மன்மோகன் சிங், முன்னாள் இந்திய பிரதமர்

”அரசு நிறுவனங்களின் கட்டாயப்படுத்தும் செயல்கள், இந்திய வர்த்தகர்களிடையே நம்பிக்கையில்லாத, விரும்பத்தகாத சூழலை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல் அயல்நாட்டு அரசுகள், தொழிலதிபர்களின் மனதிலும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தும். சிறிய, பெரிய வர்த்தகம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் சரி அரசு அதிகாரிகளின் நிர்ப்பந்தத்தை எதிர்கொள்ளுமாறு இருக்கக் கூடாது. இதனால், காலப்போக்கில் எதிர்மறையான சூழல் ஏற்படும். நேர்மையான வர்த்தகர்கள், உண்மையான தொழில்முனைவோர்கள் ஆகியோரை ஒருபோதும் ரணப்படுத்தும் வகையில், வேதனைப்படுத்தும் வகையில் வருவாய்த் துறையினர் நடந்து கொள்ளக்கூடாது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இன்று அரசுக்கும், வர்த்தக சமூதாயத்துக்கும் இருக்கும் நம்பிக்கை அழிந்துவிட்டது.