இந்தியாவில் உயிர்க் கொல்லி புற்று நோய் தமிழக மக்களை துவம்சம் செய்யத் துவங்கியுள்ளது. தமிழகத்தில் விபத்துகள் தவிர்த்து மரணிப்போரில் 60 சதவிகிதத்தினர் புற்று நோய் பாதிப்பினால் இறக்கின்றனர்.பெருகி வரும் இந்த அபாயத்தை அரசின் புள்ளி விவரங்கள் அரசியல் காரணங்களுக்காகமிகச் சரியாக அடையாளப்படுத்துவதில்லை. ஒவ்வொரு மனிதனும் தன்னைச்சுற்றி, தன்வசிப்பிடத்தைச் சுற்றி கடந்த ஓர்ஆண்டில் மரணித்தோரின் விவரத்தை அறிந்தாலே இந்த ஆபத்துஎப்படி எல்லை மீறிச் செல்கிறது என்பது தெரிந்து விடும்.சொகுசு வாழ்க்கை, உழைப்பு இல்லாமல் உடனடியாக பணம் சம்பாதிக்கும் பேராசை அரசியல்வாதிகளின் தவறான கொள்கை போன்றபித்தங்கள் தலைக்கேறி மனிதன் கண் மண் தெரியாமல் முன்பின் யோசிக்காமல் அழகிய இந்தபூமியின் இயற்கை வளங்களை நாசப்படுத்துவதும், அறிவியல் ஆய்வுகள், கண்டு பிடிப்புகள்என்ற பெயரில் பூமியின் இயங்கு விதிகளுக்குப் புறம்பாகச் செல்வதும் தொடர் கதையாகிவருகிறது. மனிதக் கரங்கள் பூமிக்கு ஏற்படுத்தும் உண்டாக்கும் இந்தத் தீங்கிற்குப் பதிலடியாக பூமி திருப்பி அடிக்கத் துவங்கி பலஆண்டுகள் ஆகி விட்டது.வலுத்தவர்கள் செய்கின்ற இந்த வன்மத்திற்கு இளைத்தவர்கள், வக்கற்றவர்கள், விளிம்பு நிலைமக்கள், பலி கடா ஆக்கப்படுகின்றனர்.இயற்கையோடு இயைந்த வாழ்விற்கு மாற்றமான வாழ்க்கை, உடலுக்கும், உள்ளத்துக்கும்ஊறு விளைவிக்காத உணவை உண்ணும், உணவே மருந்து என்ற பாரம்பர்யத்தை மீறி, நாக்கிற்கு ருசியாகவும், கண்ணிற்குக் கவர்ச்சியாகவும் தெரியக் கூடிய கண்டதையெல்லாம் அளவில்லாமல், நேரம் – காலம் இல்லாமல் வாரி வாரிக் கொட்டி வயிற்றை குப்பைத் தொட்டியாக ஆக்கியதன் விளைவுதான் உயிர்க்கொல்லி நோயான புற்று நோய் பெருகிட முக்கியக் காரணம். இவை இல்லாமல் மன அழுத்தம், புகையிலை உபயோகம், மது, பிளாஸ்டிக் போன்றவற்றாலும்காற்று, கடல், நீர் நிலைகள் மனிதக் கரங்களால் மாசடைந்தும், இரசாயன உரம், பூச்சிக் கொல்லி, மரபணுமாற்றுப் பயிர்கள், பசுவின் இலக்கணத்தை மீறிய இறக்குமதி செய்யப்பட்ட ஜெர்ஸி மாட்டுப்பால்போன்ற இன்றைய மனிதன் புழங்குகின்ற 90 விழுக்காடு உணவும் பொருட்களும்தான் இந்தஉயிர்க் கொல்லியை உண்டாக்குகிறது.இந்தியாவில் ஆண்டிற்கு 10 லட்சம் புற்று நோய் மரணங்கள் ஏற்படுகின்றன. இது வரும்காலங்களில் 70 – 80 மடங்கு அதிகரிக்கப் போகின்றது என்று கூறுகின்றன புற்று நோய்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் தொண்டு நிறுவனங்கள். இந்தியா முழுவதும் 300 புற்றுநோய் மருத்துவமனைகள்தான் உள்ளன. இதில் 40 விழுக்காடு மருத்துவமனைகளில் நவீனஉபகரணங்கள் எதுவும் இல்லை. 2020 இல் 600 நவீன மருத்துவமனைகள் தேவை என்கிறது WHO அமைப்பு.தமிழக கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் புற்று நோய் பாதிப்புகள் கட்டுக்குள் அடங்காதஅளவுக்கு பெருகி வருகின்றன. சில முஹல்லா பள்ளிவாசலில் புற்று நோயால் மரணித்தவர்கள், பாதிப்படைந்துள்ளவர்களின் எண்ணிகை குறித்த விவரங்கள் அறிவிப்புப் பலகையில் இடம்பெற்றுள்ளன. சில முஸ்லிம் முஹல்லாக்களுக்கு அது குறித்தெல்லம் சிந்திப்பதற்குக் கூட நேரமில்லை. அதிகம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பெண்களே!கற்பப்பை மற்றும் மார்பகப் புற்று நோய் பாதிப்பினால் பெண்கள் அதிகமாக உயிரிழந்துவருகின்றனர். ஆண்களுக்கு வாய், வயிறு, முதுகெலும்பு, கழுத்து, தலை போன்ற இடங்களை தாக்குகிறது. சென்னை அடையாறு புற்று நோய் மருத்துவமனையும், அரசு மருத்துவமனைகளும் நிற்கக் கூட இடமில்லாமல் நிரம்பி வழிகின்றன. நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் ஈனக்குரல் பார்ப்பவர்களின் உள்ளங்களை ஈட்டியால் குத்துகிறது.உடலுக்கும் உள்ளத்துக்குமான தேவை, உலக வாழ்வின் யதார்த்தம், இறைவழிபாடு, சமூகச்சிந்தனை, அறப்பணிகள், உறவுகளோடு உறவாடும் இனிமை, ஹலாலான (ஆகுமான) சம்பாத்தியம் போன்ற இயல்பான மனித விழுமியங்கள் எதிலும் கவனம் செலுத்த இயலாமல்பொருளீட்டுவது ஒன்றே வாழ்வின் அடையாளம், அதற்காக எதையும்இழக்கலாம் என்று ஓடி ஒடி இளமையில் உண்டாக்கிய செல்வத்தையெல்லாம் இளமையின்வேகம் குறைந்தவுடன் மருத்துவத்திற்குச் செலவிட்டு மருத்துவர்களைப் பணக்காரர்களாக்கும்மடயர்களுக்கு இந்த உலகம் சூட்டும் பெயர் “நல்ல சம்பாத்தியக்காரன்”; பெண்கொடுப்பதற்கு தகுதியானவன்.இயற்கை அமைப்புகளை சிதைத்து நாம் வாழ்ந்து வரும் அத்து மீறிய இந்த வாழ்க்கை முறைஎன்பது முதலாளித்துவம் நம்மீது வலிந்து திணித்தது. விழிப்புணர்வுடன் மனித இனத்தைப்பாதுகாத்திட வேண்டிய பொறுப்பு முஸ்லிம்களுடையது. ஆனால் அல்லாஹ்வுடையமார்க்கச் சட்டங்களின் அடிப்படையை அறியாததால், அறிந்த சிலரின் தவறான வழிகாட்டுதலால்உலக வாழ்வே பிரதானம் என்று வாழும் நாரோடு சேர்ந்து மறுமை வாழ்வே பிரதானம் என்றுவாழ வேண்டிய பூவும் நாறிப் போய்க் கிடக்கிறது.