உ.வாசுகி, மாநிலச் செயற்குழு உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

‘‘தேர்தல் மிகப்பெரும் ஜனநாயக நடவடிக்கை. அதிலிருந்து என்றைக்குமே ஒதுங்கியிருக்க முடியாது. இந்தத் தேர்தலில் கார்ப்பரேட் மதவெறி சித்தாந்தத்தில் இயங்குபவர்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதற்காக இடதுசாரிகள் திராவிடக் கட்சியோடு கூட்டணி வைத்திருக்கிறார்கள். திராவிடக் கட்சிகளோடு கூட்டணி வைத்தோம். ஆளும் பாஜக அரசியல்வாதிகள் கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கைகளைப் பின்பற்றுகிறார்கள். கடந்த ஆட்சியில் கார்ப்பரேட் கடன்கள், பல லட்சம் கோடி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், விவசாயக்கடன் அப்படியே இருக்கிறது. நிதின் கட்கரியே தாங்கள் கொடுத்த வாக்குறுதிகள் பொய்யானவை என்று சொல்லியிருக்கிறார். இவர்கள் நடத்துவது ஜனநாயகமற்ற, சலுகைசார் முதலாளித்துவ ஆட்சி.