– ஜக்தீப் தன்கர்,  குடியரசு துணைத் தலைவர்

“இன்று நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு, உள்ளிருந்தும் வெளியில் இருந்தும் அடிக்கடி அர்த்தமுள்ள உரையாடல்கள் மற்றும் உரைகள் நிகழ்வது குறைந்துபோனதே காரணம். உரைகள் மற்றும் அர்த்தமுள்ள உரையாடல்கள் இரண்டும் ஜனநாயகத்தின் விலைமதிப்பற்ற நகைகள். உரைகளும், தொடர்பும் ஒருவருக்கொருவரை இணைக்கின்றன. நல்லிணக்கமே வெற்றிக்கு முக்கியம்.

எந்தவொரு ஜனநாயகத்திலும் உயர் மதிப்பீடுகள் முக்கியமானவை. அது உரைகள் மற்றும் உரையாடலின் நுட்பமான சமநிலையை மையமாகக் கொண்டிருக்க வேண்டும். 

நம்மில் உள்ள நான் என்னும் தன்முனைப்பு அடக்க முடியாதது. அதனைக் கட்டுப்படுத்த நாம் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். தன்முனைப்பு யாருக்கும் பயனளிக்காது. அதேநேரத்தில்,  அதை வைத்திருக்கும் நபரை அது சேதப்படுத்துகிறது. சுய பரிசோதனை மிகவும் முக்கியமானது.