– மவுலானா முப்தி சஹாபுத்தீன் ரிஜ்வீ, அகில இந்திய முஸ்லிம் ஜமாத்தின் தேசியத் தலைவர்சொன்னார்கள்

சில சமூக விரோதிகள் நாட்டின் ஒவ்வொரு மசூதிகளின் கீழே கோயில்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். இதன் மீதான வழக்குகளும் நீதிமன்றங்களில் குவியத் துவங்கி விட்டன. நல்லவேளையாக இவற்றின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதற்காக இறைவனுக்கு நன்றி. நாட்டின் ஒவ்வொரு கிராமங்கள், நகரங்களின் இந்து தலைவர்களாகி விட போட்டி நடைபெறுகிறது.

இதுபோன்றவர்களால் நம் நாட்டின் அமைதியும், மதநல்லிணக்கமும் குலைக்கப்படுகிறது. இந்து – முஸ்லிம்களுக்கு இடையே உள்ள சகோதரத்துவத்தின் நிலையும் பாதிக்கப்படுகிறது.

இதன் மீது ஆர்எஸ்எஸ் தலைவர் ஒரு கருத்தைக் கூறியுள்ளார். கோயில் – மசூதி விவகாரங்களை இந்து தலைவர்களாவதற்காக யாரும் எழுப்பக் கூடாது எனத் தெரிவித்துள்ளார். இதை நீதிமன்றங்களில் இந்த வழக்குகளை நடத்தும் விஷ்ணு சங்கர் ஜெயின், ஹரி சங்கர் ஜெயின் மற்றும் ராக்கி சிங் உள்ளிட்டோர் புரிந்து கொள்வது அவசியம். இனி அவர்கள் இந்து – முஸ்லிம் விவகாரங்களை முடிவிற்கு கொண்டு வர வேண்டும். அனைவரும் இணைந்து நாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபடுவது இப்போதைய தேவை ஆகும்.