தொல் திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த இலங்கை மக்கள் முறைப்படி இந்திய அரசின் அனுமதியோடு தாயகம் திரும்புகிறார்கள். இதற்காக தமிழகத்தில் இருந்து ஏறக்குறைய 10 ஆயிரம் பேர் தாயகத்துக்கு திரும்பிய சூழ்நிலையில், அங்குள்ள ஆட்சியாளர்கள் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். இந்திய அரசை நம்பி, தாயகம் திரும்பியவர்களை இலங்கை அரசு கைது செய்வது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு உள்ளது. இந்திய அரசு உடனடியாக இதில் தலையிட வேண்டும்.
தமிழகத்தில் இருந்து அல்லது இந்தியாவில் எந்த மாநிலத்தில் இருந்தும் இலங்கைக்கு அனுப்பப்படும் தமிழ் அகதிகளை பாதுகாப்பாக அவர்களது இல்லத்துக்கு போய்ச்சேர உரிய நடவடிக்கைகளை இந்திய அரசும், தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும்.