நம்மில் பலருக்கு புரிவதில்லை !!!

பிரான்ஸின் தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கும் அதேவேளை : ஈராக் ஆக்கிரமிப்பின் போது பிரான்ஸ் ஜார்ஜ் புஷ்ஷுக்கு பின்னால் ஓரளவு அணிவகுத்திருந்ததைக் குறிப்பிட்டு வலது, மற்றும் இடதுசாரிகள் வெளிநாட்டு ”அரசியல் இஸ்லாம்” மீதான போரில் விதைத்ததை உள்நாட்டு ”அரசியல் இஸ்லாம்” மீதான போரில் அறுவடை செய்கின்றனர் என பிரான்ஸ் நாட்டில் அண்மையில் நடைபெற்ற தாக்குதல் தொடர்ப்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் (விவீநீலீமீறீ ளிஸீயீக்ஷீணீஹ்) மைக்கேல் ஆன்பிரய்.பிரான்சின் வீ-ஜிஙறீங என்ற முன்னணி தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ”இஸ்லாமிய தேசம்” மீது குண்டு வீசுவது பிரஞ்சு புறநகர் பகுதிகளில் இருக்கும் அதன் இளம் போராளிகளை அமைதியடையச்செய்யாது எனவும் அவர் எச்சரித்துள்ளார். அதே நேரத்தில் நான் ”இஸ்லாமிய தேசத்தை” நியாயப்படுத்தவில்லை,”இஸ்லாமிய தேசம்” மீது குண்டு வீசுவது தவிர்ந்த வேறு ஒரு தீர்வு குறித்து நாங்கள் கலந்தாலோசிக்கூடிய தூதரகங்கள் அல்லது நாடுகள் இல்லையா ? என அவர் கேள்வியும் எழுப்பியுள்ளார்.உலகம் முழுவதிலும் முஸ்லிம் மக்கள் மீது குண்டு வீசுவதை நிறுத்த வேண்டும் என அவர் முன்னர் கோரிக்கை விடுத்தார். பிரான்சின் பிரபல எழுத்தாளரும் தத்துவவியலாளருமான மைக்கேல் ஆன்பிரய். இவர் 50 க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார்.