“2012ல் நிர்பயா துயரத்துக்கு பிறகு, இப்போது 2024ஆம் ஆண்டிலும் கூட கொல்கத்தா மருத்துவ மாணவிக்கு இப்படி ஒரு துயரம் நடந்திருக்கிறது. 12 ஆண்டுகள் கழித்தும் கூட எதுவுமே மாறியதாக தெரியவில்லை. தினமும் செய்தித்தாள்களை எடுத்தாலே அதில் ஏதாவது ஒரு பெண் தாக்கப்பட்டதாக செய்தி இடம்பெறுகிறது. அது ஒரு கல்லூரி மாணவியாகவோ, ஒரு குழந்தையாகவோ அல்லது நடுத்தர வயது பெண்ணாகவோ இருக்கின்றனர். இந்திய ஆண்களிடம் ஏதோ ஒரு பிரச்சினை இருக்கிறது. அதை நாம் கண்டறிய வேண்டும்.அதற்கு ஏதேனும் தீர்வு நடைமுறைப்படுத்தப்படும் என்று நான் நம்புகிறேன். ஏனென்றால் நம்மால் தொடர்ந்து துயத்துக்கு மேல் துயரத்தை அனுமதிக்க முடியாது. அமைப்புரீதியான மாற்றம் தேவை.