மதுரை சல்மான் ஃபாரிஸ் பள்ளிவாசலில் இரண்டுநாள் கல்வி வரலாற்றுப் பயிலரங்கம்

தமிழக முஸ்லிம்களின் கல்விப் பாதையை மீண்டும் ஹலாலான பாதைக்கு திருப்பிடும் மகத்தான பணியை செய்து வரும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் மதுரை மாவட்டம் சார்பில் மதுரை சல்மான் ஃபாரிஸ் பள்ளிவாசலில் இரண்டுநாள் கல்வி வரலாற்றுப் பயிலரங்கம் நடைபெற்றது.அறிவுச்சமூகத்தின் அங்கத்தினர்களான ஆலிம்கள்,ஆசிரியைகள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள், கல்வி நிறுவனங்களை நடத்துபவர்கள், அரபிக்கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் என உம்மத்தின் அறிவுத்துறையில் ஆர்வமுள்ள பலர் பல மாவட்டங்களிலிருந்து கலந்து கொண்டனர்.மதுரை ஒத்தக்கடை நாஃபிஉல் உலூம் அரபிக்கல்லூரி பேராசிரியர் சிந்தனையாளர் மெளலவி முஸ்தஃபா காஸிமி அவர்களின் உளத்தூய்மை வகுப்புடன் பயிலரங்கம் துவங்கியது.இன்றைய இந்திய கல்விமுறை குறித்து சபரிமாலா செயகாந்தன் அவர்களும், இந்திய வேளாண்மை சிக்கல் குறித்து வேளாண் விஞ்ஞானி பாமையன் அவர்களும்,உணவுச் சிக்கல் குறித்து சகோ. பைசல் அவர்களும், எது கல்வி என்ற தலைப்பில் பேராசிரியர் அப்துல் ரஹ்மான் அவர்களும்,முஸ்லிம்களின் உயர்கல்வி இலக்கு குறித்து பேராசிரியர் இஸ்மாயில் அவர்களும் வகுப்பெடுத்தனர்.முஸ்லிம் கல்வி இயக்கத்தின் மதுரை மாவட்ட பொறுப்பாளர்கள் பயிலரங்கத்தை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.கல்வியாளர் சபரிமாலா செயகாந்தன் அவர்களை பள்ளிவாசல் மேல்தளத்தில் உரை நிகழ்த்த அனுமதித்த சல்மான் ஃபாரிஸ் பள்ளியின் நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் உரித்தாகுக.