“கோபத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்” கட்டுரை நல்ல வழிகாட்டுதலை வழங்கியது. ‘கோபத்தை ஏற்படுத்தக் கூடிய சந்தர்ப்பத்தை, அவசரமாக ஆவேசமாக பேசி விட்டு அதைப்பற்றி வருந்துவதை விட கோபம் வருவதற்கு முன் தெளிவாக யோசித்து உணர்ச்சியைக் கையாள வேண்டும். உங்களுக்கு நேரம் ஒதுக்குங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள் தனிமையில் அமைதியாக சில நிமிடங்கள் எரிச்சலோ கோபமோ இல்லாமல் தங்களை தாங்களே தயார் படுத்துங்கள். ஏனெனில் உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த கற்றுக்கொள்வது அனைவருக்கும் ஒரு சவாலாகும். கோபத்தை கட்டுப்படுத்துவது பற்றி மிக அழகாக தெளிவாகவும் கூறிய கட்டுரையாசிரியருக்கு நன்றி.
ஆஸ்லீனா செய்யது முகமது,
……………………………………………………………………………………………………………….
கருவறைப் பாடங்கள் கட்டுரை ஒவ்வொரு ஆணும் பெண்ணும் படிக்க வேண்டிய முக்கியமான கட்டுரை. கருவறை அமைதியும் அறிவும் நிறைந்த ஒரு பூங்காவனம். கருவறையில் உள்ள குழந்தை 23 வாரங்களை அடைந்ததும் தாயின் குரலையும் பிற ஒலிகளையும் கேட்க முடிகிறது. அதனால் கருவுற்ற காலத்தை பயனுள்ளதாக மாற்ற வேண்டும். குர்ஆன் ஓதுதல் நபிகளாரின் வரலாறு, வழிகாட்டுதல் படித்தல் நபிகளாரின் வாழ்க்கை வழிகாட்டுதலை முறையை தொடர்ந்து வாசிக்கவும் கேட்கவும் வேண்டும். ஒரு பெண் கருவுற்ற காலம் மகிழ்ச்சியும் சந்தோசமும் நிறைந்த அழகான தருணங்கள்.
ஷப்ரின் முஸ்தபா,
………………………………………………………………………………………………………………………….
ஜி.அத்தேஷ் எழுதிய ‘டிஜிட்டல் மயமாகும் மின்னாற்றல் ஏற்படுத்தும் தாக்கங்கள்’ கட்டுரை சரியான தரவுகளோடு சிறப்பாக தொகுக்கப்பட்டிருந்தது.
…………………………………………………………………………………………………………………………………………….
காட்டை உருவாக்கிய பிரேசில் நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் செபாஸ்டினோ சல்கடோ மற்றும் அவரது மனைவி லூலியா டெலூயிஸ் ஆகியோர் இன்றைய தலைமுறைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. அவர்களை முன்மாதிரியாக எடுத்து இன்றைய தலைமுறை இயற்கை வளங்களை பாதுகாத்து வளர்த்தெடுக்க முன்வரவேண்டும்.
………………………………………………………………………………………………………………………………………….
பனூ மூஸா சகோதரர்கள் பற்றிய கட்டுரை அருமையாக இருந்தது. மத்திய கால வரலாற்றில் தத்துவம், கலை போன்ற
துறைகளில் மட்டுமே ஆய்வுகள் நடைபெற்றன என்று இதுநாள் வரை நினைத்துக் கொண்டிருந்த நிலையில் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் ஆகிய துறைகளிலும் மெச்சத்தக்க ஆய்வுகளும் கண்டுபிடிப்புக்களும் நடந்திருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.
அனஸ் ரவ்லதுன் நிஷா, திருப்பூர்


































