தஞ்சை மாவட்டம் மேலக்காவேரியில் MISWA அமைப்பின் சார்பில் கல்வி விழிப்புணர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி 25-04-2025 அன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சமூகநீதி முரசு மாத இதழின் ஆசிரியர் CMN சலீம் கலந்துகொண்டு மாணவர்களுக்கு வழிகாட்டினார். தனது உரையில்… “அரபுநாடுகளில் பொருளீட்டும் வாழ்க்கைமுறையைக் கொண்ட இன்றைய பெருவாரியான டெல்டா மாவட்ட முஸ்லிம்களின் அடுத்த தலைமுறை அரபுநாடுகளின் அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்களாக உயர்வு பெறவேண்டும் என்பதை இந்நிகழ்ச்சியின் முதன்மை செய்தி என்பதை சொன்னார்.

ஜமாத்தார்கள் உலமாக்கள் சமுதாய அமைப்புகள் பெற்றோர்கள் முயற்சி செய்தால் அரபுகளே வியக்கும் அளவுக்கான மாற்றங்களை இன்ஷா அல்லாஹ் 10 -15 ஆண்டுகளில் கொண்டு வந்துவிட முடியும்.
வாழ்வியல் சிரமங்களை சிறிது காலத்திற்கு தாங்கிக் கொண்டு அல்குர்ஆன் முன்னிறுத்தும் ஆராய்ச்சி ஆராய்ச்சி ஆராய்ச்சி என்று பிள்ளைகளிடம் இடைவிடாது சொல்லிக் கொண்டிருந்தால் முஸ்லிம் சமூகம் அறிவாற்றல்மிக்கவர்களாக பொருளாதார வலிமையுடையவர்களாக சமூக அரசியல் அதிகாரங்களைக் கொண்டவர்களாக வெகுவிரைவில் உருவாகிவிடும்.
எல்லாவற்றுக்கும் மேலாக பூமியை பாதுகாக்கும் அல்லாஹ்வின் பிரதிநிதிகளாக (கலீஃபாக்களாக) உருவாகி நிற்பார்கள்.



































