நயவஞ்சகத்தின் பத்து அடையாளங்கள்

உள்ளத்தில் ஒன்றும் நாவில் ஒன்றுமாக வைத்து செயல்படுகிறவர்களுக்கு முனாஃபிகீன்கள்-நயவஞ்சகர்கள் என்று கூறப்படும். பொய் பேசுவது, வாக்குறுதியை மீறுவது, மோசடி செய்வது இந்த மூன்றும் அவர்களுடைய அடையாளங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருந்தாலும், குர்ஆன் வசனங்களை ஆராய்கிற போது இன்னும் பல அடையாளங்கள் வெளிப்படுகின்றன. அவற்றிலிருந்து குறிப்பாக ஒரு பத்து அடையாளங்கள் இதோ : 1. “சத்தியக் கொள்கையுடையோர் அசத்தியக் கொள்கையுடையோர் ஆகிய இரு பிரிவினரோடும் தொடர்பும் போக்குவரத்தும் வைத்திருப்பார்கள். ஏனெனில் அப்போதுதான் இருசாரர்களுடைய தீமைகளிலிருந்து தப்பிக்க முடியும். இருசாராரிடமிருந்து பயன் அடைய முடியும்.” (அல்குர்ஆன் : 04:91)2. நம்முடைய உலகாதாய நலன்களுக்கு ஏற்புடையதாக இருந்ததால் மட்டுமே மார்க்கச் சட்டங்களை எடுத்து நடப்பார்கள். ஆனால், அதே மார்க்கச் சட்டங்கள் தம்முடைய இஷ்டத்துக்கு விரோதமாக இருந்தால் அவற்றைத் தூக்கி ஓர் ஓரமாக வைத்து விடுவார்கள். (அல்குர்ஆன் : 24:48)3. “உண்மை இதுதான் என்று தெளிவான பின்பும் அதை அறிந்து கொண்ட பின்பும் சுயநலம், கர்வம், வறட்டு கௌரவம் ஆகியவற்றின் அடிப்படையில் தொடர்ந்து தவறுகளில் உழன்று கொண்டிருப்பார்கள்.” (அல்குர்ஆன் : 02:206)4. பிரார்த்தனை செய்யும் போது, இறைவா! நீ எங்களுக்கு செல்வத்தை வழங்கினால், அதை உன் வழியில் வாரி வழங்குவேன் என்று வாக்குறுதி அளிப்பார்கள். ஆனால், இறைவன் அவர்களுக்கு அதுபோல செல்வத்தை வழங்கினால், தங்கள் வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டு விடுவார்கள். (அல்குர்ஆன் : 09:76)5. “எந்தவொரு சாதனைகளையும் அவர்கள் புரிந்திருக்க மாட்டார்கள். ஆனால், அந்தச் சாதனைகள் மூலம் வரும் புகழை (காசு பணம் தந்தாவது) அடைய முயற்சிப்பார்கள்.” (அல்குர்ஆன் : 03:188)6. தொழுகை, அதை முறையாக நிறைவேற்றுவதை, நேரத்தோடு நேரத்தோடு தொழுவதை பெரும் பாரமாகக் கருதுவார்கள். அப்படியே தொழுதாலும் சோம்பலோடு நிற்பார்கள். பிற மக்களுக்கு காட்டுவதற்காகவே பள்ளிவாசலுக்கு வருகை புரிவார்கள். (அல்குர்ஆன் : 04:142) குறிப்பாக இஷா, ஃபஜ்ர் இரண்டு தொழுகைகளிலும் பொடுபோக்காக இருப்பார்கள். அவற்றை ஜமாஅத்தோடு நிறைவேற்ற மாட்டார்கள். (நபிமொழி நூல் : மிஷ்காத்)7. ரொம்பவும் எளிதான இஸ்லாமியக் கடமைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவார்கள். பெரிதும் அர்ப்பணிக்க வேண்டிய, தியாகம் செய்ய வேண்டிய கடினமான கடமைகளிலிருந்து பதுங்கிக் கொள்வார்கள்.” (அல்குர்ஆன் : 04:77)8. “எந்தவொரு விஷயத்திலும் இதனால் எனக்கு என்ன இலாபம்? என்பார்கள் கிடைக்காவிட்டால், அதிலிருந்து விலகிக் கொள்ளும் சந்தர்ப்பவாதிகளாகவும் இருப்பார்கள். பாம்புக்கு வாலையும் மீனுக்கு தலையையும் காட்டும் பச்சோந்திகளாக இருப்பார்கள்.” (அல்குர்ஆன் : 04:141) 9. “எந்தவொரு விஷயத்திலும் இதனால் எனக்கு என்ன இலாபம் கிடைக்கும் என்ற மனப்பாங்கு உடையவர்களாகவும், அப்படி இலாபம் கிடைக்காவிட்டால், அதிலிருந்து விலகிக் கொள்ளும் சந்தர்ப்பவாதிகளாகவும் இருப்பார்கள். பாம்புக்கு வாலையும் மீனுக்கு தலையையும் காட்டும் பச்சோந்திகளாக இருப்பார்கள்.” (அல்குர்ஆன் : 04 : 141)10. சத்தியம் பேசப்படும் இடங்களை விட்டும் விலகி வெகுதூரமாகி விடுவார்கள். அப்படியே அங்கு இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் அமைதியாக, கமுக்கமாக இருப்பார்கள்.” (அல்குர்ஆன் : 09:127) 11. ஜமாஅத், வடிவமைப்பில் (கூட்டமைப்பாக) செயல்பட்டாலும் ஒவ்வொன்றிலும் விலகி விலகி நிற்பார்கள். உள்ளங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டு இருப்பார்கள். அதாவது, வெளிப்படையில் ஒற்றுமை தென்பட்டாலும் உள்ளுக்குள் முடிச்சு அவிழ்க்கப்பட்ட நெல்லிக்கனி மூட்டையைப் போல பிரிந்து சிதறிக்கிடப்பார்கள்.” 12. (அல்குர்ஆன் : 59:14) இறைவா…! இத்தகைய நயவஞ்சகத்தின் அடையாளங்களை விட்டும் எங்கள் இதயங்களை பாதுகாத்து அருள்புரிவாயாக.!!