“உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில் இந்தியா 151வது இடத்திற்கு சரிந்துள்ளது ஏன்? ஏனெனில் கேள்விகளுக்கு பதில் அளிக்க பாஜக ஆட்சி அஞ்சுகிறது. செய்தி நிறுவனங்களில் ரெய்டு நடத்துகிறது. பத்திரிகையாளர்களை சிறையில் அடைக்கிறது. மேலும் ஊழல், மனித உரிமை மீறல்கள் மற்றும் அதன் மறைமுக திட்டங்களை அம்பலப்படுத்துபவர்களின் குரல்களை பாஜக அரசு ஒடுக்குகிறது.அச்சமின்றி செயல்படும் பத்திரிகைகள் இல்லை என்றால் ஜனநாயகம் இருளில் மாண்டுவிடும் என்பதை இந்த உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொள்வோம். ஊடகங்களுக்கு மட்டும் அல்ல, ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்மையை அறிய கேள்வி கேட்க, அதிகாரத்திற்கு எதிராக பேசுவதற்கான உரிமைக்காக நாம் பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும,”