உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய்!

அரசியல் சாசனத்தை திருத்துவதற்கான சுதந்திரம் நாடாளுமன்றத்துக்கு மட்டும் வழங்கப்பட்டால், தன்னுடைய சித்தாந்தத்தை அமல் செய்ய முடியாமல் திணறும் ஓர் அரசியல் கட்சி, தன் சிந்தாந்தத்துக்கு ஏற்ப அரசியல் சாசனத்தை திருத்திக் கொள்ளும் ஆபத்து நேரும் என டாக்டர் அம்பேத்கர் எச்சரித்திருக்கிறார். மாறி வரும் சூழலுக்கு ஏற்ப அரசியல் சாசனம் திருத்தப்பட வேண்டுமென்றாலும் கூட, அந்த உரிமையை பெரும்பான்மையின் விருப்பத்துக்கு மட்டுமென விட்டு விட முடியாது என்றார் அம்பேத்கர்.