செலவில்லா சித்த மருத்துவம்

1.வாத நாராயண இலை : இலையை நன்கு அரைத்து பாக்களவு அதிகாலையில் மூன்று தினங்கள் சாப்பிட்டு வர கை, கால் பிடிப்பு, குத்தல் குடைச்சல் தீரும். இதை வாதை மடக்கி என்றும் கூறுவர்.2.வில்வ இலை : இது மா, வகுப்பை சேர்ந்தது. இந்த இலையை அரைத்து பாக்களவு காலையில் வெறும் வயிற்றில் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வரவும். இத்துடன் ஒடு டீஸ்பூன் நல்லண்ணெய் சேர்த்து சாப்பிட இரத்த மூலம் நீர் சுருக்கும் மாறும். வில்வ இலையைதினம் 10 வீதம் 40 நாட்கள் சாப்பிட்டு வர ஆண்மை பெருகும்.3. வெள்ளருகு :வெள்ளருகு 50 கிராம் பூண்டு பல் ஐந்து, மிளகு 10 இவைகளை தண்ணீர் விடாமல் அரைத்து காலை – மாலை மூன்று நாட்கள் சாப்பிடவும். வெள்ளை வெட்டை நோய் முற்றிலும் மாறும். 6 நாட்கள் உப்பில்லா மோர் சாதம் சாப்பிடவும். 7-ம் நாள் எண்ணெய் தேய்த்து குளித்து எல்லாம் சாப்பிடலாம்.4. வெள்ளைசாரணை : இது வெட்ட வெளிகளில் சிறு கொடியாக படர்ந்திருக்கும். இதன் பூக்கள் வெண்மை நிறத்தில் காணப்படும். தண்ணீர் இல்லாமல் அரைத்து ஸ்திரியின் மர்ம உறுப்பில் தடவ நங்சு கொடி விழும். வஸ்ய மருந்தாகவும் இது பயன் படுகிறது.5. நீலி அல்லது அவுரி : இதில் சாறு எடுத்து எண்ணெய்யுடன் சேர்த்து கூந்தலில் வளர்ச்சி தைலங்கள் தயாரிக்கலாம். 20 மில்லி சாற்றுடன் 50 மில்லி வெள்ளாட்டு பால் கலந்து குடித்தால் உடம்பில் உள்ள விஷ ரோகங்கள் மாறிவிடும். வஸ்ய மருந்தாகவும் பயன்படுத்தலாம். வெள்ளைசாரணையுடன் இதை சேர்த்து அரைத்து நெற்றில் பூசிக் கொண்டால் போகிற காரியம் ஜெயம் உண்டாகும்.6. முருங்கை இலை : இலையையும், வெண்ணெய்யும் சேர்த்து அரைத்து புளித்த எருமை தயிருடன் சேர்த்து 3 நாள் காலையில் சாப்பிட காமாலை நோய்களும் தீரும். முருங்கை இலைசாறு, மாவிலங்கு பட்டை சார் வகைக்கு 30 மில்லி எடுத்து அத்துடன் உப்பு சேர்த்து சாப்பிட ஜலதோஷம் குணமாகும். முருங்கை பட்டை, பெருங்காயம். உப்பு சேர்த்து அரைத்து மேலால் பூச வாய்ப்பு தீரும். உள்ளுக்கு சாப்பிட வயிற்று வலி மாறும்.7. வெற்றிலை ; கப நோய்களுக்கு இதன் சாற்றை கொடுக்கலாம், விஷ மருந்து உண்டவர்களுக்கு விஷ முறிவு மருந்தாக, மிளகுடன் சேர்த்து கொடுக்கலாம்.8. நெங்சில் சமூலமாக இடித்து சட்டியில் இட்டு வறுத்து 1 படி தண்ணீர் விட்டு சுண்டக் காய்ச்சி 1/8 படியாக வற்றவைத்து 7 தின்ங்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் நீரழிவு குணமாகும். நீர் சுருக்கு, நீர் கடுப்பு மற்றும் கல்லடைப்பு தீரும்.9. மூக்குத்தி செடி : இது வேலிகளில் காணப்படும். சில வீடுகளில் வளர்ப்பார்கள், கொடி வகையை சேர்ந்த்து. இதன் இலையை வாயில் மென்று போட்டு கொங்ச நேரம் அடக்கினால் பல் வலி மாயமாய் போய்விடும்.10. நுணு அல்லது மங்சணத்தி : இது மர வகுப்பை சேர்ந்தது. வெண்மையா பூக்கும் காய்கள் உருண்டையாக இருக்கும். இலைகள் ஆடா தொடை இலை போலிருக்கும். இதன் பட்டைகள் புண், கரப்பான் நோய்களை குணமாக்கும். பழத்தையும், இலைய்யும் இட்டு கொடுக்க சூதக தடை சரியாகும். இதன் இலை, காய், பூ, பட்டை இவைகளை கந்கமாக்கி தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள எல்லா நோய்களும் தீரும் உடல் வலுக்கும்.11. தழுதாளை அல்லது குத்து வாத முடக்கி : வாத ரோகங்களுக்கு இதன் இலையை நல்லெண்ணெய்யுடன் சேர்த்து கட்டினால் குணம் கிடைக்கும். இது வாய்க்கால் ஓரம், வேலி ஓரங்களில் காணப்படும்.12. சின்னுர் வேம்பு ; இது காடு, தோட்ட தரிசு, நிலங்களில் காணப்படும். முள செடி, மாதிரி காணப்படும் ஆனால் முள இருக்காது நீல நிற பூக்களும், சிறு காய்களும் காணப்படும். இது பச்சையில் தீ பிடிக்கும். இதை சமூலமாக காசயம் இட்டு குடித்து வர சொறி சிரங்கு, சிபிலிஸ் தீருவதுடன், பல் வலியும் குணமாகும்.