

“ஆப்பிரிக்காவின் கொம்பு” என்றழைக்கப்படும் எரித்ரியா ஆஃப்ரிக்கக் கண்டத்திலுள்ள முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் ஒன்றாகும். அதேவேளை, அதன் எல்லைப் புறத்திலுள்ள எத்தியோப்பியாவும் 65 வீதத்திற்கும் அதிகமான முஸ்லிம்களைக் கொண்ட நாடாகும். ஆனால், கிறிஸ்தவர்களே அதன் ஆட்சியாளர்களாக இருந்து வருகின்றனர். நீண்டகாலமாக இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைத் தகராறும் பதட்டமும் நீடித்து வந்தது. கடந்த வாரம் எதியோப்பியா அவசர கால நிலைமையை நீக்கியதை அடுத்து நிலைமை சமாதானத்திற்கு சாதகமாகியுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இரு நாடுகளும் வரலாற்றில் அபீசீனியா என்றழைக்கப்பட்டது.
1993 இல் எத்தியோப்பியாவிலிருந்து எரித்திரியா பிரிந்து போனது. பல ஆண்டுகள், பல் உயிர்பலிகளுக்குப் பிறகு எத்தியோப்பிய அரசாங்கம் எரித்ரியா முன்வைத்த அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக் கொண்டு சமாதான ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான போரும் பதட்டமும் முடிவுக்கு வந்துள்ளது.
இரு நாடுகளின் மக்களுக்கு இடையே நல்ல உறவுகளை நிலைநாட்டவும், இரு நாடுகளின் சமாதானத்தை நிலைநாட்டவும் எந்த முன் நிபந்தனையும் இன்றி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த சர்வதேச எல்லைக் குழு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
“எங்கள் விருப்பம் வெறுப்புக்கு மாறாக அன்பு” நாங்கள் சகோதரர்கள் எங்களுக்கு எல்லைகள் இல்லை என்கிறார் எத்தியோப்பியாவின் 12 வது பிரதமர் அபி அஹ்மது



































