டி.எஸ் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்

“நிறைய மாற்றங்கள் தேவை. தேர்தல் நடத்தை விதிமுறை என்பது ஒரு நடைமுறை தான். அது சட்டமாக இல்லாததால், அதைச் செயல்படுத்த முடிவதில்லை. தேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு செய்யலாம். அது பல வருடங்கள் விசாரிக்கப்படும். தேர்தல் விதிகளைமீறி வெறுப்புப் பிரசாரம் மற்றும் வன்முறையைத் தூண்டும் செயல்களில் ஈடுபடுவோர் உடனடியாகத் தகுதிநீக்கம் செய்யப்படவேண்டும். அதற்கான அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இல்லை. ஒரு பயம் இருந்தால்தான் தேர்தலைச் சுமுகமாக நடத்துவதற்கான சூழல் உருவாகும். இடைக்காலமாக அபராதம் விதிப்பதற்கான அதிகாரமும் ஆணையத்துக்கு இருக்க வேண்டும்.”