அல்லாஹ் ஒருவனே என்கிற ஏகத்துவக் கோட்பாட்டை நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் முன்வைத்த முதல் நிமிடம், முதல் நாள் துவங்கி இனி உலகின் இறுதிநாள் வரை இஸ்லாமிய ஏகத்துவத்தை ஏற்று வாழ்கின்ற அனைத்து முஸ்லிம்களுக்கும் எதிரான முறைப்படுத்தப்பட்ட எதிர்ப்பு நிறுவனங்கள் பூமி முழுவதும் மிக உயிரோட்டமாக இருந்து கொண்டேயிருக்கும்.
ஒரு காலத்தில் எதிர்ப்புகள் இருக்கும் பிறகு சரியாகிவிடும் அல்லது ஒரு சில முஸ்லிம்களுக்குத்தான் எதிரிகள் மற்றவர்களுக்கு இல்லை என்று எந்த முஸ்லிமும் தப்பித்துக்கொள்ள இயலாது.
முஸ்லிம் உம்மத்திற்கான இந்த எதிர்ப்புகள் காலத்திற்கு காலம் நாட்டிற்கு நாடு பிராந்தியத்திற்கு பிராந்தியம் அங்கு வாழும் எதிரிகளின் சக்திக்கும் சூழ்ச்சிக்கும் ஏற்ப மாறுபடும்.
எதிர்ப்புகளை எதிர்த்துப் போராடும் அறிவை ஆற்றலை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பூமி முழுவதும் வாழும் முஸ்லிமான ஆண் பெண் அனைவருக்கும் வழங்குகிறான். கடந்த 300 ஆண்டுகால உலக வரலாற்றில் இஸ்லாமிய எதிரிகளோடு முஸ்லிம் மன்னர்கள் இராணுவ ரீதியாகப் போராடினார்கள்.
உலகம் முழுவதும் முஸ்லிம் அரசுகள் பலவீனமடைந்த போது எதிரிகளின் தாக்குதல்களிருந்து உம்மத்தின் உயிர் உடமை மானம் வழிபாட்டுத் தலங்கள் போன்றவற்றை பாதுகாத்திட அல்லாஹ்வுடைய தீனை பயிற்றுவித்து பண்படுத்தி வழிநடத்தும் ஆசிரியர்கள் தலைமையிலான அன்றைய தரீக்காக்களின் போராளிகள் இஸ்லாத்தின் எதிரிகளை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடினர்.
ஐரோப்பிய காலனிகளாக இந்தியா உள்ளிட்ட இஸ்லாமிய நிலப்பரப்புகள் மாற்றப்பட்டப் பிறகு தங்களை எதிர்க்கும் ஆயுதப் போராளிகளை அடக்கி கல்வி மூலம் அவர்களின் சிந்தனையை சிதைத்து அவர்களுக்கு சில புதிய எதிர்ப்பு முறைகளை பிரிட்டிஷார் கற்றுத்தந்தனர். அது தான் இன்றைய ஜனநாயக மரபுவழி அமைப்புகள் கட்சி கழகம் முன்னணி இயக்கம் சங்கம் பேரவை போன்றவை.
உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டம் போராட்டம் முற்றுகை பஸ் மற்றும் இரயில் மறியல் கோரிக்கை மனு கொடுப்பது இவையெல்லாம் பிரிட்டிஷார் லாவகமாக இந்திய தேசிய காங்கிரசை1885 இல் உருவாக்கி இந்திய சமூகத்திற்கு கற்றுத் தந்த அரச எதிர்ப்பு முறைகள்.
பிரிட்டிஷாரின் இந்த ஜனநாயக மரபு வழியை பயன்படுத்தி தான் இன்று மனித உரிமை மீறல்களை இஸ்லாத்தின் மீதான எதிர்ப்புகளை முஸ்லிம்கள் எதிர்கொண்டு வருகின்றோம். வேறு வழி இல்லை. இது தான் இப்போதைய யதார்த்தம். இதுவும் தற்காலிகம் தான்.
அரசு இயந்திரம் சட்ட அவைகள் போன்ற வலிமையான நிறுவனங்களின் மூலம் ஷரீஅத்திற்கு உம்மத்திற்கு எதிர்ப்பு ஏற்பட்டால் அரசமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியுள்ள விதி முறைகளைக் கொண்டு போராடலாம்.
ஆனால் கடந்த 30 ஆண்டுகளாக இஸ்லாத்தின் எதிரிகள் முஸ்லிம்களின் கவனத்தை அரசியல் ரீதியான போராட்டக் களத்தில் ஒருமுகப்படுத்தி விட்டு கல்வி கலாச்சாரம் சந்ததி உருவாக்கம் வாழ்சூழல் உணவு மருந்து பொருளீட்டல் போன்ற முஸ்லிம் சமூகம் மற்றும் அமைப்புகள் அதிகம் கவனம் செலுத்தாத, வாழ்க்கையை வடிவமைக்கும் மிக முக்கியமான துறைகளின் வழியாக சமூகத்தை சீரழித்து வருகின்றனர்.
ஃபாசிசம் வகை வகையான நவீன வழிமுறைகளைக் கொண்டு உம்மத்தை விளிம்பு நிலை சமூகத்தை சீரழிக்கத் துடிக்கிறது. கல்வியும் கலாச்சாரமுமே அவர்களின் முதன்மை இலக்கு.
சாதாரனமாக செய்தித்தாள் வாசிக்கும் வழக்கம் உள்ளவர் எவரும் இதை மறுக்க மாட்டார். அரசியல் என்ற ஆயுதம் மூலம் வரும் எதிர்ப்புகளை மட்டும் தான் கவனிக்க வேண்டும் அல்லது அது தான் அதி முக்கியமானது என்று உம்மத்தின் கவனத்தை ஒருமுகப்படுத்துவது ஆபத்தானது.
சிந்தனை முதிர்ச்சி இல்லாத செயல்.
எல்லா சூழ்ச்சிகளைக் காட்டிலும் அறிவு ரீதியான கலாச்சார ரீதியான சூழ்ச்சிகள் சமூகத்தின் அனைத்துப் பகுதிகளையும் சீரழித்து விடும். இஸ்லாத்திற்காக உரிமைகளுக்காக போராட்டக் களத்தில் உரக்க குரல் கொடுக்கும் இன்றைய முஸ்லிம் சகோதரனின் பிள்ளைகள் அல்லாஹ் ரசூல் தொடர்பு இல்லாத சிந்தனையை சிதைக்கும் பள்ளிக் கூடங்களில் படித்து வருகின்றனர். என்ன செய்யப் போகிறோம்…?
அவன் உட்கொள்ளும் உணவு குடிக்கும் நீர் சுவாசிக்கும் காற்று நஞ்சு கலக்கப்பட்டு அவனும் அவனது குடும்பமும் சமூகமும் நோயாளிகளாக மாற்றப்பட்டு வருகின்றனர். தீர்வு என்ன?
அவனது மனைவி அவனுக்கு வாரிசாக ஒரு பிள்ளை கூட பெற இயலாத நோஞ்சானாக மாற்றப்படுகிறாள். அவளின் கர்ப்பப்பையில் குறிவைத்து நீர்கட்டி(PCOD) உண்டாக்கப்படுகிறது. சந்ததி உருவாக்கம் சுருக்கப்படுகிறது. எப்படி தடுப்பது?
அரசியல் ரீதியான உணர்ச்சிப்பூர்வமான போராட்டங்கள் மூலம் குறிப்பிட்ட பிரச்சினைக்கு உடனடி தீர்வு கிடைக்கலாம். கிடைக்காமலும் போகலாம். ஆனால்…
கல்வி கலாச்சாரம் வாழ்சூழல் உணவு குடிநீர் வெறுப்பு விதைக்கப்பட்ட அண்டைவீடு இவற்றை முறையாக பாதுகாத்து அறிவார்ந்த அணுகுமுறைகளால் பராமரிக்கவில்லையென்றால் சந்ததி வீணாகிப் போகும். சமூகத்தை ஆணிவேரோடு சாய்த்துவிடும்.

அரசியல் போராட்டங்களுக்கு இடையில் இந்த அடிப்படையான துறைகளிலும் எச்சரிக்கை செலுத்த இளைஞர்களை பயிற்றுவிப்போம். அரசு இருந்தால் உம்மத்தின் அனைத்து துறைகளையும் பாதுகாக்கும். அரசு இல்லாததால் உம்மத்தில் விவரம் தெரிந்தவர்கள் தான் அனைத்திற்கும் பொறுப்பு.