தகவல்கள், பரிமாறப்படும் தகவல்களை கண்காணிக்கபடுகிறது

அந்தரத்தில் அந்தரங்கம்நாட்டில் உள்ள அனைத்து கணினிகளில் பாதுகாக்கப்படும் தகவல்கள், பரிமாறப்படும் தகவல்களை கண்காணிப்பதுடன் அவற்றை இடைமறித்து ஆய்வு செய்வது, தடைசெய்வது, தகவலின் உண்மைத்தன்மையை ஆராய்வது உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் செய்ய மத்திய அரசின் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. “ மத்திய அரசின் உளவுத்துறை (ஐபி), போதை மருந்து கடத்தல் தடுப்புப் பிரிவு (என்சிபி), அமலாக்கப் பிரிவு (ஈ.டி.), மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி), வருவாய் புலனாய்வு (டிஆர்ஐ), சிபிஐ, தேசிய புலனாய்வு அமைப்பு, டெல்லி போலீஸ் ஆணையர் அலுவலகம் (என்ஐஏ) ஆகிய 10 விசாரணை ஏஜென்சிகளுக்குத் தேவை ஏற்படும் நேரத்தில் தொடர்புசேவை வழங்குவோர், பயன்பாட்டாளர் அல்லது கணினி மையத்தின் பொறுப்பாளர் உதவ வேண்டும். அனைத்து விதமான தகவல் களையும் வழங்க வேண்டும். அவ்வாறு ஒத்துழைக்க மறுப்பவர்களுக்கு 7 ஆண்டுவரை கடுங்காவல் சிறையும், அபராதமும் விதிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “கணிணி என்பதில் எல்லோராலும் சாதாரணமாக பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் போன்களும் அடங்கும்.”தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 69(1) ன்படி, இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது மத்திய அரசின் இந்த கண்காணிப்பு என்பது தனிநபர்களில் அந்தரங்க நடவடிக்கை மற்றும் தனி மனித சுதந்திரத்தில் அரசு மூக்கை நுழைக்க முயற்சிப்பதாக உள்ளது என்று மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.அரசாங்கத்தின் கண்காணிப்பு தனிநபரின் அந்தரங்கத்தை அச்சுறுத்துகிறது மேலும் 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அந்தரங்கம் ஒரு அடிப்படை உரிமை என்று ஒன்பது நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு கூறியுள்ளது. தம் மக்களை கண்காணிக்க உள்ள பல வழிகளில் தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப விதிகளும் ஒன்றாகும். இந்திய தந்தி சட்டம்-1885, தந்தி விதிகள்-1951 மற்றும் இந்திய அஞ்சல் அலுவலக சட்டம் – 1898 ஆகிய சட்டங்களிலும் இதே போன்ற ஏற்பாடுகள் உள்ளன. இந்த சட்டங்கள் காலனியாதிக்க காலத்தில் வெள்ளையர்களால் உருவாக்கப்பட்ட சட்டங்களின் விரிவாக்கமே ஆகும். மேலும் ஏமாற்றமளிக்கும் வகையில் இந்த தகவல் தொழில்நுட்ப சட்ட கண்காணிப்பு என்பதும் கூட ஒரு காலனியாதிக்க நீட்டிப்பாகவே இருக்கிறது. தன்னுடைய சொந்த மக்களை கண்காணிப்பதன் மூலம் ஆங்கிலேய அரசு என்ன செய்ததோ அதையே தான் இன்றைய அரசும் செய்கிறது. இது இந்தியாவின் பிரச்சினை மட்டுமல்ல. ஏகாதிபத்தியங்களால் கைமாற்றி கொடுக்கப்பட்ட போலி சுதந்திரம் அடைந்த அனைத்து நாடுகளுக்குமான பிரச்சினை.