ஆந்திராவைப் போன்று மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற லம மாநிலங்களில் வாக்கு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. வாக்கு இயந்திரத்தை எதிர்த்து பல ஆண்டுகளாகவே போராட்டம் நடத்தி வருகிறோம். இதன் காரணமாகத்தான் விவிபாட் இயந்திர ஸ்லிப்கள் வந்தன. இது நாட்டின் பிரச்சனை தேர்தல் ஆணையம் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட அமைப்பாகும். ஆனால் தற்போது பிரதமருக்கு ஒரு சட்டம், மாநில முதல்வர்களுக்கு ஒரு சட்டம் என்ற நிலை அரங்கேற்றப்பட்டு வருகிறது. பிரதமர் என்ன வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாமா? அவருக்கு தேர்தல் விதிமுறைகள் கிடையாதா? எதிர்கட்சிகளை அவர் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாமா?