


لَّـكُمْ خَيْرٌ هُوَ بَلْ لَّـكُمْ شَرًّا تَحْسَبُوْهُ لَا
“ஆனால் அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கு நன்மையாகும்.”
(அல்குர்ஆன் : 24:11) என்பது தான் (positive) நேர்மறைச் சிந்தனைகளின் அடிப்படை. உடைந்த உள்ளங்கள் ஆற்றுப் படும். அடைபட்ட பாதை திறக்கும். வளைந்த காரியங்கள் நேராகும். கஷ்டங்கள் நீங்கிவிடும். அல்லாஹ்வை நம்பு; இயலாமையை அடைய மாட்டாய்!
கடந்த 15/3/19 வெள்ளியன்று நியூஸிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் ஜும்ஆ தொழுகைக்காக கூடியிருந்த முஸ்லிம்கள் மீது வலது சாரி தீவிரவாதி ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ‘அந்நூர்’ பள்ளிவாசலை உரவாக்கிய ஷஹீது முஹம்மது அதா, அவரது மகன் அதா உட்பட 49 பேர் ஷஹாதத்- வீரமரணத்தைத் தழுவினர்.
வழக்கம் போல ஊடக உலகம் இந்த பயங்கரத்தை “துப்பாக்கிச் சூடு!” என்றழைத்து தன் வக்கிரத்தை வெளிப்படுத்திக் கொண்டது. அவர்கள் பார்வையில் முஸ்லிம்கள் தான் நிரந்தர தீவிர வாதிகள்!
இங்குதான் நாம் இந்நிகழ்வின் மூலம் அடைந்த நேர்மறை தாக்கங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். ஆஸ்திரேலிய ஓவியர் ஒருவர் நியூஸிலாந்து முஸ்லிம்கள் தொழுகையின் பல்வேறு நிலைகளை அந்நாட்டின் அடையாளச் சின்னமான மரக் கிளையில் வடிவமைத்தார்.
துப்பாக்கிச் சூட்டில் உயிர்த்தியாகம் செய்த 49 பேரும் ஒவ்வொரு இலை ஆயினர். அடுத்த வாரம் 22/3/19 வெள்ளியன்று உயிர்த் தியாகம் செய்த முஸ்லிம்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, நியூஸிலாந்து பிரதமர் ஜெஸிந்தா உட்பட கிரைஸ்ட்சர்ச் நகர் முழுக்க மக்கள் இன்று ஹிஜாப் அணிந்து ஜும்ஆ தொழுகையில் பங்கேற்றனர்.
தி ப்ரஸ் நாளிதழ் முகப்புப் பக்கத்தில் அவர்களின் பெயர்களைப் பொரித்து மேலே ‘ஸலாம்- அமைதி’ என்ற வார்த்தையை மட்டும் அரபியில் அச்சிடப் பட்டிருந்தது.

































