சடவாதம்

INTUITION இன் துணையில்லாமல் சுதந்திரமான சிந்தனையை பகுத்தறிவு (Rational) என்கிறோம். Intuitionனை முழுமையாக நிராகரிக்கிற முறைமையை தீவிர பகுத்தறிவுவாதம் எனலாம்.

பகுத்தறிவு என்பது இறைமறுப்பு சிந்தனை அல்ல! இறைவன், மறுஉலகு, ஆன்மா ஆகியவற்றை நிராகரிக்கிற நம்பிக்கைதான் இறைமறுப்பு சிந்தனை.

அனைத்து நம்பிக்கைகளையும் சந்தேகத்துடன் பார்ப்பதும், புலன்களிலிருந்து பெறும் அனுபவங்கள், சிந்தனை, அறிவு, மூளை என்பவற்றை பயன்படுத்தி உண்மையை கண்டடைவதற்கான முயற்சியை இங்கு நாம் பகுத்தறிவு என்று கூறி வருகிறோம். புராதன இந்தியாவில் சார்பாக தத்துவத்தை இதன் முன்னோடியாக கருதுகின்றனர். 

 கிரேக்க சிந்தனையாளரான அனக்ஸ் கோரஸ் (BC 428) “பிரபஞ்சம் என்றென்றும் இருந்தது என்றும் அதற்கு ஆரம்பம் இல்லை என்றும் கூறி வந்தார். இறைமறுப்பாளர்களின் கருத்தியல் இது.
உண்மையில் இருப்பையும் உண்மையில் மறுத்தவர் இவர். நவீன பௌதிகவாதிகளின் தலைவரான ரிச்சர்ட் டாக்கின்ஸ் கூட சந்தேகவாதி என அவரதுதி காடு டில்யூச(The God Delusion)னூடாக பயணித்தால் புரிந்துகொள்ளமுடியும்.

கடவுள் உண்டு என்றோ இல்லை என்றோ மனித அறிவால் நிரூபிக்க முடியாது என்பது அவரது கருத்தாக இருந்தது.
ஆத்திகவாதிகள் கடவுள் உண்டு என நம்புகின்றனர். நாத்திகர்கள் இறைவனின் இருப்பை மறுக்கின்றனர்.
ஆனால் சந்தேகவாதிகள் இரு வாதங்களையும் நிரூபிக்க முடியாது என நம்புகின்றனர்.

சந்தேகவாதிகளில் கூட நாத்திக சந்தேகவாதிகள் கடவுள் இல்லை என நம்பவும். ???

ஆனால் இருப்பதற்கான சாத்தியங்களை மறுப்பவர்களும் தான் (Agnostic atheism). ஆனால் ஆத்திக சந்தேகவாதிகள் (Agnostic theism) கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால் நிரூபிக்க முடியாது என்று நம்புகிறார்கள். இன்னொரு வகையினர் நடைமுறை சந்தேகவாதிகள் (Apathetic (Pragmatic) Agnosticism) இறைவன் இருக்கிறானா இல்லையா என்பது பிரச்சினை இல்லை என்று கருதுவார்கள்.

இன்னொரு வகையினர் உறுதியான சந்தேகவாதிகள் (Strong agnosticism) கடவுள் உண்டா இல்லையா என்பதை நிர்ணயிக்க முடியாது என்பவர்கள். இறுதியில் ஒரு பிரிவினர் பலவீனம் சந்தேகவாதிகள் (Weak Agnosticism) கடவுள் உண்டா இல்லையா என்பதை இப்போது நிர்ணயம் செய்ய முடியாது எதிர்காலத்தில் கண்டடையலாம் எனும் வாதம் உடையவர்கள். Materialism – சடவாதம் – பொருள்முதல்வாதம் எனும் சொல்லாக்கம் இவர்கள் அனைவரையும் உட்கொள்ளும் ஒரு பதம். 

நாத்திகர்கள் வழக்கமாக உயர்த்துகிற ஒரு சந்தேகம்.
உண்மையில் யாராலும் உருவாக்கப்படாத ஒன்றுதான் கடவுள். இஸ்லாம் முன்வைக்கிற அல்லாஹ் பிறந்தவனோ, பிறப்பித்தவனோ அல்ல என்றால் அப்போது இறைவனை உருவாக்கியது யார்? Uncaused Cause (காரணமில்லாத காரணம்) தான் இறைவன்.
பிற காரணங்களாலோ கரங்களாலோ உருவாக்கப்படாத இறைவனை நம்புங்கள் என கூறும்போது பகுத்தறிவாளர்கள் கேட்பது இறைவனை படைத்தது யார் என்பது தான்.

உண்மையில் நீலநிறத்தில் மணம் என்ன? ஏன் ரயில் பறப்பதில்லை? என்ற கேள்விகளின் அபத்தம் தான் அது.
இன்னொன்று கடவுளை படைத்தது யார்? என்ற சந்தேகத்தின் சாராம்சம் இறைவனுக்கு முன்னால் ஒரு படைப்பாளி என்ற கருத்துதான். 

முன்பு என்பது நேரத்தோடு தொடர்புடையது. பிரபஞ்சங்களில் சலனத்தோடு தொடர்புடையது அது. சலனத்தின் அளவு மானி அது.
 Solar System (சூரிய குடும்ப அமைப்பின்) படி தான் பூமியில் இரவு பகல் அனுப்பப்படுகிறது. அறிவியல் ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட நேரம் என்பதின் ஆதாரம் சராசரங்களின் சலனங்கள் தான்.
அப்போது மத நம்பிக்கைப்படி நேரமும் இறைவனின் படைப்பு தான். அங்ஙகனம் படைப்புக்கு முன்னால் படைப்பாளன் இருந்திருக்க வேண்டும் என்பது அதாவது இறைவனுக்கு முன்னால் என்ற ஒரு நிலை இல்லை. அதுதான் அனாதி என்பது.

பொதுப்புத்தியில் பதிவான கருத்து மதம் அறிவியலுக்கு எதிரானது, நாத்திகமும் பகுத்தறிவும் அறிவியல்பூர்வமானது என்பதும் தான்.
 ஆனால் உண்மை அதுவல்ல. ஒரு விஷயத்தின் அனைத்து சாத்தியங்களையும் பயன்படுத்தி தங்களது கருத்தியலுக்கு வலு சேர்க்க பகுத்தறிவுவாதம் முனைகிறது.
அறியாததன் இருத்தலை மறுப்பது என்கிற திட்டத்தை நிரந்தரமாகச் செய்கிறது. குறியீடுகளினூடாக அறியாதவற்றுக்கான ஒரு பரிசோதனைப் பயணம் பௌதீக அறிவியல் மூலம் அவர்கள் புதியவற்றை உற்பத்தி செய்வதில்லை. ஏற்கனவே இருப்பவற்றிற் சென்றடைகின்றனர்.

ஐசக் நியூட்டன் புவியீர்ப்பு விசையை உருவாக்கவில்லை. அதை கண்டடைந்தார் அணு ஆற்றலும் சார்பியல் தத்துவங்களும் அப்படித்தான்.
அறிவியல் என்பது ஒரு முறையியல் (Methodology) மட்டும் தான். அது ஒரு கருத்தியல் (Ideology) அல்ல.
சிலையை எடுத்து அதற்கு உள்ளே கடவுள் உண்டா? இல்லையா? என்று கூற அறிவியலுக்கு முடியாது. அது அறிவியலின் வேலையும் அல்ல.
பண்டைய நாத்திகர்கள் தத்துவ (Philosophy)த்தான் ஆதாரமாக்கிப் பேசினார்கள்.
ஆன்மீகமும், அழகியலும், பௌதீகமும் அனைத்தும் தத்துவம் (Philosophy) இன்றி கூற முடியாது. அழகியலால் புரிய வேண்டிய மார்க்கத்தை மற்றொரு மார்க்கத்தில் தேடுவதும் மடமை.