“உண்மையில், மோடி அரசிடம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான தொலைநோக்கு பார்வையோ, திட்டங்களோ இல்லை. உண்மையான பிரச்சினைகளில் பொதுமக்களின் கவனத்தை திசைத் திருப்புவது, பிரிவினைவாத கொள்கை போன்றவற்றிலேயே நிபுணத்துவம் பெற்றுள்ளது. அவர்களிடம் இருக்கும் கொள்கைகள், பொய் பிரச்சாரங்கள், வெறுப்பு அரசியலே அவர்களின் கொள்கைகளாக உள்ளது.”
- ஜெய்ராம் ரமேஷ், ஊடகப் பிரிவு பொதுச் செயலாளர், காங்கிரஸ் கட்சி
“அவர் எங்கிருந்தாலும், ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று முழு தேசமும் அவருக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். முஸ்லிம்கள் அல்லது காஷ்மீரிகளுக்கு எதிராக யாரும் செயல்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு அமைதி வேண்டும், அமைதி மட்டுமே வேண்டும். நிச்சயமாக, எங்களுக்கு நீதி வேண்டும்,”