முதல் தலைமுறை மனிதர்கள்-7

நீதிபதி எம்.எம் இஸ்மாயில்

சேயன் இப்ராகிம்

நாகூர் தமிழக முஸ்லிம்களின் பழம் பெரும் பதியாகும். இந்த ஊரின் பெயரைக் கேட்டவுடனேயே அங்கிருக்கும் மகான் சாகுல் ஹமீது பாதுஷா நாயகத்தின் தர்கா நமது நினைவிற்கு வரும். தமிழக கடற்கரைப் பகுதிகளில் அவர்கள் ஆற்றிய தீன் பணிகள் நினைவிற்கு வரும். “ஆரிபு நாயகம்” உள்ளிட்ட எண்ணற்ற இலக்கியங்களைத் தந்த குலாம் காதிர் நாவலர் நினைவுக்கு வருவார். சிறந்த சிறுகதை ஆசிரியரும்இசிங்கப்பூரில் “சிங்கை நேசன்” என்ற இதழை நடத்தியவருமான சி.கு.மகதூம் சாகிபும் நாகூரில் பிறந்தவரே. முதல் முஸ்லிம் நாவலாசிரியரும்இ பெண் எழுத்தாளருமான சித்தி ஜுனைதா பேகம்இ கவிஞர் சலீம்இபேராசிரியர் நாகூர் ரூமி உள்ளிட்ட எண்ணற்ற இலக்கியவாதிகளையும்இ எழுத்தாளர்களையும்இ கவஞர்களையும் தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்கிய பெருமை இந்த மண்ணுக்குண்டு. நமது நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் இசை முரசு ஹனீபாவின் பிறந்தகம் நாகூர் இல்லையென்றாலும் அவர் வாழ்ந்து சிறந்தது நாகூரிலேயே. அதனால் தான் அவர் நாகூர் ஹனீபா என அறியப்பட்டார். அதே நேரத்தில் நாகூரில் பிறந்திருந்தும் அந்த ஊரால் அடையாளப்படுத்தப் படாத பெருந்தகையாளர் ஒருவர் உண்டு. அவர் தான் சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாகவும்இ மிகச் சிறந்த இலக்கியவாதியாகவும் திகழ்ந்த எம்.எம்.இஸ்மாயில் அவர்கள்.

பிறப்பு-கல்வி

நீதிபதி எம்.எம். இஸ்மாயில் 08-02-1921 அன்று நாகூரில் முஹம்மது காசிம்-ருக்கையா பீவி தம்பதியினரின் மகனாகப் பிறந்தார். தனது தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வியை நாகூரிலும்இ நாகப்பட்டினத்திலும் கற்றுத்தேறிய அவர் சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பையும்இ பட்ட மேற்படிப்பையும் (ஆ.யு.இ)சட்டக்கல்லூரியில் சட்டப் பட்டப் படிப்பையும் கற்றுத் தேறினார். உ.வே. சாமிநாத ஐயரின் மாணவரான சந்தானம் அய்யங்கார்இ கம்பராமாயணசாகிபு என அறியப்பட்ட தாவூத்ஷா சாகிப்இ வித்வான் கிருஷ்ண மூர்த்தி ஐயர் ஆகியோர் இவரது ஆசிரியர்கள்.

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த கால கட்டத்தில் நாடெங்கும் நடைபெற்றுக் கொண்டிருந்த சுதந்திர போரட்டம் இவரைப் பெரிதும் ஈர்த்தது. காங்கிரஸ் பேரியக்கத்தின் அனுதாபியாக மாறினார். எப்போதும் கதராடையே அணிந்து வந்தார். இவரது இளமைக்கால பள்ளித் தோழர்களினல் பெரும்பாலோர் அகில இந்திய முஸ்லிம் லீகில் சேர்ந்து பணியாற்றி வந்தனர். இவரையும் அக்கட்சியில் சேரும்படி வலியுறுத்தினர். எனினும் அவர் முஸ்லிம் லீகில் சேராமல் காங்கிரஸ் ஆதரவாளராகவே தொடர்ந்து இருந்து வந்தார்.

நீதிபதி இஸ்மாயில் பள்ளிப் பருவத்திலேயே செய்தித்தாள்களையும்இ வார மாத இதழ்களையும்இ நூல்களையும் படிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். எழுதுவதிலும் அவருக்கு ஆர்வம் இருந்தது. காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும்இ சுதந்திரப் போராட்ட வீரருமான மௌலானா அபுல் கலாம் ஆஸாத் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்த அவர் 1945 ஆம் ஆண்டு அதாவது தனது 24 வயதிலேயே மௌலாவின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல் ஒன்றை எழுதினார். இதுவே அவர் எழுதிய முதல் நூலாகும். மௌலானா ஆஸாதைப் பற்றித் தமிழில் முதன் முதலில் வெளிவந்த நூலும் இதுவாகவே இருக்கக்கூடும்.

சட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்ற பின்னர்இ சென்னை சட்டக்கல்லூரியிலேயே எட்டு ஆண்டுகள் பகுதி நேர விரிவுரையாளராகப் பணி புரிந்தார். விவேகானந்தா கல்லூரியிலும் வணிகச் சட்ட விரிவுரையாளராக சில காலம் பணியாற்றினார். பின்னர் அரசின் கூடுதல் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு அந்தப் பொறுப்பை நேர்மையுடன் வகித்து வந்தார்

பல்லாண்டுகள் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றிய அவர்இ 1967 ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதி மன்றத்தின் கூடுதல் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 1969 ஆம் ஆண்டு தனது விருப்ப வேண்டுகோளின்படி சென்னை உயர்நீதி மன்ற நீதிபதியாக பணி மாற்றம் செய்யப்பட்டார். 1979 ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இப்பணியில் அவர் இரண்டாண்டுகள் இருந்தார். தமிழகத்தின் ஆளுநராகப் பணிபுரிந்த பிரபுதாஸ் பட்வாரியை அரசு பதவி நீக்கம் செய்த போது 27-10-1980 அன்று மாநிலத்தின் தற்காலிக ஆளுநராக அவர் நியமிக்கப்பட்டார். அடுத்த ஆளுநராக நியமிக்கப்பட்ட சாதிக் அலி பதவியேற்கும் வரை அவர் அப்பொறுப்பில் இருந்தார். 1981 ஆம் ஆண்டு அவர் சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி பொறுப்பிலிருந்து விலகினார். இதன் பின்னணியில் சில தார்மீக நெறி முறைகள் இருந்தன.

பொதுவாக உயர்நீதி மன்ற தலைமை நீதிபதிகளை அவர்களது விருப்ப வேண்டுகோளின் அடிப்படையிலேயோ அல்லது அவர்களைக் கலந்தாலோசித்த பின்னரோ தான் ஒரு உயர்நீதி மன்றத்திலிருந்து இன்னோரு நீதிமன்றத்திற்கு மாறுதல் செய்வது மரமாக இருந்து வந்தது. ஆனால் இந்த மரபிற்கு மாறாக 1981 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அவரை சென்னை நீதி மன்றத்திலிருந்து கேரளாவிலுள்ள திருவனந்தபுரம் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியாக தீடிரென்று மாறுதல் செய்து மத்திய அரசு உத்திரவிட்டது. பாட்னா உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி கே.பி.என். சிங் அவருக்குப் பதிலாக நியமிக்கப்பட்டார். (அப்போது திருமதி இந்திராகாந்தி பிரதமராகவும் திரு சிவசங்கர் சட்ட அமைச்சராகவும் இருந்தனர்) மேலும் மத்திய சட்ட அமைச்சகம் மாநில முதல்வர்களுக்கு அப்போது எழுதியிருந்த கடிதத்தில் தத்தமது மாநிலங்களில் கூடுதல் நீதிபதிகளாகப் பணியாற்றுபவர்களிடமிருந்து பிற மாநிலங்களிலுள்ள நீதி மன்றங்களுக்கு நியமனம் செய்யப்படுவதற்கு ஒப்புதல் கடிதங்களைப் பெற்று அனுப்புமாறும் வேண்டியிருந்தது. மத்திய அரசின் இந்த அறிவிக்;கைக்கு நீதித் துறையினர் பெரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது நீதித் துறையின் சுதந்திரத்திற்கு விடப்பட்ட அச்சுறுத்தல் எனக் கண்டனம் தெரிவித்தனர். தன்னைக் கலந்தாலோசிக்காமல் வழங்கப்பட்ட மாறுதல் உத்தரவு நீதிபதி இஸ்மாயிலுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே அவர் இது பற்றி அப்போதைய குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவி ரெட்டிக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி விட்டு ஐந்து மாத காலம் விடுப்பில் சென்றார். இந்த இடைப்பட்ட காலத்தில் அவரது மாறுதல் உத்தரவு மத்திய அரசால் திரும்பப் பெறப்படவில்லை. எனவே அவர் 09-07-1981 அன்று தலைமை நீதிபதிப் பதவியிலிருந்து விலகினார். (சுநளபைநென) அவரது இந்தப் பதவி விலகலுக்கு நீதித்துறையினர் பெரும் பாராட்டுதல்கள் தெரிவித்தனர். நீதித்துறையின் மாண்பை பாதுகாத்து விட்டதாக “தினமணி” நாளேடு தனது தலையங்கத்தில் அவருக்குப் பாராட்டுத் தெரிவித்திருந்தது.

மத்திய அரசின் மாறுதல் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றிருக்கலாமே என அவரிடம் கேட்கப்பட்டபோது “உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பு வகிக்கும் ஒருவர் அந்தப் பதவியில் நீடிக்கும் தனது உரிமை விஷயமாக வேறொரு நீதி மன்றத்தில் மனுச் செய்வது சரியாக இருக்காது” எனக் குறிப்பிட்டார். எனினும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளைத் தன்னிச்சையாக மாற்றும் அதிகாரம் அரசிடம்; இருக்கக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அதன் காரணமாகவே தான் வகித்த உயர்பதவியிலிருந்து விலகினார்.

இஸ்மாயில் கமிஷன்

நாட்டில் நெருக்கடி நிலை நடைமுறையில் இருந்த போது தமிழகத்தில் தி.மு.கஇ கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்)இ ஜனதா ஆகிய கட்சிகளைச் சார்ந்த தலைவர்களும் தொண்டர்களும் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தி.மு.க. தலைவர்கள் குறிப்பாக முரசொலிமாறன்இ ஆற்காடுவீராச்சாமிஇ மு.க.ஸ்டாலின் ஆகியோரை சிறைத்துறை அதிகாரிகள் கொடுமைப்படுத்தியதாக புகார்கள் வந்தன. (சிறைத்துறை அதிகாரிகளின் தாக்குதல் காரணமாக சென்னை மாநகர மேயர் சிட்டிபாபுஇ சாத்தூர் பாலகிருஷ்ணன் ஆகியோர் உயிரிழந்தனர். முரசொலி மாறன்இ ஆற்காடு வீராசாமி ஆகியோரின் உடல் உறுப்புகளில் நிரந்தரப் பாதிப்புகள் ஏற்பட்டன.) சிறைத்துறை அதிகாரிகளின் அத்துமீறிய நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தி.மு.க. தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தது. எனினும் மத்திய மாநில அரசுகள் இக் கோரிக்கையை ஏற்கவில்லை. 1989 ஆம் ஆண்டு தி.மு.க. மீண்டும் ஆட்சிப்பொறுப்புக்கு வந்தபோது முதல்வர் கலைஞர் கருணாநிதி சென்னை மத்திய சிறையில் நடைபெற்ற அத்துமீறல்கள் குறித்து விசாரணை நடத்தி நீதிபதி இஸ்மாயில் தலைமையில் ஒரு நபர் குழுவை அமைத்தார். அதன் படி நீதிபதி இஸ்மாயில் விசாரணைகள் மேற்கொண்டு நெருக்கடி நிலையின் போது சென்னை மத்திய சிறையில் நடைபெற்ற அத்துமீறல்கள் உண்மைதானென்றும்இ அதில் ஈடுபட்ட அதிகாரிகளின் பெயர்களைப் பட்டியலிட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அரசிற்குப் பரிந்துரை செய்தார். ஆனால் தி.மு.க. ஆட்சி 1991 ஆம் ஆண்டு மத்திய அரசால் கலைக்கப்பட்டதால்இ நீதிபதி இஸ்மாயில் குழுவின் அறிக்கை மீது பின்னர் வந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இலக்கியப் பணிகள்:

பொதுவாகவே நீதிபதிகளாக இருப்பவர்கள் கலைஇ இலக்கியம்இவரலாறு ஆகிய துறைகளில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் நீதிபதி இஸ்மாயில் மிகச்சிறந்த இலக்கியவாதியாகத் திகழ்ந்தார். இஸ்லாமிய இலக்கியங்களில் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்த அவர்இ 1946 ஆம் ஆண்டிலேயே இஸ்லாமிய இலக்கியங்கள் குறித்து “குமரி மலர்” என்ற இதழில் கட்டுரை ஒன்று எழுதினார். இஸ்லாமிய இலக்கியங்களைத் தமிழ் மக்களிடையே அறிமுகப்படுத்துவதற்கு பெரிதும் முயற்சிகள் மேற்கொண்டார். இஸ்லாமிய கூட்டங்களிலும்இமாநாடுகளிலும் கலந்து இஸ்லாமிய இலக்கியங்கள் குறித்து ஆய்வுரைகள் நிகழ்த்தினார். 1973 ஆம் ஆண்டு கலைமகள் மாத இதழில் “இறைமை” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதினார். 1977 ஆம் ஆண்டில் மௌலவி ஆ.அப்துல் வஹாப் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளி வந்த “பிறை” மாத இதழில் “அல்லாஹ்வின் திருநாமங்கள்” என்ற தலைப்பில் தொடர் கட்டுரை ஒன்று எழுதினார். இதில் அல்லாஹ்இ ரப்பு ஆகிய இரு வார்த்தைகளுக்கும் விரிவான விளக்கங்கள் எழுதியிருந்தார். ஏ.வி.எம். ஜாபர்தீன் அறக்கட்டளை நடத்திய தொடர் சொற்பொழிவில் கலந்து கொண்டு வண்ணக்களஞ்சியப் புலவர் எழுதிய இராஜநாயகம் காப்பியம் குறித்து “இனிக்கும் இராஜநாயகம”; என்ற தலைப்பில் உரையாற்றினார் (சுலைமான் நபியைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டது இந்தக் காப்பியம்)

தமிழகத்தில் இஸ்லாமிய தமிழ் இலக்கியக்கழகம் தொடங்கப்படத் தூண்டுகோலாக இருந்தார். 1974 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் உரையாற்றிய அவர் “அறிமுகத்திற்குப் பிறகே ஆராய்ச்சி வர வேண்டும். முஸ்லிம் தமிழ் இலக்கியங்கள் குறித்து முஸ்லிம் சகோதரர்களே அறியாமல் இருக்கும்போது மற்றவர்கள் அறியாமலிருப்பது பற்றி சொல்ல வேண்டியதில்லை. இலக்கியத்திற்குச் சாதி, மதம் கிடையாது. முஸ்லிம் புலவர்கள் இவ்வளவு பாடியிருக்கிறார்களா என்று வியப்புடன் கேட்கப்படுகிறது. அவை தரத்திலோ அளவிலோ, இலக்கிய நயத்திலோ குறைந்தவை அல்ல” என்று குறிப்பிட்டார். 1978 ஆம் ஆண்டு காயல்பட்டிணத்தில் நடைபெற்ற (ஜனவரி 13, 14, 15 தேதிகளில்) இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் அவர் அக்கழகத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1982 ஆம் ஆண்டு வரை அந்தப் பொறுப்பில் இருந்தார். 1979 ஆம் ஆண்டு ஜூன் 29, 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் இலங்கையின் தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் கலந்து கொண்டு முதல் நாள் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்திடும் வாய்ப்பினைப் பெற்றார். 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆனந்த விகடன் இதழின் பொன் விழாக் கொண்டாட்டங்களுக்குத் தலைமை வகித்துச் சிறப்புரையாற்றினார்.

கம்ப இராமாயணம்:

நீதிபதி இஸ்மாயில், தமிழ் இலக்கியங்களில் குறிப்பாகக் கம்ப இராமாயணத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தார். கம்பரின் தமிழ்ப்புலமை அவரைப் பெரிதும் ஈர்த்தது. கம்பஇராமாயண கூட்டங்களிலும் மாநாடுகளிலும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். காரைக்குடியில் நடைபெற்று வந்த கம்பன் விழாவில் தொடர்ந்து ஐம்பது ஆண்டுகள் கலந்து கொண்டார். சென்னைக் கம்பன் கழகத்தின் தலைவராக இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பொறுப்பு வகித்தார். கம்பஇராமாயணம்இ வால்மீகி இராமாயணம், துளகி இராமாயணம் ஆகியவற்றை ஒப்பாய்வு செய்து பல கட்டுரைகள் எழுதினார். கம்பஇராமாயணப் பட்டி மண்டபங்களில் பேச்சாளராகவும், நடுவராகவும் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். இராமாயணத்தில் வரும் சிறிய கதாபாத்திரங்களான வாலி, குகன், சத்துருக்கணன், தாரா, திரிசடை, சூர்ப்பநகை ஆகியோர் குறித்து வரிவான ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். “வாலிவதம்” குறித்து இவர் எழுதிய “மூன்று வினாக்கள்” என்ற நூல் இராமாயண பக்தர்களிடடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நூலில் வாலியை இராமன் மறைந்திருந்து தாக்கிக் கொன்றது சரியே என ஆணித்தரமான வாதங்கள் மூலம் நிறுவியிருந்தார். இந்தக் கருத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியார் அவரிடம் லுழர யசந வாந ஊhநைக துரளவiஉநஇ லுழர hயஎந சநனெநசநன தரளவiஉந வழ சுயஅய என்று குறிப்பிட்டாராம். கம்ப இராமாயண ஆராய்ச்சிப் பணிகளுக்காக அவருக்கு “இராம ரத்னம்” “கம்ப இராமாயண ஒளி” ஆகிய பட்டங்கள் வழங்கப்பட்டன. 1980 ஆம் ஆண்டு சென்னைக் கம்பன் கழகம் இவரது இலக்கியச் சேவையைப் பாராட்டும் முகத்தான் கவியரங்கம் ஒன்றை நடத்தியது. அதில் பத்துக் கவிஞர்கள் கலந்து கொண்டு இவருக்குப் புகழாரம் சூட்டினர்.

1970களில் ஆனந்த விகடன் வார இதழில் “இலக்கிய மலர்கள்” என்ற தலைப்பில் இலக்கியத் திறனாய்வுத் தொடர் ஒன்றினை எழுதி வந்தார். இக்கட்டுரைகளில் கம்ப இராமாயணத்திலும், குறுந்தொகையிலும் காணக் கிடைக்கின்ற காதல் செய்திகளை சுவைபட எழுதியிருந்தார். “இலக்கிய மலர்கள்” இரண்டாம் பாகத்தில் பாரதியார், குணங்குடி மஸ்தான், இராமலிங்க வள்ளலார் ஆகியோரின் பேரின்பப் பாடல்கள் குறித்து எழுதினார்.

நூல்கள்:

பல்வேறு இதழ்களில் இவர் எழுதிய தொடர் கட்டுரைகள் மற்றும் கருத்தரங்குச் சொற்பொழிவுகள் ஆகியன பின்னர் நூல்களாக வெளிவந்தன. அவையாவன. இனிக்கும் இராஜநாயகம், அடைக்கலம், உந்தும் உவகை, தாயினும், வள்ளல் தன்மை, மூன்று வினாக்கள், கம்பன் கண்ட சமரசம், கம்பன் கண்ட இராமன், செவிநுகர் கனிகள், அல்லாஹ்வின் அழகிய திரு நாமங்கள், மும்மடங்கு பொலிந்தன, இலக்கிய மலர்கள.; ஜனாதிபதி மற்றும் ஆளுநர்களின் அரசியல் சட்ட அதிகாரங்கள் குறித்தும் விரிவான நூல் ஒன்றை எழுதியுள்ளார். தனது இல்லத்தின் ஒரு பகுதியில் மிகச் சிறந்த நூலகம் ஒன்றையும் அமைத்திருந்தார். அதில் பல பழந்தமிழ் நூல்களை சேகரித்து வைத்திருந்தார்.

குடும்பம்:

நீதிபதி இஸ்மாயிலின் துணைவியார் பெயர் சுபைதா நாச்சியார் காரைக்காலைச் சார்ந்தவர்;. இத்தம்பதியினருக்கு மூன்று மகன்கள் ஒரு மகள் என நான்கு பிள்ளைகள். நாகூரைச் சார்ந்தவராக இருந்த போதிலும் சென்னை மயிலாப்பூரிலேயே அவர் தனது இறுதிக்காலம் வரை வாழ்ந்து வந்தார்.

மறைவு:

சிறிது காலம் நோய் வாய்ப்பட்டிருந்த அவர் 17.1.2005 அன்று காலமானார். நீதிபதி இஸ்மாயில் தனது வாழ்வாள் முழுவதும் சைவ உணவுப் பழக்கம் கொண்டவராகவே விளங்கினார். சமய நல்லிணக்கம் பேணுபவராக இருந்தார். அனைத்துப் பிரிவு மக்களாலும் மதிக்கப்படுவராகத் திகழ்ந்தார். தனி வாழ்விலும் பொது வாழ்விலும் மிகச் சிறந்த நெறிமுறைகளைப் பின்பற்றினார். சில உயரிய நெறி முறைகளைப் பேணுவதற்காக தான் வகித்து வந்த மிகப்பெரிய தலைமை நீதிபதி பொறுப்பிலிருந்து விலகினார். அவரது பொதுப்பணிகளும், இலக்கியப் பணிகளும் தமிழ் மக்களால் என்றும் நினைவு கூறப்படும்.

கட்டுரையாளருடன் தொடர்புகொள்ள

கைபேசி எண் 99767 35561