“எங்கும் இரண்டு அதிகார மையங்கள் இருப்பது பேரழிவுக்கு வித்திட்டுவிடும். பல அதிகார மையங்கள் இருந்தால் எந்த அமைப்பும் நன்றாக வேலை செய்யாது. நமது விளையாட்டு அணிக்கு ஒரு கேப்டன் இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஓர் அணிக்கு இரண்டு கேப்டன்கள் இருப்பதில்லை. அதேபோல், இந்திய அரசாங்கத்தில் இரண்டு பிரதமர்களோ அல்லது இரண்டு அதிகார மையங்களோ இல்லை. மாநிலங்களிலும்கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர்தான் முதல்வராக இருக்கிறார். இரட்டை அதிகார மைய அமைப்பு ஒருபோதும் வேலை செய்யப் போவதில்லை.