பொறியாளர் சுந்தர் ராஜன், பூவுலகின் நண்பர்கள்

விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து கொச்சி நோக்கி வந்துகொண்டிருந்த கப்பல் திடீரென்று நிலைதவறி கடலில் மூழ்கி அதில் இருந்த 600க்கும் மேற்பட்ட சரக்கு பெட்டகங்களும் மூழ்கி/கரை ஒதுங்கி வருகின்றன. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர், விழிஞ்சம் துறைமுகம் தொடங்க அனுமதி கேட்டு நடைபெற்ற மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் மீனவர் ஒருவர் கேட்ட கேள்வி, “இந்த துறைமுகம் வரும் ஒரு கப்பல் மூழ்கி அதில் உள்ள “மிகவும் அபாயகரமான பொருட்கள் கரை ஒதுங்கினால், எங்கள் நிலை என்னவாகும்?” இப்போது விபத்து நடந்துள்ளது. அதன் விளைவுகள் என்ன? என்பது விடை தெரியாத வினா. மீனவர்கள், சூழலியல் செயல்பாட்டாளர்கள் போன்றோர் சொல்வதை கொஞ்சம் காது கொடுத்து கேளுங்கள். இந்த விபத்தினால் இன்னொரு ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. சரக்குப் பெட்டகங்களில் இருந்த சிறிய அளவிலான ப்ளாஸ்டிக் பொருட்களை கடல்வாழ் உயிரினங்கள் விழுங்கக்கூடும். இது கடற்கரைக்கும் மிக ஆபத்தை விளைவிக்கும். தமிழ்நாடு அரசு உரிய கவனம் செலுத்தி இப்பேரழிவை விரைந்துத் தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.