட்சிக் காலத்தில் நூற்றுக் கணக்கான வானியல் அறிஞர்களும் கணித மேதைகளும் முஸ்லிம் உலகில் உருவாகி வந்தனர்.
இதில், மரகா (Maragha) வானியல் ஆய்வகம் உலூ பெக்கின் கவனத்தை ஈர்த்தது. உலூ பெக், ஜம்ஷித் அல் காஸி மற்றும் காதி ஜதா அல் ரூமி இரு பெரும் வானியல் அறிஞர்களின் மாணவர்களாக இருந்தார். உலூபெக்கின் படையெடுப்பும் வெற்றியும் நாடுகளை நோக்கியதைக் காட்டிலும் பெரும்பாலும் வானம், தாரகை(நட்சத்திரம்) மற்றும் கோள்களை நோக்கியதாகவே இருந்தது. உலூ பெக் தனது ஆட்சி காலத்தில் அதிகப்படியாக போர்களை தவிர்த்து வந்தார். தனது செல்வங்கள் முழுவதையும் கலை, அறிவியல் மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்காக செலவிட்டு வந்தார்.
உலூ பெக் 1417 ஆம் வருடம் மதரசா ஒன்றை நிறுவினார். கணிதம் மற்றும் வானியல் ஆகியவை அந்த மதரஸாவில் முன்னுரிமை பெற்ற துறைகளாகும். சமர்கண்டில் உலூ பெக் கட்டிய அந்த மதரசா ரெஜிஸ்தான் சதுக்கத்தில் (Registan Square) இன்றும் இருந்து வருகிறது.
அடுத்த மூன்றாண்டுகள் கழித்து 1420ல், சமர்கந் நகரத்துக்கு வெளியில் ஒரு மலை மீது சுமார் 30 மீட்டர் உயரத்தில் சொந்தமாக ஒரு வானியல் ஆய்வகத்தை நிறுவினார். அந்த ஆய்வகம் சூரியன், சந்திரன் இரண்டின் போக்கையும் ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டு கட்டப்பட்டது.
மத்திய கால வரலாற்றில் இது மிகப்பெரிய ஆய்வகங்களில் மெச்சத்தக்க ஒன்றாக இருந்தது. டைல்ஸ் மற்றும் மார்பிள் கற்களால் அலங்கரிக்கப்பட்டும் இருந்தது.
உலூ பெக் காலத்தின் மிக குறிப்பிடத் தக்கதாக சொல்ல அந்த நாளின் மிகப்பெரிய கோண அளவி (Fakhri sextant) ஒன்று இருந்தது. அந்த நேரத்தில், உலகின் மிகப்பெரிய வானியல் ஆய்வுக் கருவியாக அதுவே இருந்தது. அது 40 மீட்டர் ஆரை விட்டம் கொண்டதாக இருந்தது. இந்த ஆரை விட்டம் வானியலின் அடிப்படை மாறிலிகளை உறுதிப்படுத்தியது.
இந்த கோண அளவியின் வெற்றிக்கு முக்கிய காரணம், அது அளவில் பெரியதாக இருந்ததால் அளவீட்டை துள்ளியமாக காட்டியது. ஆகச் சிறந்த முஸ்லிம் வானியல் அறிஞர்கள் அங்கே ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார்கள் என அறிய முடிகிறது.
கோள்களை, நட்சத்திரங்களை நுண்நோக்கும் கருவிகளைக் கொண்ட மிகப்பெரிய சில ஆய்வகங்கள் முஸ்லிம் உலகில் தான் இருந்தன.
ஆண்டுதோறும் நகரும் 5 பிரகாசமான கோள்கள் பற்றிய ஆராய்ச்சி முடிவுகள் உலூ பெக் காலத்தில் தான் நடந்தன. உலூ பெக்கின் ஆராய்ச்சி முடிவுகள் தொழில்நுட்ப உதவியோடு கண்டறியப்பட்ட நவீன கால வானியல் ஆய்வுகளோடு ஒத்துப்போகின்றன என்பதை அவரது கால ஆய்வுத் தகவல்களில் இருந்து அறிய முடிகிறது……..
































