உளவியலின் தந்தை (ஜகரிய்யா அல்-ராஸி) (கிபி. 865-925)

“ஜகரிய்யா  அல் ராஸி” என்று பிரபலமாக அறியப்படும் அபூபக்கர் முஹம்மது இப்னு ஜகரிய்யா அல் ராஸி லத்தின் மொழியில் rhazes என மேற்கத்திய உலகில் அழைகின்றனர்.

9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் பல்துறை நிபுணர்(polymath) என்றே இவரைக் கூறலாம். ஏனென்றால் இவர் ஆய்வு செய்யாத துறைகளே இல்லை. பல துறைகளிலும் தனது கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார்.

இசை, கணிதம், தத்துவம், வேதியியல் மெட்டா பிஸிக்கஸ் (metaphysics) ஆகிய துறைகளில் ஆழ்ந்த அறிவுடைய இவர். உளவியல், குழந்தை மருத்துவம், எத்தனால் (ethanol) என்னும் ரசாயனம் ஆகிய துறைகளின் தந்தையாக விளங்குகிறார். இருப்பினும் “உளவியலின் தந்தை” என்று நான் தலைப்பு சூட்டினேன். ஐரோப்பியர்கள் இவ்வாறே இவரை அழைக்கின்றார்கள்.

முஹம்மது இப்னு ஜகரிய்யா அல் ராஸி 28 ஆகஸ்ட் கி.பி. 865இல் பாரசீகத்தில் (இன்றைய ஈரான் நாட்டின் டெஹ்ரானுக்கு அருகில்) அமைந்துள்ள எல்பர்ஸ் மலைத்தொடரின் தெற்கு சரிவில் உள்ள “ரே” என்னும் ஊரில் பிறந்தார்.

ஆரம்ப கால வாழ்வு

ஜகரிய்யா அல் ராஸி ஆரம்ப காலத்தில் இசைக்கலைஞராகவும் பாடகராகவும் இருந்தார். பின்னர் தனது ஆர்வத்தை இசையிலிருந்து வேதியியல் துறைக்கு மாற்றிக் கொண்டார்.

வேதியியல் துறையில் சல்பியூரிக் அமிலம் (sulphuric acid) பற்றிய ஆய்வு, எத்தனால் (ethanol), மண்ணெண்ணெய், ஆல்கஹால் மற்றும் பல கலவை இரசாயனங்களை ஆய்வு செய்தவர். அதன்காரணமாக “ரசவாதி(alchemist)” என அழைக்கப்பட்டார்.

30 வது வயதில் ஒருமுறை வேதிப்பொருட்களை பரிசோதனை செய்யும்போது கண்ணில் பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக வேதியியல் துறை சார்ந்த ஆய்வுகளை நிறுத்திவிட்டார். மருத்துவரையும் கண் பாதிப்பைக் குணப்படுத்தும் மருந்தையும் தேட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதுவே அவர் மருத்துவப் படிப்பை தொடங்கக் காரணம் என்று அல் பிரூனி, பெஹாகி ஆகியோர் கூறுகிறார்கள்.
“அலி இப்னு சஹ்ல் ரப்பான் அல் தபரிடம்” அல்-ராஸி மருத்துவப் படிப்பைப் பயின்றார். இதன் பின்னர் மருத்துவத்தையே தனக்கு விருப்பமான துறையாக தேர்ந்தெடுத்தார்.

அவரது சொந்த நகரமான ரேயில் பிரபலமான மருத்துவராக இருந்த இவர், ஆரம்ப  காலத்தில் மருத்துவ பரிசோதனை ஆய்வாளராக இருந்தார், பின் கலீஃபா மன்சூர் ஆட்சியின் போது ரேயுடைய மருத்துவமனையின் இயக்குனர் ஆனார்.

கலீஃபா மன்சூர் இறந்த பின் அல்-ராஸி கி.பி.901இல் பாக்தாத் சென்றார். அங்கு கி.பி.805 இல் கலீஃபா ஹாரூன் அல்-ரஷீத் கட்டிய, உலகப் புகழ் பெற்ற, முதல் பொது மருத்துவமனை பீமாரிஸ்தானின் (Bimaristan) தலைமை இயக்குனராக பொறுப்பு வகித்தார். 

பின்பு கி.பி.907இல் அல்-ராஸி தன் சொந்த ஊரான ரேவுக்கு திரும்பினார். அங்கு பல மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியை கற்றுக்கொடுத்தார்.

அல்-ராஸி மிகவும் தாராளமான மனிதர், அவரிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் மனிதாபிமானத்துடன், இரக்கத்துடன் நடந்துகொள்வார், ஏழைமக்களுக்கு கட்டணம் இல்லாமல் முழு சிகிச்சை அளித்தார். 

ஜகரிய்யா அல் ராஸி பாரசீகம், கிரேக், இந்திய மருத்துவ அறிவையும் நன்கு அறிந்திருந்தார். மருத்துவத் துறையில் பல கண்டுபிடிப்புகளையும் முன்னேற்றங்களையும் செய்தார். ஆகவே இவரை ஐரோப்பிய உலகம் “மருத்துவருக்கெல்லாம் சிறந்த மருத்துவர் “ (docter of docters) என்று அழைக்கின்றது.

வேதியியலில் இவரது சாதனைகள் :

  • விஞ்ஞானிகள் அபூ பக்கர் அர்-ராஸியை நவீன வேதியியலின் தந்தை என்று கருதுகின்றனர். உலோகம், தாவரம், விலங்குகள் மற்றும் வகையீடு பொருட்கள் என நான்கு வகைகளாக இவர் அறிந்த பொருட்களை பிரித்தார். இவர் உலோகங்களை அவற்றின் பண்புகளுக்கு ஏற்ப ஆறு வகைகளாகப் பிரித்தார்.1. Four spirits (AL-ARWAH),2.seven bodies (AL-AJSAD),3.thirteen stones (AL-AHJAR),4. Seven vitriols (AL-ZAJAT),5. Seven borates,6. Eleven salts (AL-AMLAH).
  • அபூ பக்கர் அல்-ராஸி சல்பியூரிக் அமிலத்திற்கு விளக்கம் கொடுப்பதில் முதன்மை விஞ்ஞானியாக அறியப்படுகிறார். இவர் அதை விட்ரியோல் எண்ணெய் அல்லது பச்சை விட்ரியோல் என்று அழைத்தார். தனது ஆய்வகத்தில் வேறு சில அமிலங்களையும் தயார் செய்தார், அவற்றைத் தயாரிப்பதில் அவர் பின்பற்றிய முறைகள் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன.
  • 875 இல் ஒரு நாள், முகமது ஜகரிய்யா அல் ராசி தாமிரத்தை(copper) தங்கமாக (gold) மாற்ற முயன்றபோது தனது ஆய்வகத்தில் ஆல்கஹால் தயாரிப்பது எப்படி என்று கண்டுபிடித்தார்.
  • புளித்த மாவுச்சத்து மற்றும் சாக்கரைன் பொருட்களை காய்ச்சி ஆல்கஹால் பிரித்தெடுத்த முதல் ரசவாத விஞ்ஞானி இவரே.
  • சோடா மற்றும் பொட்டாசியத்தை வேறுபடுத்திய முதல் விஞ்ஞானி இவர்தான். அவர் வினிகரில் இருந்து சில நச்சு திரவங்களையும் தயார் செய்தார்.
  • இரசாயனத்தை பயன்படுத்தி மருந்து தயாரிக்கும் முறை மற்றும் அந்த ரசாயனம் கலந்த மருந்தை நோயாளிகளின் உடலில் செலுத்துவதால் ஏற்படும் விளைவுகள் இவற்றைப் பற்றி முதன்முதலில் ஆராய்ந்த விஞ்ஞானி ஆவார்.
  • தாவரங்கள் விலங்குகள் மற்றும் தாதுக்களில் இருந்து பெறப்படும் பொருள்களில் இருக்கும் மருத்துவக் கூறுகளை எவ்வாறு மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்துவது என்று விளக்கங்களை கூறினார்.
  • ராஸி பல இரசாயனக் கருவிகளை உருவாக்கியுள்ளார், இவை இன்றுவரை பயன்பாட்டில்  உள்ளன. இவர் வடிகட்டுதல் மற்றும் பிரித்தெடுத்தல் முறைகளை இவர் முழுமைப்படுத்தியதாக அறியப்படுகிறது.

ரசவாதம்பற்றியராஸியின்புத்தகங்கள்

  • Modkhele Taalimi
  • Elaleh Ma’aaden
  • Isbaate Sanaa’at
  • Ketabeh Sang
  • Ketabe Tadbir
  • Ketabe Aksir
  • Ketabe Sharafe Sanaa’at
  • Ketabe Tartib, Ketabe Rahat,( The Simple Book)
  • Ketabe Tadabir Ketabe Shavahed
  • Ketabe Azmayeshe Zar va Sim (Experimentation on Gold)
  • Ketabe Serre Hakimaan
  • Ketabe Serr (The Book of Secrets) 
  • Ketabe Serre Serr (The Secret of Secrets)
  • The First Book on Experiments 
  • The Second Book on Experiments
  • Resaale’ei Be Faan
  • Arezooyeh Arezookhah
  • A letter to Vazir Ghasem ben Abidellah
  • Ketabe Tabvib

இவரை பற்றி விரிவாக எழுத வேண்டுமானால் ஒரு ஒரு புத்தகமே எழுதலாம். அவ்வளவு விசயங்கள் இவரைப்பற்றி கூறவேண்டிருக்கிறது. என்னால் முடிந்தவரை எவ்வளவு சுருக்கமாக கூறமுடியுமோ அவ்வளவு சுருக்கமாக இந்த கட்டுரையில் கூறியுள்ளேன். இவர் மருத்துவத்திலும், உளவியலிலும் ஆற்றிய சாதனைகளை இதன் தொடர்ச்சியாக பாப்போம்.

முந்தைய கட்டுரையில் தவரவியலின் தந்தை என அறியப்படும் அபூஹனீபா தினாரியைப் பார்த்தோம். இபோது மருத்துவரான அல்-ராஸியைக் பார்க்கின்றோம். ஏனென்றால் தாவரம் வேறு மருத்து வேறு கிடையாது. இன்றுள்ள கல்வி முறையில் ஒவ்வொரு துறையையும் தனித்தனியாக உள்ளது. தாவரவியல், மருத்துவம், விவசாயம் ஆகிய துறைகள் வேறு வேறாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது. மருத்துவம் விவசாயம் இரண்டுக்குமே அடிப்படை தாவரம் தான்.

நன்றாக சிந்தித்து பாருங்கள் அசைவ உணவுகள் தவிர்த்து நாம் உணவுக்கு பயன்படுத்தும் அனைத்துமே அல்லாஹ் நமக்களித்த இயற்கை தாவர உணவுகள் தான். அதுபோல அலோபதி மருந்துகள் தவிர்த்து மற்ற நம் பாரம்பரிய இயற்கை மருத்துவத்தில் பயன்படுத்தப்படுவது மூலிகை தாவரங்கள் தான். அதனால் தாவரவியல், மருத்துவம், விவசாயம் இம்மூன்றையும் தனித்தனியாக பிரிக்க முடியாது. உதாரணமாக :

1. ஆடாதோடையை  உலர்த்தி பொடியாக்கினால் அது இயற்கை மூலிகை பொடி.

2. ஆடாதோடை இலையை சாறு எடுத்து அதை நெய்யுடன் கலந்து வைத்தால் அது” சித்த மருத்துவம்”.

3. ஆடாதோடை இலையை வெல்லம் சேர்த்து பக்குவப்படுத்தி அரிஷ்டமாக்கினால் அது “ஆயுர்வேதம்”

4. ஆடாதோடை இலையை சாறு எடுத்து அதில் ஆல்கஹால் கலந்து மருந்து தயாரித்தால் அது “ஹோமியோபதி”

5. ஆடாதோடை இலையை பக்குவப்படுத்தி சர்பத் பதத்தில் செய்தால் அது “யுனானி”

இப்படி மருத்துவத்தில் தாவரவியல் முக்கிய பங்கு வகிக்கிறது. அதைபோல் நாம் உணவாக சாப்பிடும் தாவரத்தை பூமியில் விளைவித்தால் அது விவசாயம். எனவே இம்மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவே உள்ளது. ஆகவே நாம் இவற்றை வேறுபடுத்தாமல் இந்த மூன்று துறையிலும் சாதித்த விஞ்ஞானிகளை பார்ப்போம்.