– ராகுல் காந்தி, எதிர் கட்சித்தலைவர்

“சமீபத்தில் டெல்லியில் உள்ள ஒரு மளிகை கடைக்கு சென்றேன். மளிகைக் கடைகள் என்பது பொருட்களை விற்கும் இடம் மட்டுமல்ல. அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுடன் உணர்ச்சிபூர்வமான மற்றும் கலாச்சார தொடர்புகளைக் கொண்டுள்ளனர். ஆனால், வணிகத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் காரணமாக, ஆயிரக்கணக்கான மளிகைக் கடைகள் மூடப்படுகின்றன. இது கவலையளிக்கிறது. எனவே நாம் ஒரு சமநிலையை அடைய வேண்டும். தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் அதே நேரத்தில், அவற்றால் மிகவும் தீவிரமாக பாதிக்கப்படுபவர்களுக்கு ஒரு பாதுகாப்பை வழங்க வேண்டும். உலகப் போக்குகளுக்கு ஏற்ப நாம் முன்னேறும்போது, சிறு வணிகர்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம்” “ஒரு காலத்தில் ரூ.40-க்கு விற்கப்பட்ட பூண்டு, இன்று ரூ.400-க்கு விற்கப்படுகிறது. உயரும் பணவீக்கம் ஏழை, எளிய மக்களின் சமையலறை பட்ஜெட்டை கெடுத்துவிட்டது. ஆனால், கும்பகர்ணன் போல் அரசு தூங்குகிறது.”