‘கல்வி மட்டுமே நம்மை சிறந்த மனிதர்களாக்கும். இதுவே, சமூக மற்றும் பாலின சமத்துவத்திற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கும் கருவியாகும்’’ என நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியாசென் கூறுகிறார். அந்தவகையில் சமூக சமத்துவத்தினை மீட்டெக்கும் பொருட்டு கல்விக்காக பல்வேறு முன்னெடுப்புகளை ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணாக்கர்களிடையே அரசு மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, பள்ளிகளில் ஐ-டெக் லேப் முதல் ஸ்மார்ட் கிளாஸ் வரை அரசின் கட்டமைப்பால் மாணவர்களின் எதிர்காலம் அஸ்திவாரமிட்டு வருகின்றன. அதற்கு உதாரணமாகத்தான், நடந்து முடிந்த பொதுத்தேர்வில் பழங்குடியின மாணாக்கர்கள் 95 சதவீதம் வரை தேர்ச்சியடைந்து சாதனை படைத்துள்ளனர்.

































