இராமநாதபுரம், பெருங்குளம் அல் கலம் இன்டர்நேஷனல் பள்ளியில் கல்வி விழிப்புணர்வு மாநாடு 28.12.2024 அன்று நடைபெற்றது. பள்ளியின் நிறுவனர் ஆஸ்திரேலிய நாட்டின் கிராண்ட் முஃப்தி மெளலானா அப்துல் குத்தூஸ் அஸ்ஹரி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, சமூகநீதி முரசு ஆசிரியர் CMN சலீம், பேராசிரியர் ஹாஜா கனி ஆகியோர் நானும் கலந்து கொண்டனர்.
உயர்ந்த இலக்குடன் இயங்கி வரும் இந்த இன்டர்நேஷனல் பள்ளியை முகவைப் பகுதி மக்கள் மிகச்சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
