“நமது விஞ்ஞானிகளை நான் வாழ்த்துகிறேன். இனிமேல், டெல்லியில் அமர்ந்து ஆராய்ச்சி செய்யப்படாது. கிராமத்திலிருந்து வரும் கருத்துகளின் அடிப்படையில் தேவை சார்ந்த ஆராய்ச்சி செய்யப்படும். விவசாயம் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது. இந்த வளர்ச்சியானது விவசாயிகளின் கடின உழைப்பின் விளைவாக கிடைத்தது.”
சிவராஜ் சிங் சவுகான் மத்திய வேளாண் துறை அமைச்சர்
“மோடி அரசின் 11 ஆண்டுகளில் ரூ.6,36,992 கோடி மதிப்புள்ள வங்கி மோசடிகள் நடந்துள்ளன, இது 416% அதிகரிப்பு ஆகும். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகும், கடந்த 6 ஆண்டுகளில் ரூ.500 போலி ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 291% அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு அது மேலும் அதிகமாகும். மோடி ஜி, உங்கள் நரம்புகளில் என்ன பாய்கிறது என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால், உங்கள் அரசின் நரம்புகளில் மோசடி மற்றும் போலித்தனம் பாய்கிறது என்பது உறுதி.” மோடி அரசு தனது மொத்த தோல்விகளை மறைக்க பொருளாதாரம் குறித்து பொய்களைப் பரப்புவதை ஒரு பழக்கமாக்கியுள்ளது. தொடர்ந்து 11 ஆண்டுகளாக, இந்த திறமையற்ற அரசு, பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையையும் அழித்து வருகிறது.”

































