புதுச்சேரி பைத்துல் ஹிக்மா

ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியில்

தேசிய அரசியலமைப்பு தினம் (National Constitution Day)

புதுச்சேரி பைத்துல் ஹிக்மா வளாகத்தில் இயங்கிவரும் ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியில் தேசிய அரசியலமைப்பு தினம் (National Constitution Day) நடைபெற்றது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அரசியல் நிர்ணய சபையில் நடைபெற்ற முக்கிய விவாதங்களை ஆலிமியத் கல்வி பயிலும் மாணவர்கள் அப்படியே காட்சிப்படுத்தினர்.

மாதிரி நீதிமன்றமும் (Moot Court ) நடைபெற்றது.

மூன்று வழக்கறிஞர்கள் நீதிபதிகளாக அமர்ந்திருக்க மாணவர்கள் இரண்டு முக்கிய வழக்குகளை எடுத்து விவாதித்தனர்.

Aalim + Advocate என்பது தான் ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரி மாணவர்களின் இலக்கு.

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் முஸ்லிம் பிள்ளைகளுக்கு எதை வலியுறுத்தி வருகிறதோ அதன்படி உருவாக்கியும் வருகிறது.  அல்ஹம்துலில்லாஹ்.