– தேர்தல் ஆணைய இணையதளம்

கடந்த 2023-24 நிதியாண்டில் தனி நபர்கள், அறக்கட்டளைகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பாஜக ரூ.2,244 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இவை ரூ.20,000-க்கும் மேல் பெறப்பட்ட நன்கொடை ஆகும். இது முந்தைய 2022-23 நிதியாண்டைப் போல 3 மடங்குக்கும் அதிகம். இதே காலத்தில் மற்றொரு தேசிய கட்சியான காங்கிரஸுக்கு வெறும் ரூ.288.9 கோடி மட்டுமே நன்கொடை கிடைத்துள்ளது. முந்தைய ஆண்டில் இது ரூ.79.9 கோடியாக இருந்தது. அதிகபட்சமாக புருடென்ட் தேர்தல் அறக்கட்டளை பாஜகவுக்கு ரூ.723.6 கோடியும், காங்கிரஸுக்கு ரூ.156.4 கோடியும் வழங்கி உள்ளது. அதாவது பாஜகவின் ஒட்டுமொத்த நன்கொடையில் 3-ல் ஒரு பங்கும், காங்கிரஸின் நன்கொடையில் 50 சதவீதமும் இந்த அறக்கட்டளையிடமிருந்து கிடைத்துள்ளன.